G.N.BALASUBRAMANIAM ,MUSICIAN/ ACTOR BORN 1910 JANUARY 6 - 1965 MAY 1
G.N.BALASUBRAMANIAM ,MUSICIAN/ ACTOR BORN 1910 JANUARY 6 - 1965 MAY 1 .ஜி. என். பாலசுப்பிரமணியம் (ஜனவரி 6, 1910 - மே 1, 1965), ஒரு தலை சிறந்த கருநாடக இசைப் பாடகர். "ஜி.என்.பி" என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர். இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை "ஜி.என்.பி பாணி" என்று கருநாடக இசை உலகத்தில் அடையாளப்படுத்துகின்றனர் வாழ்க்கைக் குறிப்பு அவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறை அருகே அமைந்துள்ள கூடலூர் என்னும் ஊரில் ஜி.வி.நாராயணசாமி ஐயர், விசாலம் அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையார் ஜி. வி. நாராயணசாமி ஐயர் சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சிறந்த இசை ரசிகரான அவர் ஒரு சபையை நடத்தி வந்தார். அதனால் சிறு வயதிலிருந்தே ஜி.என்.பி.க்கு பல முன்னணி இசைக் கலைஞர்களுடன் பழகி அவர்களின் இசையை அருகிலிருந்து கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. ஆங்கில இல...