ரவீந்திரநாத் தாகூர் இறப்பு 1941 ஆகஸ்ட் 7
ரவீந்திரநாத் தாகூர் இறப்பு 1941 ஆகஸ்ட் 7 உண்மையின் சிரிப்பு தான் அழகு என்பது ரபீந்திரநாத் தாகூர் பிறப்பு இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி (1861-05-09) பிறந்தார். இவரது பிறந்த இடம் கொல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகை ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடிப் பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார் . இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பம் எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சமஸ்க்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் . இவரது...