அத்திப்பூ athippoo
அத்திப்பூ கம்பம் அருகே கேகே பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரத்தில் அத்திப்பூ பூத்துள்ளது.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்தியை மனிதன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்க குடியும். காணக்கிடைக்காதது அரிதாக கிடைத்தால் அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பதை பார்ப்பது அரிது. கண்டு காய் காய்க்கும், காணாமல் பூ பூக்கும் என்ற விடுகதையே அத்தியினால் தான் உருவானது.அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துமே மருந்தாகவோ அல்லது துணை மருந்தாகவோ சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு அத்தி மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரத்தில் ஒரு பூ மட்டும் பூத்துள்ளது. தற்போது அத்திப்பழ சீசன் என்பதால் இங்குள்ள மரங்களில் அத்தி பழுத்துள்ளது. பழுத்த பழங்கள் வீணாக மண்ணில் விழுந்து கிடக்கிறது. இதன் மகத்துவமும், மருத்துவப்பலனும் மக்களுக்கு தெரியாததால் ஒருசிலரைத்தவிற யாரும் இந்த பழங்களை எடுத்துச் செல்வதில்லை.அத்தியின் மகத்துவம் குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தமருத்துவர் சிர...