Showing posts with label KAMALAHASAN. Show all posts
Showing posts with label KAMALAHASAN. Show all posts

Friday, 22 May 2020

KAMALAHASAN VS SRIDEVI VS RAJINIKANTH





KAMALAHASAN  VS SRIDEVI VS RAJINIKANTH


.கமல் ,ரஜினி இருவருமே ஸ்ரீதேவி கதாநாயகியாய் அறிமுக படத்திலேயே நடித்தவர்கள் !
மூன்று முடிச்சு 1976 இல் வெளிவந்த படம் .

கமல் அதற்கு முன்னரே பல படங்களில் நடிப்பில்
டான்ஸில் அசத்தியவர் .பட்டிக்காட்டு ராஜாவில் சிறிய பாத்திரம் தான் .உன்னைநான் பார்த்தது
பாடல் தான் எஸ் .பி பி கமலுக்கு பாடிய முதல் பாடல் .

எஸ் .பி பி இடம் கேட்டபோது எனக்கு நினைவில்லை
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க என்றார் TV YIL . அதிலிருந்து தான் நான் கமல் ரசிகரானேன் .ஹேர் ஸ்டைல் உடை ,எல்லாமே அப்படியே !! மீசை பாணி வேறு

அப்புறம் 16 வயதினிலே .இந்த படம் பார்த்து ஸ்ரீதேவி மயிலு ஆனார் ,சாய் பல்லவி மலர் ஆனது போல . இவரை காதலிக்காத இளைஞர்கள் யாருமே இல்லை . நமக்கே இப்படின்னா கூட நடிச்ச கமல் ,ரஜினி பாடு
எப்படி இருக்கும் .கமலுக்கு வயது 23 ரஜினிக்கு 27 அப்புறம் இருவரும் இளமை ஊஞ்சலாடுகிறது ,அலாவுதீனும் அற்புத விளக்கு படங்களில் நடித்தனர் .என்றாலும் சிவப்பு ரோஜாக்கள் மாதிரி சோலோ வா ரஜினிக்கு படமில்லை அடிக்கடி ஸ்ரீதேவியுடன் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியதால் பத்திரிக்கைகள் இருவரைபற்றியும் கிசு கிசு வெளியிட்டது

அந்த நேரம் தான் ரசிகர்களுக்கும் ,ஸ்ரீதேவி மற்றும் பல கதாநாயகிக்கும் கமல் ஒரு ஷாக் கொடுத்தார் . அப்போதுதான் நான் சிவகாசியில் ஒரு கம்பனியில் அக்கௌன்டன்ட் ஆக வேலைக்கு சேர்ந்து இருந்தேன் .
பஸ்ஸை விட்டு இறங்கியதும் மாலைமுரசில் கமல் திருமணம் பிரிண்ட் ஆகியிருந்தது .வாணி கணபதி படம் போட்டிருந்தது .இந்த காலகட்டத்தில் FACIAL ASTROLOGY பற்றி RESEARCH பண்ணிக்கிட்டு இருந்தேன் .நீளமான முகம் ,நீளமான மூக்கு இருப்பவர்கள் somewhat dangerous இந்த அளவில் தெரிந்து வைத்திருந்தேன் .

அன்று இரவு பயங்கர கனவு .பேப்பரில் பார்த்த பெண்ணின் முகம் மேலிருந்து கீழாக பெரிதாய் கொண்டே போனது , மம்மூட்டி அய்யர் தி கிரேட் படத்தில் கண்ட மாதிரி .அப்புறம் மறுபடியும் ஸ்ரீதேவி - கமல் கிசுகிசு ஆரம்பம் ஆகியிருந்தது .இளமை ஊஞ்சலாகிறதுக்கு அப்புறம் ரஜினியும் பேசப்படும் அளவில் நடிக்க ஆரம்பித்து மௌசு கூடியிருந்தது .1977 இல் காயத்ரி படம் மூலம் ஸ்ரீதேவி தொடர்பு ஏற்பட்டது
வடக்கே மாதுரி தீட்சித் ஷாரூக்கானுடன் ஒரு படம் அமீர்கானுடன் ஒருபடம் வந்தது போல் ரஜினி,கமல் கூடவும் ஸ்ரீதேவி நடித்து வந்தார் .

ஆனால் ரஜினியை பொறுத்தவரை 1977 -78 களில் நடிகை லதாவுடன் காதல் ,எம்ஜியாரால் பட்ட தொல்லைகள் இவைகள் ரஜினியை அவர் மனதை கடும் உளைச்சலுக்கு உள்ளாக்கியது .ஒரு sex addict மாதிரி behave பண்ண ஆரம்பித்தார் .தர்ம யுத்தம் படப்பிடிப்பில் நடனம் ஆடிக்கொண்டிருந்த எக்ஸ்ட்ரா நடிகைகளை கையை பிடித்து இழுத்து ,வரமாட்டாளாமா? ! பத்து ரூபாய் கிராக்கிகள் என்கிறார்..கூட இருந்த ஸ்ரீதேவிதான் ரஜினியை அமைதிப்படுத்தினார் .இந்த காலகட்டத்தில் தான் ரஜினி வேண்டுகோளுக்கு இணங்கி அசைய முடியாமல் படுத்திருந்த ஸ்ரீதேவி ஆகாய கங்கை பாடலுக்கு படுத்தவாறே ,உக்காந்தவாறே டூயட் காட்சியில் நடித்து கொடுத்தார்

இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு கமல்கொ ஞ்சம் இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இருந்தார் .அப்போதெல்லாம் இந்திப்பட ,எஸ்ட்ராஸ் ,படப்பிடிப்பு இல்லைன்னா அங்கிருக்கும் நடிகருடன் சுத்தகிளம்பி விடுவார்கள் .அவ்வாறு சுத்த கிளம்பிய நடிகை ஒருத்தியுடன் கமல் ஒரு நாள் இரவு தங்கினார். மறுநாள் அந்த நடிகை கிளப்பி விட்ட செய்தி தமிழகத்தையே அதிர வைத்தது .கமலஹாசனுக்கு ஆண்மை இல்லைன்னு. நாங்கல்லாம் அந்த நடிகையை சபித்தோம் .அநேகமா இது 1984 அல்லது 1985 ஆக இருக்கும் .ஆனா ஒரு ஆறு மாசம் தான் இருக்கும் . சரிகா கமலின் குழந்தைக்கு தாயாக இருப்பதாய் பகிரங்கமாய் செய்தி வெளியிட்டார் (1985 ) அப்போது கமலஹாசனுக்கு ஏராளமாய் பெண் விசிறிகள் இருந்தனர் .அவர்களெல்லாம் இதனை ஸ்வீட் கொடுத்து கொண்டாடினர் .நான்லாம் ஷாக் ஆகி நின்றேன் சந்தோசத்துலதான்

ஆனால் ரஜினி ஸ்ரீதேவி கிசுகிசுக்கள் அக்காலத்தில் இல்லை . ஸ்ரீதேவியை ரஜினி பெண் கேட்டதும் இந்த காலகட்டத்தில் தான் . அப்போதெல்லாம் நடிகையின் காதலை நைசாக பேசி கழட்டி விடுவதில் நடிகையின் அம்மாக்கள் சூரர்களாய் விளங்கினார் .ஹேமமாலினி தாயார் ஜெயா சக்கரவர்த்தி ,சரோஜாதேவி தாயார் ருட்ரம்மா ,வைஜெயந்திமாலா பாட்டி யதுகிரி இவர்களுடன் ஸ்ரீதேவி தாயார் ஸ்ரீ அம்மா அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்

ஸ்ரீதேவி பிறந்த தேதி ஆகஸ்ட் 13 ,1961 -ஆனா 1963 என்று ரிக்கார்டுகளில் இருக்கும் .அதன் படி பார்க்கும் போது சுமார் 11 வயது வித்தியாசம் இருந்தது .மேலும் ரஜினி பற்றி அந்த நேரத்தில் நல்ல அபிப்ராயம் ஒன்றும் இல்லை .ஒரு காட்டு மிராண்டி ரேஞ்சிக்கு பத்திரிகைகள் அவரைப்பற்றி எழுதின . தர்ம யுத்தம் படப்பிடிப்பு சமாச்சாரங்கள் இவையெல்லாம் தான் ரஜினி ஸ்ரீதேவி திருமணத்தை நிறுத்தின .1981 இல் லதாவுடன் திருமணம் நடந்த பிறகும் ரஜினி பற்றி நெகடிவ் செய்திகள் வந்து கொண்டிருந்தன . ஆனால் அதன் பிறகு கமல் தான் ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ள போராடிக்கொண்டிருந்தார் .
1980-1985.

அதற்கு ஸ்ரீதேவி தரப்பில் வந்த பதில் சிரிப்பு ..சிரிப்பு தான்
.

Friday, 8 May 2020

KAMALAHASAN LIFE IS ALSO ACTING OR TRUE




KAMALAHASAN  LIFE IS ALSO ACTING OR TRUE



நான் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ரஜினி பில்லா, முரட்டுக்காளை,கழுகு என மிரட்டிக் கொண்டிருந்தார்.

கமலும் குரு, எல்லாம் இன்ப மயம், சவால் என போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்காமல் கமலைப் பிடித்தது எதற்க்காக என்பதற்கு உளவியலாளார்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் கமல் ரசிகனாக தெருவில் பார்ம் ஆகிவிட்டேன்.

அதற்கடுத்த ஆண்டு சகலகலாவல்லவன் எங்கள் ஊருக்கு வந்தபோது எங்கள் தெருவே விழாக் கோலம் பூண்டது. முதல் நாள் இரவு டேப்ரிக்கார்டரில் படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டேயிருந்தார் எதிர் வீட்டு செல்வம் அண்ணன். அவர் வீட்டு வாசலில்தான் அடுத்த நாள் தியேட்டரில் வைக்கப்படப் போகும் தட்டிகள் தயாராகிக் கொண்டிருந்தன. பழைய சைக்கிள் டயர்களின் உள்ளே எக்ஸ் வடிவத்தில் மூங்கில் தப்பைகளை வைத்து அதை உறுதிப்படித்தி, பின்னர் அதன் மீது வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி தட்டிகள் தயாரிக்கப்படும்.

அதில் சகலகலா வல்லவனைக் காண வரும் கண்களுக்கு நன்றி. இவண் காதல் இளவரசன் கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்று எழுதி கீழே மன்ற உறுப்பினர்களது பெயர்களை எழுதுவார்கள். நான் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென செல்வம் அண்ணன், எழுதிக்கொண்டிருந்தவர்களிடம்

“டேய், இவன் பேரையும் எழுதுங்கடா” என்று சொல்லவும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. அடுத்த நாள் தியேட்டருக்குச் சென்று அதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடுநிலைப் பள்ளி நாட்களிலும், பின்னால் மேல்நிலைப் பள்ளி விடுதி வாழ்க்கையிலும் ரஜினி – கமல் சண்டை என்றாலே கமல் அணியின் முக்கிய தளபதி நான் தான். எந்தப் படம் எவ்வளவு நாள் ஓடியது? வசூல் என்ன? போன்ற விபரங்களுடன் சண்டை போடுவேன்.

பின்னர் கல்லூரிக்குள் நுழைந்ததும் மனம் பக்குவப்பட்டது. எல்லாப் படங்களையும் ரசிக்கும் மனநிலை ஏற்பட்டது. கல்லூரி முதலாண்டு தீபாவளிக்கு தளபதியும் குணாவும் ரிலீஸ். நான் ரஜினி,மணிரத்னம்,மம்முட்டி மற்றும் பாடல்களுக்காக தளபதிக்கே ஓப்பன் ஷோ சென்றேன். அங்கு என்னை எதிர்பாராத ”ராஜபந்தா ரஜினிகாந்த்” ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்.

பின்னர் சென்னை வாசம். பல திரைப்பட கலைஞர்கள், நண்பர்கள், சிறு பத்திரிக்கைகள் தற்போது இணையம் என கமலைப் பற்றி கேள்விப்படாத எதிர்மறை செய்திகள் இல்லை.

யாரையும் மதிக்க மாட்டார், கர்வி, துதிபாடிகள் தான் அண்ட முடியும் என அவரைப் பற்றி கேட்காத செய்திகள் இல்லை.

எனக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள பிரியமானது கடலளவு. இந்த இங்க் பில்லர்களால் அதை எவ்வளவு உறிஞ்ச முடியும்?

இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். கமல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். தேநீர் இடைவேளை முடிந்து பங்கேற்பாளர்கள் அரங்கத்துக்கு உள்ளே சென்று கொண்டு இருந்தனர். கமல் வெளியே நின்று கொண்டிருந்த தன்னார்வலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அருகில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நீல நிற ஜீன்ஸ், பயிற்சிப் பட்டறை சீருடையான சாம்பல் நிற டி சர்ட், சாதாரண லெதர் செருப்பு, கையில் கறுப்பு நிற டயல் மற்றும் வாருடன் கூடிய வாட்ச். உன்னைப் போல் ஒருவனுக்காக ட்ரிம் செய்யப்பட்ட தாடி. 55 வயதில் 30க்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றத்தில் இருந்தார்.

அங்கே இருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். நான் கமலையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பி ஆர் ஓ நிகில் முருகன் வாங்க போட்டோ எடுத்துக்குங்க என்று அழைத்தார். மிக மகிழ்ச்சியுடன் என் ஆதர்சத்தின் அருகில் சென்றேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்ததும், ”உன்னைப் போல் ஒருவன் தீபாவளி ரிலீஸா” என அவரிடம் கேட்டேன்.

”இல்லை, அதற்கு முன்னாலேயே வந்து விடும்” என பதிலளித்தார். அனேகமாக ஆகஸ்ட் 15க்கு வரும் என நான் நினைத்துக் கொண்டேன்.

அங்கு இருந்த செக்யூரிட்டிகள், உணவு கொண்டுவந்த கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் அனைவரும் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர். கேட்டரிங் உதவியாளர் ஓடிச்சென்று வண்டி டிரைவரையும் கிளீனரையும் அழைத்து வந்தார். அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டு போஸ் கொடுத்தார். பின்னர் பட்டறை நடக்கும் அரங்கத்தின் உள்ளே சென்றார்.

நான் வெளியே வரும் போது, அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்கள் பேசிக் கொண்டார்கள். “ கமல் அப்படி இப்படின்னாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுறாரு, ரொம்பத் தன்மையா இருக்காரு” என.

கேட்டரிங்காரர்களும் அதே கருத்தை எதிரொலித்தார்கள். அங்கு இருந்த தன்னார்வலர்களும் டிட்டோ.

இந்த மாதிரி ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஊற்றுவதால் எனக்கும் கமலுக்கும் இடையேயான பாசக் கடலின் நீர் மட்டம் உயர்ந்துவிடுமா என்ன?
 தகவல் தங்கையா.