Posts

Showing posts with the label CRITICISM

DEEPAVALI - FESTIVAL OF CRITICISM

Image
DEEPAVALI - FESTIVAL OF CRITICISM தீபாவளி கொண்டாடும் மானங்கெட்ட தமிழர்கள் எழுத்தாளர்: செ.கார்கி ஊர் முழுவதும் பட்டாசு சத்தம் இப்போதே காதைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டது. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருமே ஒரு மிகப் பெரிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பெருமித உணர்வோடு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் யாருக்கும் எதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்று தெரியவில்லை. இருந்தாலும் அதைக் கொண்டாடியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. கையில் காசு இருக்கின்றதோ இல்லையோ ஒருவன் இந்துவாக இருந்தால் நிச்சயம் அவன் தீபாவளி கொண்டாடியே ஆகவேண்டும். இல்லை என்றால் ஊர் உலகம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளமுடியாது. அதற்காக நூற்றுக்குப் பத்து இருபது கந்துவட்டிக்கு வாங்கியாவது தனக்கும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் புதுத்துணி வாங்கி தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகி விடுகின்றார்கள். நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் இந்த தீபாவளியை எதற்காக இத்தனை சிரமப்பட்டு மெனக்கெட்டு கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று தெரிவதில...