Posts

Showing posts with the label ACTING

M.R.RADHA EXTRAORDINARY IN ACTING

Image
  M.R.RADHA EXTRAORDINARY IN ACTING திருச்சி -  கரகரப்பாய் ஒரு கலகக் குரல் - நடிகவேள் எம்.ஆர்.ராதா! கவிஞர் நந்தலாலா & தே.தீட்ஷித் பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்...” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” இது ஒரு மகா கலைஞனின் எடைக்கல் வார்த்தை. எம்.ஆர்.ராதாஎம்.ஆர்.ராதா 'பாகப்பிரிவினை' படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், "சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார். ஆனால் ராதாவின் 'சிங்கப்பூர் சிங்காரம்' பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது" என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார். ராதாபோல் செய்ய தெலு...

KAMALAHASAN LIFE IS ALSO ACTING OR TRUE

Image
KAMALAHASAN  LIFE IS ALSO ACTING OR TRUE நான் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ரஜினி பில்லா, முரட்டுக்காளை,கழுகு என மிரட்டிக் கொண்டிருந்தார். கமலும் குரு, எல்லாம் இன்ப மயம், சவால் என போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்காமல் கமலைப் பிடித்தது எதற்க்காக என்பதற்கு உளவியலாளார்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் கமல் ரசிகனாக தெருவில் பார்ம் ஆகிவிட்டேன். அதற்கடுத்த ஆண்டு சகலகலாவல்லவன் எங்கள் ஊருக்கு வந்தபோது எங்கள் தெருவே விழாக் கோலம் பூண்டது. முதல் நாள் இரவு டேப்ரிக்கார்டரில் படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டேயிருந்தார் எதிர் வீட்டு செல்வம் அண்ணன். அவர் வீட்டு வாசலில்தான் அடுத்த நாள் தியேட்டரில் வைக்கப்படப் போகும் தட்டிகள் தயாராகிக் கொண்டிருந்தன. பழைய சைக்கிள் டயர்களின் உள்ளே எக்ஸ் வடிவத்தில் மூங்கில் தப்பைகளை வைத்து அதை உறுதிப்படித்தி, பின்னர் அதன் மீது வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி தட்டிகள் தயாரிக்கப்படும். அதில் சகலகலா வல்லவனைக் காண வரும் கண்களுக்கு நன்றி. இவண் காதல் இளவரசன் கமல்ஹாசன் ரசிக...

PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET -M.R.RADHA

Image
PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET -M.R.RADHA 'மக்கள் என் நடிப்பை பாக்க தான் வர்றாங்களே தவிர, செட்டிங்கை இல்ல...' என்பார் ராதா. அக்காலத்தில், 'மைக்' கிடையாது; கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் வகையில், தொண்டை கிழிய கத்தி பேச வேண்டும். அதனால், ஒவ்வொரு நாள் இரவும் நாடகம் முடிந்த பின், ஒப்பனை அறையில் இவருக்காக ஒரு பெரிய குண்டானில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் இருக்கும். அதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார் ராதா. நள்ளிரவில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் சாப்பிட்டால், பலருக்கு ஜன்னி வந்து விடும். ஆனால், மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடிக்கும் ராதாவுக்கு, அந்த உணவு தேவையாக இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பது தான் முக்கிய வேலை. தன் குழுவில் இருந்த ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டினார் ராதா. குழுவில், 50 லிருந்து 60 பேர் வரை இருந்தனர். அதில், பெண்கள், 10 முதல் 15 பேர். 'நாடக நடிகர்கள் யாரும் தூங்கக் கூடாது; தூங்கும் போது கூட காலாட்டிக்கிட்டே தான் தூங்கண...

M.R.RADHA ,THE LEGEND OF ACTING ART

Image
M.R.RADHA ,THE LEGEND OF ACTING ART ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்…  நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்கய எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா… எவருக்கும் அஞ்சாத ராஜா! மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்… எம்.ஆர்.ராதா. ஜெர் மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய! அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்து இருப் பார் ராதா! சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளி யில் படிக்க மனம் இல்லை. நான் ஓர் அநாதை என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத் த ங்கா ள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேட...