JEGAN MOHAN REDDY FORMED SEPARATE PARTY -DIVIDED CONGRESS IN ANDHRA
JEGAN MOHAN REDDY FORMED SEPARATE PARTY -DIVIDED CONGRESS IN ANDHRA அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..!' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன் 2010-ம் ஆண்டின் மத்திய பகுதி அது. அப்போது ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்த பிறகு, அவரின் மனைவி விஜயலஷ்மியும் மகள் சர்மிளாவும் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றனர். சரியாகக் காலை 10 மணிக்கெல்லாம் டெல்லியின் ஜன்பத் சென்றடைந்துவிட்டனர். அதாவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீடு. சோனியா காந்தியின் வீட்டில் காலடி எடுத்துவைத்ததுமே இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒய்.எஸ்.ஆர் இறந்த பிறகு தாங்கள் முதல்முறையாகச் சோனியாவை சந்திக்கவுள்ளதால் அவர் நம்மை உற்சாகத்துடன் வரவேற்பார் என எண்ணியபடியே இருவரும் அமர்ந்திருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. இருவரும் வீட்டுக்குள் அழைக்கப்படாமல் அருகில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு வரவேற்பு அறையிலேயே இருவரும் அமரவைக்கப்பட்டனர். பத்து - பதினைந்து நிமிட கா...