Posts

Showing posts with the label MARUTHU PANDIYARS

MARUTHU PANDIYARS HISTORY AND JAMBU THEEVU DECLARATION

Image
  MARUTHU PANDIYARS HISTORY AND  JAMBU THEEVU DECLARATION மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு!  “ஜம்புத்தீவு பிரகடன” அறிக்கை 1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் “முதல் இந்திய விடுதலைப் போர்” என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது. இந்து இசுலாமிய  மதச் சாயலோடு வெளிப்பட்ட போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை . தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும் இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப்போனது.  ஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்படட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், கட்டபொம்மன், ஹைதர்அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர்.  குறிப்பாக . மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர...