Posts

Showing posts with the label VATAPI

VATAPI GANAPATHY

Image
VATAPI GANAPATHY வாதாபி கணபதி : சரித்திர விவரங்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்) அப்புறம் அந்த ஊருக்கே வாதாபி கணபதி வந்து சேர்ந்தார். அநேக கணபதி பேதங்களில் வாதாபி கணபதி என்று ஒருத்தருண்டு. வாதாபி என்ற அஸுரனை ஜெரித்துக் கொள்வதற்காக அகஸ்த்யர் உபாஸித்த கணபதி அவர். திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தவர் இவரே. வாதாபி என்ற அஸுர வதத்துக்குக் காரணமான அவர் எந்த ஊரிலிருந்து வந்தாரோ அந்த ஊருக்குப் பேர் வாதாபிதான். அஸுர வாதாபி வாழ்ந்துவந்த ஊருக்குப் பிற்காலத்தில் அவன் பெயரே ஏற்பட்டுவிட்டது. அது சளுக்கிய ராஜ வம்சத்தவர்களின் தலைநகராக ஆயிற்று. சளுக்கிய ராஜாக்களின் புலகேசி என்று பேருள்ளவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். ‘புலிகேசி’ என்று தப்பாகச் சொல்கிறார்கள். புலியுமில்லை. எலியுமில்லை. சளுக்கிய சாஸனங்களில் செப்பேடுகள் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். கல்வெட்டுகள் கன்னடத்தில் இருக்கும். அப்படிக் கன்னடத்தில் ‘பொலெகேசி’ என்று சொல்லியிருக்கிறது. அதை பல பேர் பல தினுஸாக ரூபம் பண்ணி ஒவ்வொரு அர்த்தம் சொல்கிறார்கள். ‘பொலே’ என்பதற்குக் தமிழ் மூலம், தெலுங்கு மூலம், கன்னட மூலம் எல்லா...