Showing posts with label rajinikanth. Show all posts
Showing posts with label rajinikanth. Show all posts

Saturday, 3 July 2021

RAJINIKANTH HISTORY / BIOGRAPHY

 



RAJINIKANTH HISTORY / BIOGRAPHY



சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி ரசிகர் ஒருவர், சூப்பர் ஸ்டாரை உங்களுக்கு என்ன தெரியும் என்று நம்மை பார்த்து நக்கலடிக்க, அடேய் நாங்க பார்த்த ரஜினியே வேறடா என்று சொல்லி பிறந்தநாளுக்கு என இந்த பதிவை போட்டோம். 

 அண்ணாமலை, பாட்சா ரஜினியை தெரியும், இதெல்லாம் உனக்கு தெரியுமாடா என்று பொங்கியதின் விளைவு இந்த பதிவு..

படிச்சு பாக்கணும் என்பது உங்கள் தலையெழுத்து என்றால்  படியுங்கள்.. படிக்க ஆரம்பிக்கும்போது ஷேவ் பண்ணியிருந்தால் முடிக்கும் போது கண்டிப்பாக தாடி வளர்ந்திருக்கும்.

இன்றைக்கு ஒரு படத்தின் பட்ஜெட்டே 540 கோடி ரூபாய்..

தமிழ்ச்சினிமாவில் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாய் முப்பதாண்டுகளுக்கு வெளிவந்த ஒட்டு மொத்த படங்களின் பட்ஜெட்டை ஒன்றாக சேர்ந்தால்கூட மேலே சொன்ன 2.0 பட்ஜெட்டுக்கு வராது..

1960 களின் இறுதியில் பெங்களுரில் பள்ளிப்படிப்பு முடிந்து மேற்கொண்டு படிக்க விரும்பாமல், சுயமாய் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியான மனநிலை…

மூட்டைக்கு 10 பைசா கூலி என அரிசி மூட்டை தூக்கியும், ஆபிஸ் பாயாகவும் வேலைபார்த்த ஒரு சாதாரண இளைஞன்தான் இன்றைக்கு 540 கோடி பட்ஜெட் பின்னணிக்கு கதாநாயகன் என்றால் நம்புவது சிரமம்தான்..

பாகவதர், சின்னப்பா, எம்ஜிஆர் சிவாஜி காலங்களில் தமிழ் சினிமா என்பது தமிழ்நாட்டை தாண்டி மாநில எல்லையோரம் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் மட்டுமே திரைமொழி பேசும்.

வர்த்தக எல்லை என்பது அவ்வளவுதான். அவர்களும் மற்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வமே காட்டவில்லை.

இந்திய சினிமாக்களில் பிரமாண்டத்தின் பிதாமகன் படம் என வர்ணிக்கப்படும் ஜெமினி எஸ்எஸ்வாசனின் சந்திரலேகா (1948) போன்ற படங்கள் மட்டுமே விதிவிலக்காக திகழ்ந்தன.

ஆனால் கமலும் ரஜினியும் தமிழ் சினிமாவுக்கு வந்தபிறகு மாநில எல்லைகள் உடைக்கப்பட்டன.

தெலுங்கில் மரோசரித்தா, கன்னடத்தில் கோகிலா இந்தியில் ஏக்துஜே கேலியே என கமல் பாய்ந்து பாய்ந்து அடிக்கஆரம்பித்தார். ரஜினியும் பின்னாளில் இந்தியில் கால் பதித்து தேசிய அளவில் பிரபலம் ஆனார். இன்று உலக லெவலில் இருவருமே பிரகாசிக்கின்றனர். தமிழ் சினிமாவும் ஜொலிக்கிறது.

ஆனால் பட்ஜெட், வசூல் என வரும்போது ரஜினியின் உயரம் ஹாலிவுட் படங்களின் பிரம்மாண்டத்தை தொட்டுக்கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என கோடான கோடி ரசிகர்களால் உயிர்போல நேசிக்கப்படும் ரஜினியின் ஆரம்ப வாழ்க்கை, ராஜ வாழ்க்கையாக இருக்கவில்லை. பெங்களுருவில் சாமான்ய குடும்பம்தான்..

கலாசிபாளையம் அருகே வாணிவிலாஸ் மருத்துவமனையில் ரானோஜிராவ்-ரமாபாய் தம்பதிக்கு பிறந்து, சிவாஜி ராவ் கெய்க்வாட் என்று நாமகரணம் சூட்டப்பட்டவருக்கு, முதன் முதலில் கிடைத்த உருப்படியான வேலை, அரசு பேருந்தில் கண்டக்டர்..

உறவினரான போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கோப ராவ் கொடுத்த அறிவுரையை ஏற்று நுழைவுத்தேர்வை எழுதி, போராடி கண்டக்டர் லைசன்சை பெற்றபின் கிடைத்த வேலை இது..

குடும்பத்தினர் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயத்தை பஸ்ஸில் சிவாஜிராவுடன் வேலைபார்த்த டிரைவர் பகதூர் என்பவர் புரிந்துகொண்டார்..

அதுவேறொன்றுமில்லை… கண்டக்டரின் ஸ்டைல்.. டிக்கெட்டுகளை வேகமாக கொடுத்த விதம்…. நெற்றியில் விழுகிற தலைமுடியை கோதி கோதி பின்னுக்கு தள்ளிவிடுகிற அலட்சியமான மேனரிஸம்.. இப்படி பல விஷயங்கள் பகதூரை வித்தியாசமாய் பார்க்க வைத்தபடியே இருந்தன.

காலை ஆறுமணி முதல் மதியம் இரண்டு மணிவரை தினமும் மெஜஸ்ட்டி-ஸ்ரீநகரா இடையே பஸ்ஸை பறக்கவைத்த டிரைவர் பகதூருக்கு, கொஞ்ச நாளிலேயே ஆத்ம நண்பராக மாறிவிட்டார் கண்டக்டர் சிவாஜிராவ் கெய்க்வாட்...

இந்த உரிமையில் ஒரு நாள் கேட்டபோதுதான், சிவாஜிராவ், தனக்கிருந்த ஆசையை பகதூரிடம் சொன்னார்..கொஞ்சம் குண்டான உடல்வாகு, கருத்த நிறம், தெளிவான பேச்சு கிடையாது..

இப்படி ஏராளமான குறைகளோடு இருந்த சிவாஜிராவின் ஆசை கொஞ்சம் அதிகப்படிதான் என தோன்றியது பகதூருக்கு.. இருந்தபோதிலும் கண்டக்டர் வேலையின்போது சிவாஜிராவ் செய்கிற வித்தியாசமான சேட்டைகள், ஸ்டைல்கள் ஆசைப்படுவதற்கு அர்த்தம் இருக்கிறது என்று தீர்மானிக்க வைத்தது பகதூரை..

ஆர்வத்தின் காரணமாக அவ்வப்போது நாடகங்களில் சிவாஜிராவ் நடிப்பதுண்டு..அப்படியொருமுறை துரியோதனன் வேடத்தில் பாண்டவர்களை பார்த்து நண்பன் சிவாஜிராஜ் சிரித்த எகத்தாள சிரிப்பை பகதூர் நினைவு படுத்தி பார்த்தபோது சம்திங் அமேசிங் என்று புரிந்தது..

மனம்விட்டு பேசியபோது சிவாஜிராவிடம் பெரிய அளவில் சினிமா கனவு இருப்பது வெளிய வந்து விழுந்தது..( இதே நக்கலான சிரிப்பைத்தான் எந்திரனில் சிட்டி கேரக்டரில் மீண்டும் ரிபீட் செய்ததாக பகதூர் சொல்கிறார்)

இது நடக்கும் 1970-களின் கால கட்டம் எப்படி இருக்கும் தெரியுமா? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் படங்களுக்கு அப்போது சென்னைதான் தலைநகரம்..

தெலுங்கு என்டிஆர், நாகேஸ்வரராவ், கன்னடத்து ராஜ்குமார், மலையாள பிரேம் நசீர் போன்ற ஸ்டார்களுக்கு பெரும்பாலும் சென்னை ஸ்டுடியோக்களில்தான் வாசம் என்பதால் சென்னையில் தங்க எல்லோருக்குமே சொந்த வீடு உண்டு. நடிகைகளுக்கும் இதே கதைதான்.

சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம் போன்றவற்றின் முக்கிய பகுதிகளில் உள்ள சொத்துக்களில் நிறைய மற்ற மாநில சினிமாகாரர்களுடையதாகத்தான் இருக்கும். இல்லை அவர்களிடமிருந்து கைமாறியிருக்கும்.

அந்த அளவுக்கு தென்னிந்தியாவின் முன்னணி ஸ்டார்கள் உட்பட அனைத்து சினிமா உலக புள்ளிகள் வசிப்பதும் சென்னையில்தான் என்பதால் பெங்களுருவிலிருந்து ஜாகையை மாற்றினால் மட்டுமே சினிமா கனவு சாத்தியம் என்பது பகதூருக்கும் புரிந்தது.. சிவாஜிராவுக்கோ, சினிமாவில் ஒரு கை பார்க்காமல் போகவேகூடாது என கொலைவெறி.. மன்னிக்கவும் கலைவெறி…

இதன்பிறகு சென்னை திரைப்படக்கல்லூரியில் சேர்க்கை. படிக்கும்போது ஏதோ ஒரு தருணத்தில் கன்னட நாடகம் நடிக்க, அதை தற்செயலாக பார்த்தார் இயக்குர் சிகரம் கே.பாலசந்தர். அவ்வளவுதான்.. சிகரம் என்கிற இரும்பு உற்றுப்பார்க்க அதில் சிவாஜிராவ் என்ற காந்தம்போய் ஒட்டிக்கொண்டது..

நாடகத்தில் சிவாஜிராவ் என்ற கருப்பு மனிதனின் நடிப்பு மற்றும் ஸ்டைல் முற்றிலும் வித்தியாசமாய் இருந்ததை கவனித்து, பாலச்சந்தர் சொன்ன ஒரே வாக்கிய அறிவுரை,’’தமிழ் கற்றுக்கொள்’’.

அதாவது தமிழை நன்றாக பேசக்கற்று கொண்டுவிட்டால் உனக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அர்த்தம்..சிவாஜிராவ் மனதில் அன்று இப்படித்தான் பட்டது..

அது முதலே ஆத்ம நண்பன் பகதூரிடத்திலும் சரி..தமிழ் தெரிந்த மற்றவர்களிடமும் சரி..சிவாஜிராஜ் பேச்சு, முட்டிமுட்டி மோதி உடைந்தாலும் தமிழில்தான் போக ஆரம்பித்தது..எதைநோக்கி சிவாஜி ராவ் ஓடினாரோ, அது அருகிலேயே வந்துவிட்டது.

ஆம், தமிழை கற்றுக்கொள் என்று சொன்ன கே.பாலச்சந்தரே, அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் சின்ன ரோலைக்கொடுத்தார்..அத்தோடு சிவாஜிராவ் என்ற அடையாளத்தை தள்ளிவைத்துவிட்டு ரஜினிகாந்த் என்றும் சினிமாவுக்காக புது நாமகரணத்தை சூட்டினார்..

1973-ல் பெரும் வெற்றிபெற்ற காவியம், நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த கௌரவம் படம். அதில் கோர்ட்டையே கலக்கி சிங்கமாய் கர்ஜிக்கும் தந்தை பாத்திரத்தின் பெயர் பாரீஸ்டர் ரஜினிகாந்த்..

தமிழகம் முழுவதும் பாப்புலாராகிவிட்ட அந்த ரஜினிகாந்த் என்ற பெயர், ஒரு அறிமுக நடிகருக்கு நிஜ வாழ்க்கையில் உண்மையான முகவரியாகவே மாற்றப்பட்டுவிட்டது.

பொதுவாக முதல் படம், அதிலும் தாம் முதன் முதலாய் திரையில் காட்டப்படும் காட்சி அசத்தலாக இருக்கவேண்டும் என்றே எவருமே நினைப்பார்கள்.. பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் மோசமாக அமைந்துவிடாக்கூடாது என்றே விரும்புவார்கள்..

ஆனால் ரஜினிகாந்த் விஷயத்திலோ, சினிமா உலகில் யாருமே சந்திக்காத ஒரு கொடுமையிலும் கொடுமை நடந்தது.. 1975 ஆம் ஆண்டு, அபூர்வ ராகங்கள் படத்தில், அறிமுகமாகமாகும் முதல் பிரேமிலேயே, அவர் மேல், ‘சுருதி பேதம்’ என்று போடப்பட்டது. அதாவது, ஏடாகூடம், சனியன் பிடிச்சது, வௌங்காதது என பல அர்த்தங்களை கொள்ளலாம் இதற்கு.

கமலஹாசனோடு ரஜினிகாந்த் பேசுவது, கடைசியில் மனைவி மகள் முன் உயிரைவிடுவது என சொற்பக்காட்சிகள் என்றாலும், படத்தின் அச்சாணியான பைரவி என்ற இசைக்கலைஞரின் கணவன் என்பதால், நல்ல வெயிட்டேஜ் கிடைத்தது இந்த ரோலுக்கு.

இந்தியாவையே ஷோலே என்ற இந்திப்பட புயல் துவம்சம் செய்துகொண்டிருந்த நேரம். ஷோலே படம் வெளியான சில தினங்கள் ஆன நிலையில்தான் அபூர்வராகங்கள் வந்து வெற்றிகரமாகவே ஓடியது.

பெங்களுர் கபாலி தியேட்டரில் ரிலீசான படத்தை நண்பர்களோடு பார்க்கப் போனபோது சிவாஜிராவை ரசிகர்கள் யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை..

முதல் படத்திற்கு பிறகு ரஜினிக்கு உண்மையிலேயே சரியாக தீனிபோட்டவர் ah;h யார் என்றால் அது இயக்குநர் புட்டண்ணாதான். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கிய ஜாம்பவான் பி.ஆர்.பந்துலுவின் சிஷ்யர்தான் புட்டண்ணா. கே.பாலச்சந்தரின் மானசீக குருமார்களில் முக்கியமானவர் இவர். டைரக்டர் பாரதிராஜாகூட புட்டண்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான்.

ரஜினி திரைப்பட கல்லூரியில் சேரும்போது அவரை இன்டர்வியூ செய்தவர்களில் முக்கியமானவர் இந்த புட்டண்ணா..அப்போதே ரஜினியின் திறமை அவருக்கு உள்ளுக்குள் உறுத்தியது என்னமோ..

கன்னடத்தில் சரோஜாதேவி, கல்யாணகுமார், ஆர்த்தி என பல பிரபலங்களை வைத்து கதா சங்கமா என்றொரு கன்னட படத்தை எடுத்தபோது ரஜினியை புட்டண்ணா விடவில்லை. ஒரே படத்தில் மூன்று பாகங்களாக தனித் தனி கதைகள் கொண்ட படம்.

கடைசி பாகமான முனித்தாய் கதையில் கொண்டாஜி என்ற ஒரு வில்லன் பாத்திரம்.. கணவன் இல்லாத நேரத்தில் அவனைப்போலவே நடித்து குருட்டு மனைவியை திட்டம்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிடும் கொடூரத்தை செய்யும் பாத்திரம் ரஜினிகாந்துக்கு..

குளியலறையில் குருட்டுப்பெண், ஒவ்வொரு ஆடைகளையும் கழட்ட கழட்ட.. அருகே சுவற்றோரம் அமர்ந்து அவளின் முழுவதுமாக வெறிக்கப்பார்ப்பார் ரஜினி. காமிரா டைட் குளோஷப்பில் ரஜினியின் முகத்தை மட்டுமே படம்பிடிக்கும்.

கிட்டத்தட்ட 40 விநாடிகள் தொடர்ச்சியாக கண்கள், உதடு, கன்னம் என ஒவ்வொரு அங்கத்திலும் விதவிதமாய் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார் ரஜினி. அதாவது பெண் ஒவ்வொரு ஆடைகளாக கழட்டி பிறந்து மேனிக்கு போகிறாள் என்பதை ரஜினியின் கண்கள் அப்படியொரு வெறித்தனமாய் சொல்லும்.

சூதாட்டம், குடிபோதை, பொறுக்கித்தனம் என ஊர் மேயும் வம்பனாக, எதைப்பற்றியும் யோசிக்காத ஒரு மட்டமான ஜென்மம் போன்ற ஒரு வெயிட்டான ரோலை, தனது இரண்டாவது படத்திலேயே வெகு சுலபமாக ஸ்கோர் செய்திருப்பார்.

குருட்டுபெண்ணாக நடித்த ஆர்த்திக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசின் விருது கிடைத்தது என்பது இன்னொரு சமாச்சாரம். இந்த கதா சங்கமத்தன் முனித்தாய் பாகம்தான் பின்னாளில் ரஜினி, ரேவதி நடித்து மகேந்திரன் இயக்கத்தில் கை கொடுக்கும் கை என தமிழில் வெளியானது,

ரஜினியின் நடிப்பு திறமையை அழகாக இப்படி புட்டண்ணா காட்டியதும் அவரை பின்தொடரும் கே.பாலசந்தரும் பாரதிராஜாவும் விடுவார்களா?

தமிழில் பெரும் வெற்றிபெற்ற அவள் ஒரு தொடர்கதையை தெலுங்கில் எடுத்தபோது அதில் ஜெய்கணேஷ் பாத்திரத்தை ரஜினிக்கு கொடுத்தார் கே.பாலச்சந்தர்.

ஜெயசுதாவின் அண்ணனாக வரும் ரஜினி, தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலுக்கு ரஜினி நடித்தவிதம் அவரை தெலுங்கு உலகிலும் பேசவைத்துவிட்டது. ஒரு புதுமுக நடிகரின் முதல் மூன்று படங்களுமே வெவ்வெறு மொழிகளில்.. எவ்வளவு ஆச்சர்யமான விஷயம்.

அபூர்வ ராகங்களில் கமலையும் ரஜினியையும் முதன் முதலில் ஒன்றாக பயன்படுத்திய பாலச்சந்தர், இம்முறை இருவரையும் மாற்றிப்போட்டு ஆடினார். கமல் கௌரவ வேடத்தில் நடிக்க, ரஜினிக்கு முதன் முறையாக வில்லன் கம் ஹீரோவா புரமோஷன்.. சிறுமியாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கும் ஹீரோயினாக முதல்படம்., அதுதான், மூன்று முடிச்சு..

எந்த பாலசந்தர், ரஜினியின் முதல் படத்தில் அறிமுக காட்சியின்போது சுருதிபேதம் என்று போட்டாரோ அதே பாலசந்தர், தமிழில் இரண்டாவது படமான மூன்று முடிச்சு படத்தில், படத்தின் டைட்டிலேயே ரஜினி ஸ்டைலாக சிகரெட்டை வாயில் போடும் பிரேம் மீதுதான் போடவேண்டிவந்தது..

வில்லன் கம் ஹீரோவாக மூன்று முடிச்சு படத்தில் ரஜினி அசத்த, அதன் பிறகு அவர் திரையுலக வாழ்க்கையில் ஜெட் வேகம்தான்..

எஸ்.பி.முத்துராமன் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினி நடிப்பின் சகலவிதமான பரிமாணங்களை யும் காட்டி ரசிகர்களை உருக வைத்துவிட்டார்.

அடுத்து புட்டண்ணாவின் சீடரான பாரதிராஜா, கதா சங்கம ரேப்பிஸ்ட் கொண்டாஜி பாத்திரத்தை 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை பாத்திரமாக செதுக்கிவிட்டார்.

அத்தோடு, ஒவ்வொன்றையும் ஏடாகூடாமாக செய்துவிட்டு உடனே ‘இது எப்டி இருக்கு’ என எகத்தாளமாக கேட்க வைத்தார். ரஜினியின் வசனங்களில் முதன் முதலில் பன்ச் டயலாக்காக மாறியது இந்த இது எப்படி இருக்கு? என்ற டயலாக்தான்.

நடிக்க வந்த இரண்டாமாண்டு முதலே ரஜினிக்கு வருடத்திற்கு பல படங்கள் கிடைத்தன. சர்வ சாதாரணமாய் 15 படங்களையாவது தாண்டும்.

அப்படிப்பட்ட படங்களில் மிகவும் முக்கியமானது, புவனா ஒரு கேள்விக்குறிக்கு பிறகு எஸ்பி முத்துராமன் ரஜினியை வைத்து இரண்டாவது முறையாக இயக்கிய, ஆடு புலி ஆட்டம்.

எம்.ஜிஅர்,- சிவாஜி சகாப்த காலகட்டத்தில், புது விதமாய் ஸ்டைல், இங்லீஷ் டயலாக் டெலிவரி என கமலையும் ரஜினியையும் அடுத்த தளத்திற்கு கொண்ட சென்ற படம் அது.

ரஜினி என்ன கருப்பு மனிதனுக்குள் இருந்து ‘’எதிலும் படு ஸ்பீடு’’ என்ற வித்தியாசமான அம்சத்தை வெளிக்கொண்டுவந்தது ஆடுபுலி ஆட்டம். ஈவு இரக்கமே இல்லாத கொள்ளையனாக, ரஜினி என்ற பெயரிலே நடித்தார்.

எதிராளியை திக்குமுக்காட வைக்கும் ஒவ்வொரு சீனிலும் கடைசியாக ;;தி இஸ் ரஜினி ஸ்டைல், இதான் ரஜினி ஸ்டைல்’’ என்று தமிழிலும் இங்லீஷிலும் மாறி மாறி பேசுவார். அதேபோல, ‘’மேரா தோஸ்த்’’ என்றும் ஸ்டைலான மாடுலேஷனில் பல காட்சிகளில் பேசுவார். இந்த வசனங்களெல்லாம் அன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையிடம் பாப்புலர் பன்ச் டயலாக்காக ஆகிப்போய்விட்டன. .

கருப்பு வெள்ளையில் வந்த ஆடு புலி ஆட்டம் போலவே ரஜினியின் சினிமா வரலாற்றில் அவர் ஸ்டைலின் புயல் வேகத்திற்கு வித்திட்ட படம் மாங்குடி மைனர்.

அவ்வளவு வேகமாக படத்தில் இங்லீஷ் டயலாக்குகள் ரஜினி வாயிலிருந்து பறக்கும். வில்லன் ரோலிலேயே ஒரு படு நக்கலான அலட்சியத்தையும் காட்டியிருப்பார் ரஜினி.

இந்த ஒரு அம்சத்தை கெட்டியாக பிடித்துகொண்டு தனக்கென ஒரு ரூட்டை போட்டு வெற்றிகரமாக முன்னேறியவர்தான் சத்யராஜ்..

கமலுடன் சேர்ந்தும் சேராமலும் பல படங்கள் செய்து வந்த ரஜினி தனியாகவே மின்னும் அளவுக்கு தயாராக்கிவிட்டது 1978 ஆண்டு.

பைரவியில் 100 பர்சென்ட் கதாநாயகனாக உயர்ந்த ரஜினி அது முதலே ஜெட் உச்சகட்ட வேகத்தை நோக்கி பறந்தது.. ஒரு பக்கம் கதாநாயகனாக… கெட்ட பய சார் இந்த காளி என்று பேசும் காளி என்ற பாத்திரத்தை வைத்து முள்ளும் மலரும் படத்தின் மூலம் ரஜினியை வேறொரு கோணத்தில் காட்டி அசத்தினார் இயக்குநர் மகேந்திரன்.

எஸ்பி முத்துராமன், ஆர்சி சக்தி போன்றவர்களோ, பிரியா, தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம் போன்ற படங்களால் ரஜினி படம் என்றாலே நிச்சய வெற்றி என பாக்ஸ் ஆபிஸ் மசாலாக்கள் மேட்டரில் அடித்தளம் போட்டார்கள்.

இன்னொரு பக்கம் ஏற்கனவே ஒப்புகொண்டபடி கமல் விஜயகுமார் மற்றும் சிவாஜி போன்ற ஹீரோக்களுடன் இரண்டாவது ஹீரோ அல்லது வில்லன் வேடங்களில்..

இளமை ஊஞ்சலாடுகிறது. அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா, நான் வாழவைப்பேன், ஜஸ்டிஸ்கோபிநாத் போன்றவையெல்லாம் அந்த லிஸ்ட்டுதான்.

1980-ல் வந்த பில்லா படம் முதன்முறையாக இப்போது பிளாக் பஸ்டர் தெறி வசூல் என்றெல்லாம் பேசுகிறார்களே அந்த வகையிலான மெகா கலெக்சனை அள்ளியது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கச்சிதமாக பொருந்தியது.

ஆக்சன், ஸ்டைல் இவற்றில் ரஜினியை அடிக்க ஆளே இல்லை என ராஜபாட்டையை போட்டுத்தந்தது பில்லா படம்தான்.

முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, மூன்று முகம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் மேலும் மேலும் ரஜினியை எங்கே கொண்டுபோயின.

மாபெரும் ஆக்சன் ஹீரோவாக திகழ்ந்த ரஜினி சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது எதுவென்றால் அது தம்பிக்கு எந்த ஊரு படம்தான்.

அதற்கு முன்பெல்லாம் தில்லுமுள்ளு படத்தை தவிர ரஜினி படங்களில் தனியாக காமடி டிராக் வைத்து காமெடியன்கள்  ஊடுறுவியிருப்பார்கள்.

ஆனால் ஆக்சன் ஹீரோவான ரஜினியே, காமெடியையும் சேர்த்து கனக்கச்சிதமாக செய்தார்.

பெரியவர்கள், இளைய தலைமுறை, குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் திரையரங்குகளுக்கு ரிபீட் ஆடியன்சாக கொண்டு வந்தது தம்பிக்கு எந்த ஊரு படம்..

அதன்பின்னர் ஆக்சன் பிளஸ் காமெடி என்பதே ரஜினி படங்களின் தாரக மந்திரமானது. படத்தில் காமெடியன்கள் இருந்தாலும் தான் மட்டுமே சார்ந்த சீன்களிலும் காமெடியில் கலக்க ஆரம்பித்தார் ரஜினி.

குழந்தைகளை கவர்ந்ததுதான் ரஜினிக்கு பாப்புலாரிட்டியிலும் சரி, வசூலிலும் சரி பெரிய ஏற்றத்தை தந்தது. குழந்தைகள் தனியாக தியேட்டருக்கு போகமுடியுமா? பெற்றோர்தானே அழைத்துச்செல்லவேண்டும்..அப்போது பெற்றோரும் ரஜினியை ரசித்துதானே ஆகவேண்டும்.. தமிழ்நாட்டில் அப்படித்தான் ஆகி எல்லோருக்கும் மிகவும் பிடித்த சூப்பர் ஸ்டாரானார் ரஜினி.

கமல் எப்படி ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் இந்தியிலும் ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டினாரோ அதேபோல ரஜினியும் இந்தியில் அடிக்கடி பிரவேசித்துவிட்டுத்தான் வந்தார்.

விஜயகாந்துக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்த சட்டம் ஒரு இருட்டறை படம்தான் இந்தியில் அந்த கானூன் என ரீமேக் செய்யப்பட்டது. அதுதான் ரஜினிக்கு முதல் இந்திப்படம். நாடே கொண்டாடும் அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோல், அப்புறம் ஹேமமாலினி.. பிறகு கேட்கவேண்டுமா.. தேசமெங்கும் வெற்றிகரமாகவே பேசியது அந்தா கானூன்.. அதன்பிறகும் பல இந்தி படங்களில் நடித்தார் ரஜினி.

ஆனால் இப்போது ஆச்சர்யம் என்னவென்றால் இந்தி படங்ள் வாயிலாக அல்ல, தமிழ் படங்கள் வாயிலாகவே இந்தியா முழுவதும் அறிந்த சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

வட நாட்டு முன்னணி ஸ்டார்கள்கூட, தலைவா என்றழைத்து ரஜினிக்கே ரசிகர்களாக மாறிப்போயி ருக்கின்றனர். ரஜினியால் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. ஷாருக்கான் தனது ரா ஒன் படத்தில் ரஜினி கொஞ்சம் தலைகாட்டினால் போதும் என்கிறார். அந்த அளவுக்கு வியப்பான திரையுலக ஆளுமையாக மாறிப்போனார் ரஜினி..

அவர் நடிக்க ஆரம்பித்தபோது பிறந்தவர்கள்கூட கதாநாயகியாகி பின்னர் அம்மா ரோல்களுக்கு போய்விட்டார்கள்.. ஆனால் ரஜினி இன்னமும் பேத்தி வயதுடையவர்களுக்கு இணையாக தன்னை திரையில் பாத்திரத்திற்கு ஏற்ப தயார் படுத்திக்கொள்கிறார்.

இந்த தயார் படுத்திக்கொள்ளுதல் என்பது ரஜினிக்கு இன்று நேற்று வந்த கலையல்ல..முரண்பாடான பாத்திரங்களை வெவ்வேறு படங்களில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்.

ஒரு படத்தில் சிறுவனின் கண்களை குருடாக்கிவிட்டு அக்காவை பலாத்காரம் செய்து அவளின் அப்பனை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்.இன்னொரு படத்தில் உயிருக்கு உயிரான ஒரே தங்கையின் சாவுக்கு நாமே காரணமாகிவிட்டோமே என உருக வைப்பார். இரண்டு ரோல்களும் சில மாத இடைவெளிகளில் அடுத்தடுத்து செய்தவைதான். ஆனால் வித்தியாசம் பிரமிப்பாக இருக்கும்

1970களின் ஸ்டைல் மட்டுமே ரஜினிக்கு பிரதானம் என்று நினைப்பவர்களுக்கு அவர் நடிப்பால் அசத்திய படங்களை தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்.

முத்துராமன், தேவிகா, கல்யாணகுமார் நடித்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் ரீ மேக் செய்தபோது அதில் கல்யாணகுமாரின் டாக்டர் வேடத்தில் ரஜினிதான் நடித்தார்.

தமிழில் படம் முழுக்க அளவுக்கு மீறிய சோகமாய் வருடம் டாக்டர் பாத்திரத்தை, அப்படியே முழுமையாய் சோகமாக செய்யாமல் ஒரு டாக்டருக்கே உரித்தான தோரணையுடன் வெகு இயல்பாக கச்சிதமாக செய்திருந்தார்.

ஏமாற்றிய காதலியை விளக்கம் கேட்கும் போது, தமிழில் கல்யாணகுமார் கெஞ்சுவார். ஆனால் ரஜினியோ கெஞ்சாமல் கொஞ்சம் நக்கல், சலிப்பு, ‘ஆவேசம் பின்னர் அமைதி என நாயகி கன்னட மஞ்சுளாவிடம் கலந்து கட்டியடிப்பார். ஏமாற்றியது காதலிதானே தவிர தான் அல்லவே என்பதை கம்பீரத்துடன் அந்த சீனில் சிறப்பாக நிலைநிறுத்தியிருப்பார்.

தெலுங்கில் அவர் செய்த சிக்கலமா செப்பண்டி என்ற படத்தைதான் பின்னர் தமிழில் நிழல் நிஜமாகிறது என கமல் செய்தார். இரங்கி சர்மா என்பவர் டைரக்டர் செய்த தெலுங்கு படத்திற்கு பாலச்சந்தரின் ஆஸ்தான காமிராமேன்கள்தான் ஒளிப்பதிவு.

அந்த வகையில் சிக்கலமா செப்பண்டி பாலச்சந்தர் மூலம் தமிழில் ரீமேக் ஆனது. தெலுங்கில் நண்பனின் சகோதரியான நாயகி சங்கீதா, ஆண்வாடையே பிடிக்காத ஒரு திமிர் பிடித்த பாத்திரம்.

ஆணாதிக்கவாதியான ரஜினி, திமிர் பிடித்த பெண்மையை சீண்டும் இடங்களிலெல்லாம் எல்லைக்கோடு கச்சிதமாக இருக்கும். தெலுங்கு படத்தில் ஸ்ரீபிரியா செய்த வேலைக்கார இளம்பெண் ரோலை தமிழில் ஷோபா செய்தார். தெலுங்கில் ஸ்ரீபிரியா அசந்துவியப்பாக பார்க்கும் அளவுக்கு ரஜினியின் ஸ்டைல்கள் தாறுமாறாய் இருக்கும். குறிப்பாக தீப்பெட்டியை எப்போது எடுத்தார் எப்படி சிகரெட்டை கொளுத்தினார் என்பதை கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு தீக்குச்சி வெளியேறிய தீப்பெட்டி பறந்துபோய் ஸ்ரீபிரியா கையில் போகும் அளவுக்கு மின்னல் வேகம். காட்சியை பார்த்தவர்கள் மட்டுமே அதை உணரமுடியும்.

ஆனால் படம் தமிழில் ரீமேக் ஆன போது, சுமித்ராவை கமல்  சீண்டும் காட்சிகளில் வார்த்தை மற்றும் உடல் மொழி தாக்குதல் கொஞ்சம் வன்மமாக இருக்கும். தெலுங்கு ரஜினியை பார்த்துவிட்டு தமிழில் கமல் பாத்திரத்தை பார்த்தால் சற்று எரிச்சல்தான் மேலோங்கும்.

இப்படி 70-களில் ரஜினிக்குள் இருந்த வெகு இயல்பான நடிப்பைத்தான், சூப்பர்ஸ்டார் என்ற இமேஜ் காவு வாங்கிக்கொண்டது.

தம்பிக்கு எந்த ஊரு படத்திற்கு பிறகு, வசூல் மன்னன் வட்டத்தை விட்டு அவரை வெளியேவிட தமிழ் சினிமா தயாராக இல்லை. அதையும் மீறி அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தையெல்லாம் வெளியே கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக கிடைத்ததுதான் தளபதி படம்..

ஆனாலும் மறுபடி மன்னன், அண்ணாமலை என மெகா ஹிட்டுக்கள் மேலேமேலேதான் தூக்கிக்கொண்டு போயின.

இந்தியில் அமிதாப் நடித்த ஹம் படத்தில் போலீஸ் ஆபிசர் வேடத்தில் வந்தார் ரஜினி, அதையே தமிழில் ரீமேக் செய்தபோது ஹம் டைகர் அமிதாப்பைவிட பாட்சாவின் ஆட்டோ மாணிக்கம் பல மடங்கு ஆவேசத்தை அள்ளித்தெளித்திருப்பார்.

ஆனந்தராஜை அடித்துவிட்டு உள்ளே போ என்று சொல்லிக்கொண்டே ரஜினி பார்க்கும் பார்வை… உண்மையிலேயே நடிப்பு என வரும்போது அவரின் கண்கள் பேசும் பவரான பாஷைக்கு நிகர், கிடையவே கிடையாது.

1995 பாட்சா வரை கதைக்கான படங்களில் ரஜினி நடித்தார். சூப்பர் ஸ்டாருக்கு அவசியமாயிற்றே என தேவைப்படும் இடங்களில் மட்டும் லாஜிக் பார்க்காமல் பில்டப் சீன்கள் சொருகப்பட்டன.ஆனால் பாட்சாவின் உச்சபட்ச வெற்றிக்கு பிறகு நிலைமையே தலைகீழாகப்போனது.

சென்சார் சர்ட்டிபிகேட்டுக்கும் சுபம் கார்டுக்கும் இடையில் ஒவ்வொரு பிரேமிலும் ரஜினி ரஜினி ரஜினி என அவருக்காக மட்டுமே மெனக்கெடும் வேலைகள்தான் படங்களில் அதிகமானது. முத்து, அருணாச்சலம், போன்றவையெல்லாம் அந்த ரகமே.

படையப்பாவை நீலாம்பரி தூக்கி நிறுத்தாவிட்டால் அறுபடையப்பன் கதி சற்று சிக்கலாகவே போயிருக்கும். ஆனால் விதி வலியது என்பது போல, அரசியல் படமும் இல்லாமல் ஆன்மிக படமுமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக வந்த பாபாவில் கதம் கதம் ஆகிப்போனார் ரஜினி.

இனி சிந்தித்து செயல்படாவிட்டால் உண்மையிலேயே சினிமா வாழ்வும் கதம் கதம் என்று எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது ரஜினி.

நின்று நிதானித்து யோசித்து பார்த்து பழையபடி எல்லோருக்குமான ரஜினியாக இருப்பதுதான் நல்லது என்று அவருக்கு மனதில் பட்டது.

கங்கா, முருகேகன் படையோடு வந்த சந்திரமுகி, டாக்டர் சரவணனை அதாவது ரஜினியை நன்றாகவே பழைய உயரத்திற்கு கொண்டுபோனது. சந்திரமுகி படம் தமிழில் 800 நாட்களுக்கு ஒடி புதிய சாதனையையே படைத்தது.

ஆனால் அதன்பிறகு சிவாஜியில் தொடங்கி எந்திரன் 2.0 வரை, படத்துக்கு படம் பிரமாண்டம் கூடுகிறது. மாநில, தேச எல்லைகளை கடந்து வசூலும் உலக அளவில் பேசப்படுகிறது. அதே நேரத்தில் படங்களை நம்பி போட்ட பணத்தை அத்தனை தரப்பினரும் எடுத்தார்களா, எடுக்கிறார்களா என்ற சர்ச்சையும் சுழட்டி எடுக்கிறது.

கறுப்பு வெள்ளை, வண்ணம், அனிமேஷன் த்ரி டி என சினிமாவில் பல முன்னேற்றங்களோடும் நவீன தொழில்நுட்பங்களோடும் கலந்து இன்றும் பயணிக்கிறார். கதாநாயகனாகி தொடர்ந்து அப்படியே கதாநாயகனாக அதுவும் டாப் ஸ்டாராக நிற்கிறார் ரஜினி. இந்திய திரையுலக வரலாற்றில் இது ஆச்சர்யமான சாதனை.



Sivaraj Coimbatore

Wednesday, 7 October 2020

KALAIGNAM FIXED RAJINIKANTH AS HERO ,FIRST HE BOUGHT HOUSE GIVE IT TO HIM AS A GRATITUDE

 

KALAIGNAM FIXED RAJINIKANTH 

AS HERO ,FIRST HE BOUGHT HOUSE 

GIVE IT TO HIM AS A GRATITUDE




தேவர் ஃபிலிம்ஸ் கதை இலாகாவில் பணையாற்றிவந்த கலைஞானத்தை...‘நீ தனியா படம் பண்ணு... நான் உனக்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்றேன்...’ எனச் சொன்னார் தேவர். இதன்படிதான்‘பைரவி’படத்தை ரஜினியை கதாநாயகனாக வைத்து தயாரித்தார் கலைஞானம். ஆனால்... ரஜினியை ஹீரோவாக்கியதில் தேவருக்கு அப்போது உடன்பாடில்லை. ‘ஜெய்சங்கரை ஹீரோவாப் போடு... ரஜினியை வில்லனாப் போடு’ என்றார். ஆனால்... ரஜினிதான் ஹீரோ என்பதில் கலைஞானம் உறுதியாக இருந்ததால்... அந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்துதர மறுத்துவிட்டார் தேவர். இருப்பினும்... விடாமுயற்சியோடு போராடி... ‘பைரவி’படத்தி தயாரித்தார் கலைஞானம். இங்கிருந்துதான் ரஜினி என்கிற சூப்பர்ஸ்டார் உருவானார்.




"நான் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிப் படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிச்சிக்கிட்டிருந்தப்போ... கலைஞானம் சார் வந்து, “பைரவி என்கிற கதையைச் சொல்லி... 25 ஆயிரம் சம்பளம் தர்றேன்... நீங்கதான் ஹீரோ.. நான் நாளைக்கி வந்து... ஃபைனல் பண்ணிக்கிறேன்னு சொன்னார். எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. நான் வில்லனாகத்தான் நடிக்க ஆசைப்பட்டேன். அதுதான் எனக்கு சரியா இருக்கும்... ஹீரோன்னா... அதுல அதுல பல கஷ்டங்கள் உண்டு. என்ன செய்யலாம்?னு புரியாத நிலையில ஒரு முடிவுக்கு வந்தேன். நாளைக்கி கலைஞானம் வந்ததும்... சம்பளத்தை உயர்த்திக் கேட்டா... நம்மளை விட்டுடுவார்னு நினைச்சேன். மறுநாள்... கலைஞானம் சார் வந்தார். ‘சார்... 50 ஆயிரம் ரூபா சம்பளம் வேணும்... அட்வான்ஸா ஐயாயிரம் குடுங்க’னு சொன்னேன். உடனே அவர்...‘இந்தாங்க அட்வான்ஸ்’னு 30 ஆயிரம் ரூபாயை மொத்தமா கொடுத்து அசத்தியதோடு... ‘உங்களுக்கு ஜோடி ஸ்ரீப்ரியா’னும் சொன்னார். அடேங்கப்பா... ஆட்டுக்கார அலமேலு புகழ் நடிகையா?னு எனக்கு வியப்பு... அந்த வியப்பு முடியும் முன்னமே... ‘சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் ஸ்ரீகாந்த் உங்களுக்கு வில்லனா நடிக்கிறார்’னு சொன்னார். மகிழ்ச்சியில் நான் திக்குமுக்காடிப்போனேன்.



படம் வெளியான பிறகு... கலைஞானம் சார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் தூரத்துல இருந்தபடியே ‘ரஜினி சௌக்கியமா?’னு புன்னகையோடு... என் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் போய்க்கிட்டே இருப்பார். ‘ஒரு படம் செய்து கொடுங்க’னு என்கிட்ட கேட்கவே மாட்டார். அழுதபிள்ளைதானே பால் குடிக்கும்... ஆனா அவரோ...‘நான் (ரஜினி) நல்லா இருந்தாபோதும்ங்கிற நல்ல உள்ளம் கொண்டவர்.


கலைஞானம் சார்... நான் தப்பு செய்துட்டேன். அவருக்கு நான் ஒரு படம் செய்து கொடுத்திருக்கணும்... “இப்படி... 25.12.2017 அன்று... ராகாவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களிடம் அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோது கலைஞனத்தை கௌரவப்படுத்தினார் ரஜினி.


ரஜினி தலைமையில், பாரதிராஜாவின் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் 14.08.2019 அன்று கலைஞானம் அவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.



இதில் பேசிய சிவக்குமார், “கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்” என்கிற தகவலைச் சொன்னார். இதையடுத்து... அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசும்போது... “கலைஞானத்திற்கு அரசு சார்பில் வீடு தரபப்டும்” என்றார். ரஜினி தனது பேச்சின்போது... “ஸாரி... கலைஞானம் அவர்கள் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியும். ‘நல்லாருக்கீங்களா?’னு கேட்டா... ‘நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேன்’னு சொல்லுவார்.


வெள்லை வேட்டி சட்டையில பளிச்சுனு சிரிச்சமுகமா இருக்கிற அவரைப் பார்க்கும் போது... அவர் கஷ்டபப்டுறமாதிரி தோணாது. அழுத குழந்தைக்குத்தான் தாய்கூட பால் கொடுப்பா. கலைஞானம் என்கிட்ட கேட்டிருக்கணும். பத்து படமாவது அவருக்கு நான் செய்துகொடுத்திருக்கணும். கலைஞானத்துக்கு வீடு கொடுக்கிற வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு தரமாட்டேன்... நான் வாங்கித்தருவேன். கலைஞானத்தோட கடைசி மூச்சு... நான் வாங்கித்தர்ற வீட்டுலதான் போகணும். இன்னும் பல்லாண்டுகாலம் கலைஞானம் நலமுடன் வாழணும்” என்றார் ரஜினி.


விழாவுக்குகான வெறும்பேச்சாக இல்லாமல்... கலைஞானத்திற்கு வீடு வாங்கித்தருவதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றார் ரஜினி. கடந்த 5.10.2019 வெள்ளியன்று... அமுதினி ஃபிளாட்ஸ், 34 விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை முகவரில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்ரு படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்களும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.


07.10.2019 அன்று காலை பத்துமணிக்கு தான் வாங்கிக்கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம். பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார். அதன்ப்பின் ரஜினிக்கு மில்க் ஸ்வீட் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி... “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவித்தார். அதன்பின் விடைபெற்றுச் சென்றார் ரஜினி. கலைஞானத்திடம் நாம் இதுபற்றி கேட்டபோது.... மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக... அவர் சொன்னார்....“வீடு வாங்கிக்கொடுத்தார்... விளக்கும் ஏற்றிவைத்தார்”

Friday, 22 May 2020

KAMALAHASAN VS SRIDEVI VS RAJINIKANTH





KAMALAHASAN  VS SRIDEVI VS RAJINIKANTH


.கமல் ,ரஜினி இருவருமே ஸ்ரீதேவி கதாநாயகியாய் அறிமுக படத்திலேயே நடித்தவர்கள் !
மூன்று முடிச்சு 1976 இல் வெளிவந்த படம் .

கமல் அதற்கு முன்னரே பல படங்களில் நடிப்பில்
டான்ஸில் அசத்தியவர் .பட்டிக்காட்டு ராஜாவில் சிறிய பாத்திரம் தான் .உன்னைநான் பார்த்தது
பாடல் தான் எஸ் .பி பி கமலுக்கு பாடிய முதல் பாடல் .

எஸ் .பி பி இடம் கேட்டபோது எனக்கு நினைவில்லை
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க என்றார் TV YIL . அதிலிருந்து தான் நான் கமல் ரசிகரானேன் .ஹேர் ஸ்டைல் உடை ,எல்லாமே அப்படியே !! மீசை பாணி வேறு

அப்புறம் 16 வயதினிலே .இந்த படம் பார்த்து ஸ்ரீதேவி மயிலு ஆனார் ,சாய் பல்லவி மலர் ஆனது போல . இவரை காதலிக்காத இளைஞர்கள் யாருமே இல்லை . நமக்கே இப்படின்னா கூட நடிச்ச கமல் ,ரஜினி பாடு
எப்படி இருக்கும் .கமலுக்கு வயது 23 ரஜினிக்கு 27 அப்புறம் இருவரும் இளமை ஊஞ்சலாடுகிறது ,அலாவுதீனும் அற்புத விளக்கு படங்களில் நடித்தனர் .என்றாலும் சிவப்பு ரோஜாக்கள் மாதிரி சோலோ வா ரஜினிக்கு படமில்லை அடிக்கடி ஸ்ரீதேவியுடன் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியதால் பத்திரிக்கைகள் இருவரைபற்றியும் கிசு கிசு வெளியிட்டது

அந்த நேரம் தான் ரசிகர்களுக்கும் ,ஸ்ரீதேவி மற்றும் பல கதாநாயகிக்கும் கமல் ஒரு ஷாக் கொடுத்தார் . அப்போதுதான் நான் சிவகாசியில் ஒரு கம்பனியில் அக்கௌன்டன்ட் ஆக வேலைக்கு சேர்ந்து இருந்தேன் .
பஸ்ஸை விட்டு இறங்கியதும் மாலைமுரசில் கமல் திருமணம் பிரிண்ட் ஆகியிருந்தது .வாணி கணபதி படம் போட்டிருந்தது .இந்த காலகட்டத்தில் FACIAL ASTROLOGY பற்றி RESEARCH பண்ணிக்கிட்டு இருந்தேன் .நீளமான முகம் ,நீளமான மூக்கு இருப்பவர்கள் somewhat dangerous இந்த அளவில் தெரிந்து வைத்திருந்தேன் .

அன்று இரவு பயங்கர கனவு .பேப்பரில் பார்த்த பெண்ணின் முகம் மேலிருந்து கீழாக பெரிதாய் கொண்டே போனது , மம்மூட்டி அய்யர் தி கிரேட் படத்தில் கண்ட மாதிரி .அப்புறம் மறுபடியும் ஸ்ரீதேவி - கமல் கிசுகிசு ஆரம்பம் ஆகியிருந்தது .இளமை ஊஞ்சலாகிறதுக்கு அப்புறம் ரஜினியும் பேசப்படும் அளவில் நடிக்க ஆரம்பித்து மௌசு கூடியிருந்தது .1977 இல் காயத்ரி படம் மூலம் ஸ்ரீதேவி தொடர்பு ஏற்பட்டது
வடக்கே மாதுரி தீட்சித் ஷாரூக்கானுடன் ஒரு படம் அமீர்கானுடன் ஒருபடம் வந்தது போல் ரஜினி,கமல் கூடவும் ஸ்ரீதேவி நடித்து வந்தார் .

ஆனால் ரஜினியை பொறுத்தவரை 1977 -78 களில் நடிகை லதாவுடன் காதல் ,எம்ஜியாரால் பட்ட தொல்லைகள் இவைகள் ரஜினியை அவர் மனதை கடும் உளைச்சலுக்கு உள்ளாக்கியது .ஒரு sex addict மாதிரி behave பண்ண ஆரம்பித்தார் .தர்ம யுத்தம் படப்பிடிப்பில் நடனம் ஆடிக்கொண்டிருந்த எக்ஸ்ட்ரா நடிகைகளை கையை பிடித்து இழுத்து ,வரமாட்டாளாமா? ! பத்து ரூபாய் கிராக்கிகள் என்கிறார்..கூட இருந்த ஸ்ரீதேவிதான் ரஜினியை அமைதிப்படுத்தினார் .இந்த காலகட்டத்தில் தான் ரஜினி வேண்டுகோளுக்கு இணங்கி அசைய முடியாமல் படுத்திருந்த ஸ்ரீதேவி ஆகாய கங்கை பாடலுக்கு படுத்தவாறே ,உக்காந்தவாறே டூயட் காட்சியில் நடித்து கொடுத்தார்

இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு கமல்கொ ஞ்சம் இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இருந்தார் .அப்போதெல்லாம் இந்திப்பட ,எஸ்ட்ராஸ் ,படப்பிடிப்பு இல்லைன்னா அங்கிருக்கும் நடிகருடன் சுத்தகிளம்பி விடுவார்கள் .அவ்வாறு சுத்த கிளம்பிய நடிகை ஒருத்தியுடன் கமல் ஒரு நாள் இரவு தங்கினார். மறுநாள் அந்த நடிகை கிளப்பி விட்ட செய்தி தமிழகத்தையே அதிர வைத்தது .கமலஹாசனுக்கு ஆண்மை இல்லைன்னு. நாங்கல்லாம் அந்த நடிகையை சபித்தோம் .அநேகமா இது 1984 அல்லது 1985 ஆக இருக்கும் .ஆனா ஒரு ஆறு மாசம் தான் இருக்கும் . சரிகா கமலின் குழந்தைக்கு தாயாக இருப்பதாய் பகிரங்கமாய் செய்தி வெளியிட்டார் (1985 ) அப்போது கமலஹாசனுக்கு ஏராளமாய் பெண் விசிறிகள் இருந்தனர் .அவர்களெல்லாம் இதனை ஸ்வீட் கொடுத்து கொண்டாடினர் .நான்லாம் ஷாக் ஆகி நின்றேன் சந்தோசத்துலதான்

ஆனால் ரஜினி ஸ்ரீதேவி கிசுகிசுக்கள் அக்காலத்தில் இல்லை . ஸ்ரீதேவியை ரஜினி பெண் கேட்டதும் இந்த காலகட்டத்தில் தான் . அப்போதெல்லாம் நடிகையின் காதலை நைசாக பேசி கழட்டி விடுவதில் நடிகையின் அம்மாக்கள் சூரர்களாய் விளங்கினார் .ஹேமமாலினி தாயார் ஜெயா சக்கரவர்த்தி ,சரோஜாதேவி தாயார் ருட்ரம்மா ,வைஜெயந்திமாலா பாட்டி யதுகிரி இவர்களுடன் ஸ்ரீதேவி தாயார் ஸ்ரீ அம்மா அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்

ஸ்ரீதேவி பிறந்த தேதி ஆகஸ்ட் 13 ,1961 -ஆனா 1963 என்று ரிக்கார்டுகளில் இருக்கும் .அதன் படி பார்க்கும் போது சுமார் 11 வயது வித்தியாசம் இருந்தது .மேலும் ரஜினி பற்றி அந்த நேரத்தில் நல்ல அபிப்ராயம் ஒன்றும் இல்லை .ஒரு காட்டு மிராண்டி ரேஞ்சிக்கு பத்திரிகைகள் அவரைப்பற்றி எழுதின . தர்ம யுத்தம் படப்பிடிப்பு சமாச்சாரங்கள் இவையெல்லாம் தான் ரஜினி ஸ்ரீதேவி திருமணத்தை நிறுத்தின .1981 இல் லதாவுடன் திருமணம் நடந்த பிறகும் ரஜினி பற்றி நெகடிவ் செய்திகள் வந்து கொண்டிருந்தன . ஆனால் அதன் பிறகு கமல் தான் ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ள போராடிக்கொண்டிருந்தார் .
1980-1985.

அதற்கு ஸ்ரீதேவி தரப்பில் வந்த பதில் சிரிப்பு ..சிரிப்பு தான்
.

Wednesday, 20 May 2020

HOW TO GET VOTE FROM SHORT CUT WITHOUT WEARS AND TEARS RAJINIKANTH




HOW TO GET VOTE FROM 
SHORT CUT WITHOUT WEARS AND TEARS
RAJINIKANTH




ஊடகங்களே வியக்கிற ஊடக ஒளிதான் நம்ம ரங்கராஜ் பாண்டே! ஐயோ பாவம். அவரது பேரறிவும் பெரு முதிர்ச்சியும் ஒரு ரசிகன் லெவலிலேயே நின்று விட்டதுதான் அண்மைகால சோகம்! ரஜினி ரசிகர் மன்ற நிகழ்ச்சி ஒன்றில், தேர்தல் வந்தால் ரசிகர்கள் எப்படியெல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்கிற அளவுக்கு ‘ரங்கராஜ் அலைஸ் சோ பாண்டே’ ஆகியிருந்தார் அவர்.

ஒருமுறை சாணக்யா சேனலில் பேசியவர், ‘ரஜினி மனைவி லதா மீது எனக்கு தெரிஞ்சு பெரிசா வழக்குகள் இல்ல. ஏதோ வாடகை பாக்கின்னு ஒரு இஷ்யூ வந்திச்சு. அவ்ளோதான்’ என்று கோரைப்பாயை சுருட்டி கோட்டு பாக்கெட்டுக்குள் வைத்தார். அப்படியொரு அப்பாவி அவர். லதா ரஜினி மீது ‘சுல்தான் தி வாரியர்’ படத்திற்காக வாங்கிய கடனை திருப்பி தராத விஷயத்தில், பண மோசடி வழக்கு ஒன்று தொடரப்பட்டு இன்றளவும் தீர்க்கப்படாமலிருப்பது தேர்ந்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டேவுக்கு தெரியாமலிருந்திருக்காது. பட்… நேர்த்திக்கடன் அப்படி பேச வைத்திருக்கும்!

மாவட்ட செயலாளர்களிடம் ரஜினி பேசியதென்ன? என்று சமீபத்தில் சாணக்யாவில் பாண்டே விளக்கியது அருமை. அப்படியே ரஜினியை பற்றி அவர் சொன்ன தகவல்களை கேட்டால் ‘தலை சுத்திருச்சு’ என்று நாம்தான் கிர்ராக வேண்டும். ரஜினி பதவிக்கு ஆசைப்படாதவர், பதவியை வைத்துக் கொண்டு ஆட்டம் போட நினைத்தாலும் அதை அனுமதிக்க மாட்டார், ரஜினியின் நோக்கமே அவர் முதல்வர் ஆவதல்ல. ஊழலை விரும்பாத ஒரு தலைவரை முதல்வராக்குவதுதான் என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். ஒருவேளை உள்ளே அதுதான் பேசப்பட்டாலும், நிஜத்தில் நடக்க கூடியதா அது? அந்த கூட்டத்தில் ரஜினி இத்தகைய கருத்துக்களை மாவட்ட செயலாளர்களிடம் விவாதிக்க வேண்டிய தேவைதான் என்ன?

ரஜினி தன் மனதில் முதல்வர் ஆக வேண்டும் என்கிற ஆசை வைத்திருக்கவில்லை. இந்த விஷயத்தை நாட்டு மக்களிடம் முதலில் விதைப்பதுதான் அசைன்ட்மென்ட். ‘இந்தியாவிலேயே இப்படியொரு தலைவன் இல்லையே..’ என்று ஜனங்கள் மூக்கில் விரல் வைக்க வேண்டும். அதுவே ஓட்டாக கன்வெர்ட் ஆகும் என்கிற கணக்குதான் அது.

சாதி சங்கத் தலைவர் ஏ.சி.சண்முகமும், அமைதியே உருவான(?) கராத்தே தியாகராஜனும் ரஜினியின் கட்சிக்குள் வந்துவிட்டால், அதற்கப்புறம் அது எப்படி மூக்கில் விரல் வைக்கக் கூடிய கட்சியாக இருக்கும்? போதும் போதாதற்கு மதுரையில் காந்தி வழியில் அரசியல் செய்து வரும் மு.க.அழகிரியும் ரஜினி கட்சிக்குள் ஐக்கியமாகப் போகிறாராம். இந்த ஒரு புரிதலிலேயே தன் இமேஜ் மீது தானே ஃபுல் ஸ்டாப் அடித்துக் கொள்ளும் ரஜினி, இத்தகைய சினிமா கதை ஸ்டன்டுகள் எப்படி மக்களிடம் பரவி அது ஓட்டாக உருமாறும் என்று நம்புகிறார்?

ஐயோ பாவம்… சினிமா ஹீரோக்கள் திரையில் போட்டது போதாது என்று நிஜத்தில் போடுகிற ஸ்டன்டுகளுக்கும் பேக்ரவுன்ட் மியூசிக் தேவைப்படுகிறது. அதை இளையராஜா, ரஹ்மான்களை விட சிறப்பாக செய்து வருகிறார் நம்ம ரங்கு பாண்டி!

RAJINIKANTH , ELEPHANT RIDER SHOWING BANANA INFRONT OF ELEPHANT





RAJINIKANTH , ELEPHANT RIDER SHOWING BANANA INFRONT OF ELEPHANT 


முன் குறிப்பு- இங்கு சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை படித்துவிட்டு என்னை சீமான், ஸ்டாலின், எடப்பாடி, தினகரன், விஜய் மற்றும் யாரெல்லாம் மனசில் வருகிறார்களோ, அவர்களின் சொம்பு, கூஜா, டபரா என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் எழுத வேண்டியது என் வேலை. ஏற்றுக் கொள்வதும், தூற்றித் தள்ளுவதும் அவரவர் தலையெழுத்து!

மன்னை சாதிக் என்ற மாங்கா மடையனை பற்றிக் கூட தன் பொன்னான பத்திகளில் சில எழுத்துக்களை ஒதுக்க வேண்டிய அளவுக்கு செய்தி பஞ்சத்தில் தத்தளித்து வருகின்றன ஊடகங்கள்! ஒரிஜனல் நிலைமை இப்படியிருக்க, நாடே விரும்புகிற ஒரு சூப்பர் நடிகரை பற்றி எழுதினால், பேசினால், காட்சியாக காட்டினால் தன் சாப்பாடு தூக்கத்தை கூட விட்டுவிட்டு கேட்பார்கள். இந்த ஒரு காரணத்திற்காகதான் பொருந்தாத சேற்றுக் குவியலை உருட்டி உருட்டி அரசியல் சட்டி செய்து கொண்டிருக்கிறது மீடியா.

இதை வைத்துக் கொண்டுதான் கடந்த 25 வருஷமாக அரசியல் வானத்திலும் மின்னலடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. மின்னலின் நேரம் சில நிமிஷங்கள்தான். ரஜினியும் அரசியலில் அவ்வளவுதான் தாக்குப் பிடிப்பார் என்பதை, அவரே தன் வாயால் தெள்ளந் தெளிவாக எடுத்து சொல்லிவிட்டார் கடந்த வாரம்.

2017 ல் 234 தொகுதியிலும் தனித்து நிற்பேன் என்றவர், கள நிலவரத்தை அலசி ஆராய்ந்த பின்புதான், போன வாரம் முழு தெளிவோடு மைக்கை பிடித்தார். தலைவர் அரசியலுக்கு வரப்போறார் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். திமுக- அதிமுக வுக்கு மாற்றாக ஒரு தலைமை வரவேண்டும் என்று அன்றாடம், முருகன் அல்லா ஏசுவிடம் வேண்டுகிற ஒரு ஏமாளி நான்.

அப்படியிருக்க, ரஜினியின் வரவை கொண்டாட வேண்டியதுதானே? அங்குதான் இடிக்குது எல்லாம். இந்த சமூகத்திற்காக ஒரு துரும்பை கூட கிள்ளி வைக்காத பெருமை தனக்குண்டு என்பது ரஜினிக்கு தெரிந்தளவுக்கு அவரது ரசிகர்களுக்கு தெரியாததுதான் இந்த நாடகத்தின் நீண்டகால சஸ்பென்ஸ். ரஜினியின் சம்பாத்தியத்திற்கு மட்டும் வாயிருந்தால், அதுவே சொல்லியிருக்கும். “ஒரு அநாதை இல்லம் கட்டுங்க. ஏழைகளுக்காக ஒரு ஸ்கூல் கட்டுங்க. எங்கேயாவது குக்கிராமத்துல ஒரு மருத்துவமனை கட்டுங்க” என்று. ஆனால் அதற்கும் வாய் இல்லை. ரஜினிக்கும் மனசு இல்லை. கட்டிய ஒரே ஒரு கல்யாண மண்டபத்திலும் ஏழைகளுக்கு இடமில்லை. அந்த மண்டபத்தின் வாடகையை கேட்டால் தலை கிர்ருன்னு சுத்தும். (சேவை விஷயத்தில் நேற்று முளைத்த சின்னப்பையன் சூர்யாவிடம் பாடம் கற்கலாம் ரஜினி)

சிஸ்டம் சரியில்ல… அதை சீர் செய்யாமல் ஓய மாட்டேன் என்று கிளம்பியிருக்கும் ரஜினி, நிஜமாகவே சிஸ்டம் மேக்கரா? ரஜினியின் நிர்வாக லட்சணத்திற்கு ஒரு உதாரணத்தை காட்டட்டுமா?

மகள் படமெடுத்தார். ஊரெல்லாம் கடன். கட்ட முடியாமல் ஊடகங்களில் சிரித்தது மானம். மனைவி பணக்கார மாணவர்களுக்காக ஒரு ஸ்கூல் நடத்தினார். வாடகை பாக்கி. மறுபடியும் மீடியாவில் சிரிப்பு சப்தம். போய் தொலையட்டும்… சொந்தமாக படமெடுத்தார். அதுதான் பாபா. பலத்த நஷ்டம். அதுவரை வெற்றியின் தோளில் இருந்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, அதற்கப்புறம் கீழே விழுந்து எழவே இல்லை. இப்படி ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே ஒழுங்காக செயல்பட முடியாத ரஜினி, அகண்ட தமிழ்நாட்டை அகாசத்துக்கு உயர்த்துவாராம். ரசிகர்கள் நம்பலாம்… மீடியாவும் நம்புவதுதான் ஹய்யோ ஹய்யோ!

அட, தன்னை வாழ வைத்த மக்களுக்காகதான் ஒன்றும் செய்யவில்லை. தன்னை வாழ வைத்த சினிமாவுக்காகவாவது ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை. தமிழ்சினிமாவில் ரவுடியிஸம் தொடங்கி, சிறு படங்களை முடக்கி அதன் ரத்தம் குடித்து உயிர் வாழும் பெரிய பட விநியோகஸ்தர்களும், தியேட்டர் மாஃபியாக்களும் ரஜினி போன்றவர்கள் சாட்டை வீசினால் தலைகால் தெறிக்க ஓடியிருப்பார்கள். பட் ரஜினி? தானுண்டு, தன் சம்பளம் உண்டு, தன் ஜிஎஸ்டி உண்டு என வாழ்பவராச்சே? நடிகர் சங்க கட்டிடம் கூட ரஜினி கமல் போன்ற ஆளுமைகளால் முன்னெடுக்கப்படவில்லை. சாதா நடிகன், சின்னப்பையன் விஷால் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

நாடு சீராக வேண்டும் என்று நினைப்பவர், எப்போதாவது தன் படத்திற்கு அநியாய டிக்கெட் விலை கூடாது என்று விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் சொல்லியிருக்கிறாரா? தன் ரசிகர்களிடம், அநியாய விலைக்கு டிக்கெட் விற்றால் வாங்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரா? ரஜினியின் சினிமா தூய்மை இப்படி! நாட்டின் மீதான தூய்மைக்கு வருவோம்…

‘நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவேன்’ என்று சொன்ன ரஜினி, அந்த முயற்சிக்காக ஒரு இயக்கம் துவங்கி தானே புரட்சியை முன்னெடுத்திருக்கலாமே? அன்று அவர் சொன்ன ஒரு கோடி ரூபாயின் இன்றைய பண மதிப்பு சுமார் 100 கோடியாக உயர்ந்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அது ஆயிரம் கோடியாக உயரும். அப்போதும் நதிகளை இணைக்க மாட்டார்கள் என்பது ரஜினிக்கு தெரியும்.

எப்படி நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவதாக சொன்னாரோ, அப்படிதான் நாட்டில் புரட்சி வந்தால் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். இரண்டுமே நடக்காது என்பது ரஜினிக்கு தெரியாதா என்ன?

‘ஒரு நல்ல மனுஷன், இந்த நாடு இப்படி இருக்கணும்னு ஆசைப்படுறாரு. தன்னை தேடி வரும் முதல்வர் பொறுப்பை கூட எனக்கு வேண்டாம் என்று இடது கையால் தட்டிவிடுகிற ஒரு ஆள் இந்த நாட்டில் இருக்கிறாரா, ரஜினியை தவிர?’ என்று ரசிகர்கள் ஆக்ரோஷமாக கேட்கிறார்கள். ஆட்சி தலைமை வேற, கட்சித் தலைமை வேறயா இருக்கணும்னு நினைக்கிறாரு. அது தப்பா? என்று அப்பாவியாக கேட்கிற ரசிகன் இருக்கிற வரைக்கும், ரஜினி புது புது ஸ்டன்ட்டுகளை அடித்துக் கொண்டே இருப்பார்.

‘நானே வீடு தேடிப்போய் நல்லவங்களை அரசியலுக்கு வாங்கன்னு கூப்பிடுவேன்’ என்கிறார் ரஜினி. சூப்பர்… கைதட்டுகள் ஷ்யூர். ஆனால் மறுநாளே நீங்கள் போய் நின்றிருக்க வேண்டிய இடம், சகாயம் ஐ.ஏ.எஸ் வீடாகதானே இருந்திருக்க வேண்டும்? வீட்டுக்கொரு குடி நோயாளியை உருவாக்கி வைத்திருக்கின்றன கழகங்கள். குவார்ட்டரே சொர்க்கம், குடியே கொள்கை என்று தமிழன், நாயை விடவும் கீழான விலங்காகி விட்டான். இந்த நாட்டில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவது?

இருந்தாலும் ரஜினி சொன்னதை அடிமனதிலிருந்து நிஜமாகவே சொன்னதாக எடுத்துக் கொள்வோம். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி சுற்றுப்பயணம் செய்ததை போல மறுநாளே கிளம்பி தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத் திட்டத்தை அறிவித்திருக்க வேண்டுமல்லவா?

சினிமாவில் அசந்த நேரம் டூப் போட்டுக்கொள்ளலாம். சுற்றுப்பயணம் என்றால், ரசிகனின் வியர்வை படும். வெயில் படும். நெற்றி வேர்வை நிலத்தில் படும். அவ்வளவு ஈஸியா அதெல்லாம்? அதற்குதான் எடுபிடிகள் இருக்கிறார்களே? தான் ஆசைப்பட்டதை ஊர் ஊராக கொண்டு சேருங்கள் என்று மாரிதாஸ்களையும், பரத்களையும், ரவீந்திரன் துரைசாமிகளையும், ரங்கராஜ் பாண்டேக்களையும் தேடி தேடி அழைக்கிறார் ரஜினி. பிரதி உபகாரம் ஒரு செல்பி. அது போதாதா இவர்களுக்கு?

‘இப்ப இல்லாவிட்டால் எப்பவும் இல்ல’! இதுதான் ரஜினி தன் ரசிகர் மன்றத்திடம் சொல்லி ஊர் ஊராக கொண்டு செல்ல பணித்திருக்கும் ஸ்லோகன்! இவ்வளவு வருடங்களாக ஏதோவொரு நம்பிக்கையில் ஆவிபோக உழைத்த ரசிகன், இப்போதும் தன் தொண்டை தண்ணி வறள்கிற அளவுக்கு ‘இப்ப இல்லாவிட்டால் எப்பவும் இல்ல’ மந்திரத்தை முழங்க ஆரம்பித்திருக்கிறான்.

இப்பவும் நமது ஆசை தி.மு.க- அ.தி.மு.க இல்லாத ஒரு மாற்று ஆட்சிதான். அதற்கு ரஜினி லாயக்கான தலைவர் இல்லை என்பதுதான் நிஜம். இது புரியாத ரசிகனுக்கு அந்த ஸ்லோகனின் நிஜ அர்த்தத்தை சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?

வாலிப வயசில் விசிலடிக்கத் துவங்கி, ஆஸ்துமா துரத்துகிற இந்த வயசிலும் ரஜினிக்காக விசிலடிக்கும் அண்ணன்களே… அந்த ஸ்லோகனின் நிஜ அர்த்தத்தை இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள்.

அது, இப்பவும் இல்ல! இனி எப்பவும் இல்ல!

அதிமுக்கிய குறிப்பு- விஜய், அஜீத் உள்ளிட்ட சினிமாக்காரர்களுக்கும் முதல்வர் ஆசை வந்தால், முதல் ஆளாக கல் எறிவேன். ஏனெனில் நீங்கள் கோமாளிகள். நாங்கள் ஏமாளிகள் அல்ல!

-ஆர்.எஸ்.அந்தணன்

Sunday, 17 May 2020

RAJINIKANTH , ALWAYS TRUE HIMSELF IN HEART - NO CHANGE -NO FRAUD




RAJINIKANTH , ALWAYS TRUE HIMSELF  IN HEART - NO CHANGE -NO FRAUD 
AFTER 5 YEARS BACK


ரஜினி - மாறாதவர் இருவது வருசத்துக்கு பிறகும் #ரஜினிரஜினிதான்

1995 டிசம்பர் 12. ரஜினியின் 46வது பிறந்தநாளை எந்தவொரு ரசிகனாலும் மறந்துவிட முடியாது. துர்தர்ஷனில் ரஜினி அளித்த பேட்டியை இரண்டு நாளும் கண்டு ரசித்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக வந்து குவிந்த கேள்விகளிலிருந்து 46 கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் ஸ்டாரின் பதிலோடு ஒளிபரப்பானது. கேள்விகளும் பதில்களும் இங்கே...

1. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பற்றி சில வார்த்தைகள் - டாக்டர் பாரதிமோகன், தஞ்சை

என்னை வந்து ஸ்டைல் கிங்குன்னு சொல்றாங்க. நான் ஸ்டைல் கிங்குன்னா சிவாஜி ஸார் ஸ்டைல் சக்ரவர்த்தி. நடிப்பிலேயே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.


2. பிரதம மந்திரி நரசிம்மராவ் பற்றி உங்கள் கருத்து ? கங்காதரன், வேலுர்

இந்தியாவிற்கு சுதந்திரம் வந்திலிருந்து நேரு குடும்பத்தைத் தவிர யாருமே பிரைம் மினிஸ்டராக ஐந்து வருடத்தை கம்ப்ளீட் செய்தது கிடையாது. ஒரு மைனாரிட்டி அரசை வைச்சுக்கிட்டு பெரியவர் நரசிம்மராவ் அஞ்சு வருஷத்தை கம்ப்ளீட் பண்ணியிருக்கார் என்றால் அது மிகப்பெரிய விஷயம். அதில்லாம பொருளாதார ரீதியாக உலக அளவில் நம்ம இநதியா பேசப்படுகிற அளவுக்கு கொண்ர்ந்து இருக்காங்க. இது மிகப்பெரிய சாதனை.

3. உலகில் எப்பவும் இன்பமாக இருப்பவர் யார்? பாண்டியன், திண்டுக்கல்.

மூன்று பேர். ஞானி, குழந்தை. பைத்தியக்காரன். ஞாநி எல்லாத்தையும் அறிந்தவர். குழந்தை எதையும் அறியாதது. பைத்தியக்காரன், எதுவும் அறியாத, எதுவும் தெரியாத ரெண்டுங்கெட்டான்.

4. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன திட்டமிட்டு இருக்கிறீர்கள்? புவனேஸ்வரி, மதுராந்தகம்.

நான் திட்டமெல்லாம் வைக்கமாட்டேன். என்னோட இமேஜ், என்னோட பணம், என்னோட அந்தஸ்து அது இது எல்லாம் என்னுடைய பிள்ளைங்களை பாதிக்கக்கூடாது. அவங்கங்க சொந்தக் கால்களில் நிற்கிற மாதிரி செய்யணும். என்னோட ஐடியாவை அவங்க மேலே திணிக்கக்கூடாது. அதான் பார்த்திட்டிருக்கேன்.

5. உங்களுடைய பலம் எது? பலகீனம் எது? மண்ணாடி கோபி, எர்ணாவூர்

என்னுடைய பலம்...... உண்மை. பலகீனம் கோபம்,

6. அம்மா, தெய்வம் இதில் யாருக்கு முக்கியத்துவம் தருவீர்கள்? திவாரி, சென்னை

கண்டிப்பாக அம்மாவிற்குத்தான்.

7. காந்தியடிகள் பற்றி உங்களது கருத்து? உலகரத்தினம், தேவிப்பட்டினம்

உண்மையின் வடிவம். மிகப்பெரிய யோகி.

8. அடுத்த பிறவியில் எங்கு, யாராக பிறக்க விரும்புகிறீர்கள்? சூர்யாதேவி, குன்னுர்

இந்தப்பிறவிதான் கடைசிப்பிறவியாக இருக்கணும்னு நினைக்கிறேன். சத்தியமா.... ஐய்யயோ.. அடுத்த பிறவியே வேண்டாம்!

9. என்.டி.ஆர் மனைவி லட்சுமிபார்வதியை நீங்கள் விமர்சனம் செய்தது பற்றி ? கோகிலா, விஜயவாடா

பாருங்க... நான் அங்க் சொன்னது.. ஒரு பேராசை கொண்ட பெண்ணால நாட்டையும் வீட்டையும் எப்படிக் கெடுக்க முடியும்.. அப்படித்தான் சொன்னேன். அங்க பேராசைய விட்டுட்டாங்க... ஒரு 'பெண்ணால' என்கிற வார்த்தையை மட்டும் பிடிச்சுக்கிட்டாங்க. துஷ்டசக்தின்னு சொல்றது பேராசை, பழியுணர்ச்சி, சுயநல்ம். இதெல்லாம் துஷ்டசக்திகள்தான். சிலபேர் இத வெச்சுக்கிட்டு நான் பெண்களை மதிக்கலை, நான் பெண்களுக்கு எதிரானவன்னு செர்ல்லிக்கிட்டு இருக்காங்க. நான் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பு மரியாததை வெச்சுருக்கேன் என்பது அந்த ஆண்டவனுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்.

10. ஆன்மீகம், அரசியல் ஒப்பிடுக. ரஜினி பாபு, கடலுர்

அது ஒப்பிடவே முடியாதுங்க. அது ஒப்பிடவும் கூடாது. ஏன்னா இரண்டுமே பாம்பும் கீரியும் மாதிரி. எதிர்எதிர் துருவம்.

11. எளிமை, பணிவு, அடக்கம் யாரிடமிருந்து இந்த தாரக மந்திரத்தை கற்றுக்கொண்டீர்கள்? குலாம் முகமது, நாகை.

சிவாஜி ராவ்கிட்டேயிருந்து.

12. பொது நிகழ்ச்சிகளில் தாடியுடனும் மீசையில்லாமலும் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. உங்களது இமேஜ் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லையா? லெனின், நெல்லை

இல்லைங்க... வெளித்தோற்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் என்னை நேசிக்கிறது என்னுடைய உள்ளத்தை என்று எனக்கு நல்லாத் தெரியும்.

13. பாரதியார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இவர்களை பற்றி ஒவ்வொரு வரி கூறுங்கள். (தாமஸ், திருவனந்தபுரம்)

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினையே அழித்திடுவோம் என்று முழுங்கிய ரெபெல் பொயட் பாரதியார்

பெரியார், தன்னை நாத்திகன் என்று அழைத்துக்கொண்ட மிகப்பெரிய ஆன்மீகவாதி

உண்மையான படிக்காத மேதை காமராஜர்

மாபெரும் தலைவர் அண்ணா

எம்.ஜி.ஆர் நடிகர் குலத்துக்கே மிகப்பெரிய மரியாதையை கொண்டு வந்தவர்.

14. ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது? (வீ. நாராயணி, திருத்துறைப்பூண்டி)

(சிறிது யோசனைக்குப் பின்னர்) அவங்களுடைய தன்னம்பிக்கை.

15. அரியாசனத்தில் அமர்ந்து ரசிப்பது, ஆண்டியாய் உலகத்தை சுற்றுவது. இதில் எது அதிக இன்பம்? (சரவணன், திருச்சி)

ஒண்ணுதான் பார்த்திருக்கேன். இன்னொன்னு பார்க்கலை. ஒரு வேளை அதையும் பார்த்தால் அதுக்கப்புறம் எதில இன்பம்னு சொல்றேன்.

16. மனிதன் எப்போது மகானாகிறான்? (பி. சாந்தா, மதுரை)

தன்னைத் தான் உணரும்போது.

17. உங்களின் உடலை எடை போடாமல் எப்படி கச்சிதமாக வைத்துக்கொள்ள முடிகிறது? ( கஜேந்திரன், பொள்ளாச்சி)

கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் உறக்கம். கொஞ்சம் உடற்பயிற்சி. கொஞ்சம் யோகா. கொஞ்சம் தியானம். எல்லாத்துக்கு மேல் ஒவ்வொருத்தருடைய உடல் அமைப்பு.

18. எப்போதாவது கண்ணாடியில் சிவாஜிராவை பார்த்ததுண்டா? (ஆன்ந்த், கடலுர்)

சிவாஜி ராவை பார்க்காத நாளே கிடையாது.

19. சில அரசியல் தலைவர்கள் நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? (செல்வம், திண்டிவனம்)

வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்.

20. அப்பா, அம்மா செய்த புண்ணியம் குழந்தைகளை வந்து சேரும் என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? (வேதவல்லி, திருவல்லிக்கேணி)

அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அவங்கவங்க செய்த பாவ, புண்ணியம் அவங்கவங்களைத்தான் போய்ச்சேரும்.

21. அடிக்கடி மேல்நாடு போறீங்களே தலைவா... மேல்நாட்டு மக்களோடு இந்திய மக்களை ஒப்பிட முடியுமா? (பாலகிருஷ்ணன், சிங்கப்பூர்)

செண்டிமெண்ட், அட்டாச்மெண்ட். இந்த சொந்தம் பந்தமெல்லாம் அங்கே கிடையவே கிடையாது. அதனால அவங்க கஷ்டப்படுறாங்க. இந்த செண்டிமெண்ட் அட்டாச்மெண்டெல்லாம் இங்கே ரொம்ப ஜாஸ்தி. அதனால நாம கஷ்டப்படறோம்.

22. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பற்றி (ராம் மணி, ராஜபாளையம்)

காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் கல்லும் முள்ளும் இருக்கிற பாதையில் நடக்கிற மாதிரி.

23. உங்கள் கருத்தை என்றைக்காவது யாருக்காகவாது மாற்றியதுண்டா? (சி. தெ. ரஜினி அருள், மணக்காடு)

இல்லவே இல்லை.

24. முதன்முதல் உங்களுக்கு அறிவுரை சொன்னது யார்? (கே. தேவி, பூநகரம்)

எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே முதன்முதலா அறிவுரை சொல்றது தாய்தான்.

25. நீங்கள் அடிக்கடி இமயமலைக்கு எதை நாடி செல்கிறீர்கள்? (என். சுப்ரமணியன், கல்கத்தா)

என்னை நான் நாடிச் செல்கிறேன்.

26. ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்? (ஆர். கவுஸ், நாகூர்)

பாருங்க... வெளியூரிலிருந்து என்னை மெட்ராஸ் வந்து பார்க்கணும்னா 400 ரூபாய் செலவு செஞ்சிட்டு வந்தாகணும். ஆளுக்கு 400 ரூபாய் என்றார் இருபத்தைந்தாயிரம் பேருக்கு ஒரு கோடி. ஐம்பதாயிரம் பேருக்கு இரண்டு கோடி. இவ்வளவு பணம் வேஸ்ட். இரண்டாவது லாரி, பஸ் வேன்களில் வரும்போது நிறைய ஆக்சிடெண்ட் நடந்திருக்கிறது. அதில் நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு. நிறைய பேர் இறந்தும் போயிருக்காங்க. மூன்றாவது இதனால பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல் வரும். இதையெல்லாம் தடுக்கறதுக்காகத்தான் நான் வந்து என் பிறந்த நாள் அன்றைக்கு யாரையும் சந்திக்கிறது இல்லை.

27. தியானத்தின் போது மனம் அலைபாய்கிறதே.. அதை கட்டுப்படுத்துவது எப்படி? (ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை)

இந்தக்கேள்வியை நிறையப் பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க. சில பேர் அதை டிரை பண்றாங்க. அது கட்டுப்படுத்த முடியாது. அதற்கப்புறம் கட்டுப்படுத்த முடியாமல் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வந்துடுது. அது தேவையேயில்லை. அதைப்பற்றி கவலைப்படாதீங்க. காலையில் எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. அங்கு உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் நீங்க பாலோ பண்ணுங்க. அது எங்காவது போகட்டும். எது பின்னால போகட்டும். யாரு பின்னால போகட்டும். ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க.அப்புறம் எழுந்திடுங்க. அதை கண்டினியூ பண்ணுங்க. அதை பண்ண பண்ண அப்படியே வந்து மனசு உங்க கண்ட்ரோல்ல வரும். அப்ப வந்து உங்க இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பற்றி கான்ஸண்ட்ரேட் பண்ண முடியும். இது எப்படின்னு சொன்னா, ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதான் புதுசா போட முடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அது வந்து இயற்கை. அதைப்பற்றி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க.

28. ஒரு பத்திரிக்கையிலும் டிவியிலும் உங்களைப் பற்றி ஒரு நடிகர் கடுமையாக விமர்சித்து உள்ளாரே.. அதைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க... ரத்தம் கொதிக்குது தலைவா! (லக்மான் கஜினி, திருச்சி)

கண்ணா... இது ஜனநாயக நாடு. அவுங்கவுங் கருத்தைச் சொல்ல எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கு. பைதபை நான் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

29. பாம்பு என்றால் படையும் நடுங்கும். நீங்க எப்படி பாம்பு கூட நடிக்கிறீங்க? (மூர்த்தி, சமயபுரம்)

உண்மையில பாம்புன்னா எனக்கு ரொம்ப பயங்க. என்ன பண்றது படத்தில பார்த்தீங்கன்னா பாம்பை கையில பிடிச்சிக்கிறது, உடம்பு மேல போட்டுக்கிறது. இந்த மாதிரியே வருது. நான் கூட வாங்குற பணத்தை நினைச்சுக்கிட்டு செஞ்சுடறது.

30. உங்களுடைய ரசிகர்களில் நிறைய குழந்தைகளும் இருக்காங்க். அவங்களுக்கு நீங்க என்ன சொல்றீங்க? (சரோஜா, அரக்கோணம்)

குழந்தைங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க. டி.வி பார்க்கிறதை கொஞ்சம் கம்பி பண்ணிக்கோங்க. நிறைய விளையாடுங்க. அப்பத்தான் உடம்பு நல்லா இருக்கும். மனசும் நல்லா இருக்கும்.

31. ஆரம்பகால ரஜினி முன்கோபக்காரர், இப்போதைய ரஜினி? (ரஜினி முருகன், திருச்செந்துர்)

ஒரே ரஜினி, அதே ரஜினிதான்.

32. சமீபத்தில் நடந்த உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை கூறுங்கள் (ஜி. வாசுதேவன், கோவை)

பாட்ஷா வெற்றி விழா பங்க்ஷனுங்க. வாழ்க்கையில மறக்கவே முடியாத நிகழ்ச்சிங்க.

33. உன் பிறந்தநாளன்று மிகவும் பவர் உள்ள வெடிகுண்டு வைத்து உன்னை கொல்லப் போகிறேன். சின்னப்பயலான உன்னைக் கொல்ல எனக்கே மனசு கஷ்டமாக இருந்தாலும் உன் தொல்லை தாங்கமுடியவில்லை. (மொட்டைக்கடிதம்)

உங்க மனசாட்சியை கேட்டுப்பாருங்க. நீங்க கும்பிடற ஆண்டவனை கேட்டுப்பாருங்க. ரெண்டுபேருமே சரின்னு சொன்னா கோ அஹெட். என்னிக்கோ ஒரு நாளைக்குப் போக வேண்டியதுதானே. கொஞ்சம் சீக்கிரமா போயிடலாம்.

34. பல அரசியல் கட்சியை சேர்ந்தவங்க உங்களுக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்களே, அது பற்றி உங்கள் கருத்து ? (ரஜினி கார்த்திக், திருவாரூர்)

உண்மைதான். இப்ப நடக்கிற அரசியல் எனக்குத் தெரியாது. இவங்க நடத்துற அரசியல் எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்ச அரசியல் எல்லாம், அரசியல் என்பது பொதுநலம். சுயநலவாதிங்க பொதுநலத்திற்கு வரக்கூடாது. சுயநினைப்பு உள்ளவங்கள பொதுநலத்திற்கு இழுக்கக்கூடாது. ஏழையை ஏழையா இருக்கவிடக்கூடாது. சிலர் வாழ பலரை தாழ விடக்கூடாது.

35. வெடிகுண்டு தமிழ்நாட்டுல வெடிக்கிறது மட்டும்தான் உங்க காதுல கேட்குதா? பிற மாநிலங்கள்ல வெடிக்கிறது உங்க காதுல கேட்கலையா? அதுக்கு குரல் கொடுக்காத நீங்க இதுக்கு மட்டும் குரல் கொடுக்க என்ன காரணம்? (தமிழ் மணி, கரூர்)

முதல்ல நம்ம வீட்டை சுத்தப்படுத்துவோம். அதுக்கப்புறம் வேற வீட்டை பார்ப்போம்.

36. உங்களுக்கும் பிரதமருககும் நடந்த சந்திப்பு பற்றி (ரமணி, அண்ணாநகர்)

அதுபற்றி இப்ப எதுவும் சொல்ல விரும்பலை. That's not a coutesy one. It has some significance. நேரம் வரும்போது நானே சொல்றேன்.

37. தலைவா, நீங்க ஏதோ அரசியல் கட்சில சேர்ற மாதிரி பேச்சு அடிபடுதே.. இது எல்லாம் என்ன தலைவரே? ( சதாசிவம், டால்மியாபுரம்)

கண்ணா, நான் எந்தக் கட்சியிலேயும் சேரலை. சேரவும் மாட்டேன். கவலையே படாதீங்க. அப்படியே வந்தா தனிக்கட்சிதான்.

38. இலங்கையில் நடக்கும் சம்பவம் பற்றி ( வீரபத்திரன், பட்டுக்கேர்ட்டை)

இதுக்கு உடனடியா ஒரு முற்றுப்புள்ளி வெச்சுத்தான் ஆகணும். அப்பாவி மக்கள் சாகறதை பற்றி நான் ரொம்ப வேதனைப்படறேன். கடுமையாக கண்டிக்கிறேன்

Saturday, 16 May 2020

RAJINIKANTH -IN A SIGHT FROM DMK



RAJINIKANTH -IN A SIGHT FROM DMK
மனிதர்களில் பலவகை ,
ஆனால் ரஜினிகாந்த் தனி வகை
ஒரு திமுக தொண்டனின் ஆற்றாமை 


மனிதர்களில் பலவகை பார்த்திருப்போம், ஆனால் ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்கமாடோம்
அவர் இப்பொழுதெல்லாம் ரசிகர்களை அதிகம் சந்திக்கின்றாராம், இவ்வளவு நாள் எங்கிருந்தார் என கேட்க கூடாது, இங்குதான் இருந்தார்.

சந்தித்து பல முத்தான கருத்துக்களை தெரிவிக்கின்றார் எது தெரியுமா? 21 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அரசியல் கூட்டணியினை நான் ஆதரித்தது ஒரு விபத்து, என்னை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டார்கள் என்றெல்லாம் அன்னார் பொன்மொழியினை அள்ளி தெளித்திருக்கின்றார்

எது விபத்து மிஸ்டர் ரஜினிகாந்த்?

திரையுலகில் நீங்கள் வளர்ந்துவிட கூடாது, என குறிவைத்து விரட்டிய எம்ஜிஆர் காலமா?

அக்காலத்தில் கலைஞர் கைகொடுத்து சூப்பர்ஸ்டார் என பட்டம் கொடுத்த காலமா?

எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 100 படத்தின் பிற்பகுதியினை உங்களை வைத்து தயாரிக்க வந்த தயாரிப்பாளரை எம்ஜிஆர் ஓட விரட்டினாரே அது விபத்தா?

கத்திப்பாரா ஓட்டபந்தயம் விபத்தா? அல்லது அடுத்த எம்ஜிஆர் எனும் அடைமொழி வராமல் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காவல் காத்தார்களே அது விபத்தா?

மணிரத்னம் வீட்டு குண்டுவெடிப்பும், அதனை தொடர்ந்த உங்கள் சீற்றமும் எல்லாம் விபத்தா?

ஜெயா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என சொன்னது விபத்தா?

மூப்ப்பனரும், சோவும் உங்களை சந்தித்து ஆதரவு கேட்டபொழுது தமிழமெங்கும் சைக்கிள் சின்னத்துடன் போஸ் கொடுத்தது விபத்தா?

அதன் பின்னும் ஆட்சி மாறியபின் அதிமுக கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்ததும், என் வோட்டு அதிமுகவிற்கு என சொன்னதும் விபத்தா?

இவ்வளவு நடந்தும் கலைஞர் உங்களை சரிக்கு சமமாக தன் அருகே அமர வைத்ததும், ஜெயா ஒரு கூட்டத்தின் பின் வரிசையில் உங்களை நிற்க வைத்ததும் விபத்து என்றா நினைக்கின்றீர்கள்???

மனிதர் எவ்வளவு வன்மமாக பேச தொடங்கிவிட்டார், அரசியல்வாதிகள் பொய் சொல்வார்கள், அரசியல்வாதிகள் சந்திக்கும் நபர்களுமா பொய் சொல்வார்கள்? நல்ல வேளையாக இம்மனிதர் கட்சி தொடங்கவில்லை

நான் அரசியலுக்கு வந்தால்... என மறுபடியும் இழுத்திருக்கின்ரார். நான் அரசியலை விட்டு சென்றுவிடுவேன் என சிலநேரங்களில் கட்சிக்குள் அஸ்திரம் வீசும் தலைவர்கள் உண்டு, அரசியலுக்கு வந்துவிடுவேன் என சொல்லியே இத்தனை காலம் கடத்தும் ஒரு விசித்திர மனிதனை இப்பொழுதுதான் பார்க்கின்றோம்

பசுமாட்டின் முன் கன்றினை கட்டி பால்கறக்கும் வித்தை இது, ரசிகர்கள் முன் இப்படி சொல்லி சொல்லியே பாக்கெட்டில் இருப்பதை கறந்து கொண்டிருக ்கின்றார் இவர்

ஆனால் இம்முறை ரஜினியின் வார்த்தைகள் வழக்கமான அவரின் காமெடி அல்ல, இதன் பின் பெரும் தந்திர திட்டங்கள் இருக்கலாம், ரஜினி சும்மாவே கருப்பு பிராமணர் என்பதில் சந்தேகமில்லை
பிராமண சூதுக்கள் பொல்லாதது, ராஜாஜிக்கு பின் தமிழகத்தில் தங்கள் ஆட்சி இல்லை என்ற வன்மம் அவர்களுக்கு இருந்தது, ஆனால் எம்ஜிஆர் கிடைத்தார் ஓரளவு பயன்படுத்தினார்கள், பின் ஜெயாவின் மூலம் முயற்சித்தார்கள், ஜெயா நிச்சயம் இன்னொரு ராஜாஜியாக வந்திருக்கவேண்ட ியவர்

ஆனால் நடராஜன் ஜெயாவினை ஒரு வளையத்தில் கொண்டுவந்தார், அது தேவர் சாதி பிடியாயிற்று, இப்படித்தான் பிராமணர்கள் ஆட்சியாக வந்திருக்க வேண்டியது இன்னொரு தமிழ்சாதி ஆட்சியாக போயிற்று

இப்பொழுது பிராமண நோக்கம் இந்த கருப்பு பார்பணன் மூலம் வெளிவருகின்றது, ரஜினி இப்படி எல்லாம் பேச அதுதான் காரணம் இல்லாவிட்டால் அவருக்கு அல்மைசர் ஏற்பட்டிருக்க வேண்டும், அப்படியெல்லாம் ஏதும் மருத்துவ தகவல் இல்லை, டயலாக் நன்றாக பேசுவதாக ரஞ்சித் கூட சொல்லியிருந்தார்
இவரை, இவருக்கு சோதனையான 1980 முதல் பல இடங்களில் காத்தவர் கலைஞர், எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ ரஜினியிடம் முகம் கொடுத்து பேசியது கூட கிடையாது

அந்த கலைஞருக்கு 1996ல் அதுவும் தமிழகமே பொங்கிய காலங்களில் ஆதரவு தெரிவித்துவிட்டு இப்பொழுது விபத்து என்றால்...
தமிழச்சி மனோரமா முன்பு இவரை பற்றி சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது, இவர் அப்படித்தான் போல..

இவர் ரசிகர்களுக்கு மானம் இருக்கின்றதோ வெட்கம் இருக்கின்றதோ தெரியாது, ஆனால் இவருடனெல்லாம் இணைந்து குஷ்பூ நடித்தார் என்பதனை நினைத்து அவரின் ரசிகர்களான நாங்கள் பெரும் வருத்தம் கொள்கின்றோம்..

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடபடுபவர், தமிழகத்தின் நச்சுவிதை என்ற பட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்...

கொஞ்சநாளைக்கு முன்புதான் இலங்கைக்கு செல்லும் வழி அந்த லைக்கா சுபாஷ்கரன் மூலம்தான் தெரிந்தது என சொன்னவர்தான் இவர், அந்த அறிக்கையின் வியப்பே இன்னும் தீரவில்லை

அதற்குள் இப்படி விபத்து அறிக்கை...
இப்படி பகிரங்க பொய்களை சொல்லும் மனிதர் இன்னும் கட்சி தொடங்காதது நல்லது, தொடங்கவும் வேண்டாம் .