Posts

Showing posts with the label TEMPLE

STONE MANDAPAM OF MADURAI MADANA GOPALASAMY TEMPLE IN AMERICA ,PHILADELPHIA,1912

Image
  STONE MANDAPAM OF MADURAI , MADANA GOPALASAMY TEMPLE  IN AMERICA ,PHILADELPHIA1912 சாமி சிலைகள் மட்டுமல்ல, #கோவில் #மண்டபமே வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்ட உண்மை தெரியுமா உங்களுக்கு? ஆச்சர்யமாக இருக்கலாம். இது தமிழகத்தில் அதுவும் கோவில் நகரமாகச் சொல்லப்படுகிற மதுரையில் நடந்திருக்கிறது. அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்குப் பிறகு தான் எல்லா திருவிளையாடல்களும் நடந்தன என்று வாதிடுகிறவர்கள்-கோவில்கள் தனியார் வசம் இருந்தபோது எப்படி இருந்தன என்பதையும் சற்றுக் கவனிக்கலாம். வாங்க…பார்க்கலாம். மதுரை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது மதனகோபால சுவாமி திருக்கோவில். நாநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலில் கலையழகு ததும்பும் சிற்பங்கள்; உள்ளே நுழைந்ததும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வலதுபுறம் வெற்றிடமாய் கிடக்கிறது. அதற்கருகில் சமீபகாலத்திய சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதே வெட்டவெளியை முன்பு அபூர்வ வனப்பால் நிரப்பியிருந்தது, நுணுக்கமான அழகு மிளிர்ந்த அற்புதமான கல் மண்டபம். அந்த அபூர்வம் இப்போது எங்கே போனது? பிரிட்டிஷாரின் ஆட்சி நடத்த காலம். சிற்பங்களுக்குப் பெயர்போன மதுரை...

AMIRDESHWARAR, TEMPLE , AMIRTHAPURAM ,KARNATAKA

Image
  AMIRDESHWARAR TEMPLE , AMIRTHAP URAM KARNATAKA அமிர்தேஸ்வரர் கோயில்.. இக்கோயில்,கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன்கூடிய இக் கோயில் போசளர் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது. இக்கோயில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம் ஒன்றினூடாகத் திறந்த பெரிய மண்டபத்துடன் இணைக்கப்பட்டள்ளது. நடுத்தர அளவினதாகிய இக் கட்டிடம், மண்டப அமைப்பிலும் அளவிலும், பேளவாடியில் உள்ள விஜயநகரக் கோயிலுடன் ஒப்பிடத் தக்கதாக உள்ளது. திறந்த மண்டபம் 29 தூண் இடைவெளிகளையும், மூடிய பண்டபம் 9 தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. சுவரின் அடிப்பகுதி பழைய ...

AKSARDHAM ,NEW DELHI , A DIVINE TEMPLE OF VAISHNAVA

Image
  AKSARDHAM ,NEW DELHI , A DIVINE TEMPLE OF VAISHNAVA அக்சரதாம் (குசராத்தி: દિલ્હી અક્ષરધામ, தேவனாகிரி: दिल्ली अक्षरधाम) இந்தியாவில் தில்லியிலுள்ள ஓர் இந்துக் கோயில் வளாகமாகும்.[1] இது தில்லி அக்சர்தாம் அல்லது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்றும் குறிப்பிடப்படுகிறது, இவ்வளாகமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்திய பண்பாட்டையும் இந்து பண்பாட்டையும் கட்டடக்கலையையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்துகிறது. இக்கட்டடத்துக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயணன் சான்சுதாவின் மதத் தலைவர் பிராமுக் சுவாமி மகாராஜ் உயிர்ப்பூட்டியவராவார். இவரின் 3,000 தொண்டர்களும் 7,000 கைவினைத்தொழிலாளர்களும் அக்சர்தாம் கட்ட உதவினார்கள்.[1][2] தில்லிக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளிலும் கிட்டத்தட்ட 70 சதவீதமானவர்களைக் கவருகின்ற இக்கோயில்,[3][4] 6 நவம்பர் 2005 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[1] 2010 இல் காமன்வெல்த்து விளையாட்டிற்காக முன்மொழியப்பட்ட கிராமத்துக்கு அருகே யமுனா ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது.[5] வளாகத்தின் மையத்திலுள்ள நினைவுச்சின்னம் வாஸ்து சாத்திரத்தையும் பஞ்ச...