VASANTHATHIL VOR NAAL MANAVARAI ORAM
VASANTHATHIL VOR NAAL MANAVARAI ORAM வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடல் எஸ். ராமகிருஷ்ணன் திடீரென சில நாட்கள் காலையில் மனதில் ஒரு பாட்டு ஒடத்துவங்கிவிடுகிறது. அதை உடனடியாகக் கேட்க வேண்டும் என்ற உத்வேகம் உருவாகிறது. அப்படி இன்று காலை, வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடல் மனதில் ஒடி மறைந்தது. அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினேன். பாட்டு முடிந்து போகக்கூடாது என்பது போன்ற மனநிலை உருவானது. திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அது எனது வழக்கம். சில நாட்கள் ஒரே பாடலை நாற்பது ஐம்பது முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள் மறைந்து. குரல் மறைந்து, வாசனை புகுவது போல பாடல் உடலுக்குள் சேகரமாகி விடும் வரை கேட்பேன். எனது சேமிப்பில் ஏராளமான சினிமா பாடல்கள் , மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை, மற்றும் பழைய இந்திப் பாடல்களை வைத்திருக்கிறேன். இசையமைப்பாளர்கள். பாடகர்கள் வரிசையாக ஆவணப்படுத்தியுள்ளேன். ஆகவே பாடலைத் தேடுவது எளிது. சில பாடல்கள் சேமிப்பில் இல்லாத போது உடனடியாக இணையத்தில் தேடிக் கேட்பது வழக்கம். சினிமா பாடல்களைக் கேட்பதில் உள்ள இன்பம் பார்ப்பதில் கிடையாது. ப...