Ильяс : இல்யாஸ்
Ильяс : இல்யாஸ் ஒரு காலத்தில் இல்யாஸ் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை அவனுக்கு ஒரு நல்ல பெண்ணை மணமுடித்துக் கொடுத்த ஓர் ஆண்டுக்குப் பின்னர் மறைந்து போனார், சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு சொத்தினையும் விட்டுச் செல்லவில்லை. இல்யாஸ் அப்போது ஏழு குதிரைகளையும், இரண்டு மாடுகளையும், சில ஆடுகளையும் வைத்திருந்தான். அவன் நல்ல நிர்வாகி விரைவில் தனது சொத்து பத்தினை அதிகரித்துக் கொண்டான். அவனும் அவனது மனைவியும் விடியலிலிருந்து இரவுவரை கடுமையாக உழைத்தார்கள்; மற்றெல்லாரும் விழிப்பதற்கும் முன்னர் எழுந்து மற்றவர்கள் எல்லாம் தூங்கிய பின்னர் தூங்கினர்; அவனது சொத்து ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே இருந்தது. இவ்வாறு வாழ்ந்ததால், இல்யாஸ் கொஞ்சம் கொஞ்சமாக சொத்தினைப் பெருக்கிக் கொண்டான். அவனது முப்பத்தி ஐந்தாவது வயதில் அவனிடம் 200 குதிரைகளும், 150 கால் நடைகளும் 1200 ஆடுகளும் இருந்தன. ஆண் வேலைக்காரர்கள் கால் நடை மந்தைகளை மேய்த்தனர், பெண் வேலைக்காரர்கள் பால் கறந்து தயிறும் மோரும் வெண்ணெயும் நெய்யும் செய்தனர். இப்போது இல்யாஸ் அபரிமிதமான செல்வத்தைக் கொண்டிருந்தான், அவனது மாகாணத்தில்...