WORLD NURSES DAY FLORENCE NIGHTINGALE - THE LADY WITH THE LAMP BORN 1820 MAY 12 - AUGUST 13,1910
WORLD NURSES DAY FLORENCE NIGHTINGALE - THE LADY WITH THE LAMP BORN 1820 MAY 12 - AUGUST 13,1910 புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்புக்கள் ஆரம்பகால வாழ்க்கை பிரிட்டிஷ் செல்வம் பொருந்திய உயர்குடிக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார்.[1] இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1889-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794- 1875). வில்லியம் நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர். இவரது தாயாரின் மாமனான பீட்டர் நைட்டிங்கேல் என்பவருடைய மரண சாசனத்தின் மூலம் அவருடைய சொத்துக்கள் வில்லியத்துக்க...