Posts

Showing posts with the label CRAZY

CRAZY MOHAN , A LEGEND BORN 1952 OCTOBER 16

Image
CRAZY MOHAN , A LEGEND BORN 1952 OCTOBER 16 உங்கள் ஹனிமூன் அனுபவத்தைப் பற்றி சொல்ல முடியுமா? இப்பல்லாம் பசங்க ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து, பாலித் தீவு, ஆஸ்திரேலியான்னு சினிமா ஷூட்டிங் மாதிரி போறாங்க. 33 வருசத்துக்கு முன்னால் ஹனிமூன் என்றால் பெங்களூர்தான். எங்க தாத்தா சொன்னார் ‘ஹனிமூனுக்கு தனியா போனாலும் பரவால்ல. இவன் பொண்டாட்டியை அழைச்சுண்டு போறேங்கறான். காலம் கெட்டுக் கிடக்கு. துணைக்கு நாலு பேரைக்கூட அனுப்புடா ராஜாமணி’ (எங்க அப்பா). தாத்தா நாலு அடி பாஞ்சா எங்கப்பா நானூறு அடி பாய்வார். ரயில்ல என்கூட ஒரு பெரிய கும்பலே வந்தது. ஏ-1 கோச்சில் நான். ஏ-3 கோச்சில் என் மனைவி. மத்தியில் ஏ-2 கோச்சில் Z-செக்யூரிடி மாதிரி துணைக்கு வந்த உறவுப் பட்டாளம். ‘உன் பொண்டாட்டிக்கிட்ட ஏதாச்சும் பேசணும்னா கூச்சப்படாம என்கிட்டே சொல்லு. நான் அவள்கிட்ட சொல்லிடறேன்’ என்பார் பெரியப்பா. நான் கடுப்பாக ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல, ‘நீ என்கிட்ட சொன்னதை உன் பொண்டாட்டிகிட்டே அப்படியே சொல்றேன்’ என்றார் பெரியப்பா. பெங்களூர் ஹோட்டல் உட்லண்ட்ஸில் என் அறைக்கு அடுத்த அறை எங்க பெரியப்பா அறை. புது மனைவியோடு ப...

CRAZY MOHAN - TREASURE OF TAMIL CINEMA/ DRAMA

Image
CRAZY MOHAN - TREASURE OF TAMIL CINEMA/ DRAMA 40 படங்களுக்கு மேல் கதை, வசனம், க்ரேஸி மோகன் “நீங்க ரொம்ப நாட்டி” என்பார் குஷ்பூ. “நீங்க என்ன கம்மி நாட்டியா?” என்பார் பதிலுக்குக் கமல். படம், ‘மைக்கேல் மதன காமராஜன்’. இப்படி, யதார்த்தமான, சந்தேகிக்க முடியாத இடங்களில் கிச்சுகிச்சுவை நுழைத்துத் திரைப்படங்களைச் சிரிப்புக் கோலாகலம் ஆக்கியவர் க்ரேஸி மோகன். இவர் எழுதிய ‘க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் பெற்ற வெற்றி, மோகனை ‘க்ரேஸி’ ஆக்கியது. ‘சதிலீலாவதி’, ‘பம்மல் கே. சம்மந்தம்’ என்று எந்தப் படங்களிலெல்லாம் வயிறுவலிக்கச் சிரித்தோமோ, அவற்றுக்கெல்லாம் வசனம் க்ரேஸிதான். 1979ல், சரியாக 30 வருடங்களுக்கு முன், சொந்த நாடகக் குழுவான ‘க்ரேஸி கிரியேஷன்ஸ்’ தொடங்கினார். தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நாடகம் போட்டுவிட்டார். 6000 நாடகக் காட்சிகள், டி.வி. சீரியல் 1500 எபிசோடுகள், 40 படங்களுக்கு மேல் கதை, வசனம், பத்திரிகைகளில் சிரிப்புக் கதைகள் என்று இடைவிடாத படைப்புகள், பாராட்டுகள், விருதுகள். இது தவிரவும் நேரம் கிடைத்த போது கவிதை, ஓவியம்! நமது நகைச்சுவைச் சிறப்பிதழுக்கு நேர்காணல் செய்ய...