VENICE -FLOATING CITY IN SEA
VENICE -FLOATING CITY IN SEA வெனிஸ் ‘கடலில் மிதக்கும் நகரம்’ இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர் “அது கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம். அதன் அகன்ற தெருக்களிலும், குறுகலான தெருக்களிலும் வலம்வருகிற கடல் ஒருகணம் சீறியவாறு ஏறும், மறுகணம் சிணுங்கியவாறு இறங்கும். அதன் அரண்மனையின் பளிங்குக் கல்லில் கடற்பாசி அமர்ந்தபடி அடம்பிடிக்கும்.”—சாமுயல் ரோஜர்ஸ், ஆங்கில கவிஞர், 1822. இங்கு விவரிக்கப்பட்டுள்ள அந்த “கம்பீரமான நகரம்” வெனிஸ் ஆகும். மிகப் பெரிய குடியரசு ஒன்றின் முன்னாள் தலைநகரான வெனிஸ், நில மற்றும் கடல் பேரரசை பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நகரம் “கடலில்” எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது? இதன் கம்பீரம் எதன் மீது சார்ந்திருந்தது? இந்தப் பேரரசு எவ்வாறு முடிவுக்கு வந்தது? இதன் மகத்துவத்திற்கு அடையாளமான சின்னங்கள் ஏதாவது இன்றைக்கு மீந்திருக்கின்றனவா? விரும்பப்படாத இடம் ஏட்ரியாட்டிக் கடலின் வடமேற்கு முனையில் உள்ள கடற்கழியின் மத்தியில் அமைந்திருக்கும் வெனிஸ் நகரம் 118 தீவுகளால் ஆனது. அந்தக் கடலில் விழும் நதிகள் பேரளவான வண்டல் மண்ணை ஆழமற்ற கடலோரத்தில் படிய வைக்கின...