Posts

Showing posts with the label தூரத்து

தூரத்து பச்சை - யோகராணி

Image
தூரத்து பச்சை -  யோகராணி நோர்வேயில் வசந்த கால பருவம் வந்ததால், எங்கும் உற்சாகம் களைகட்டியது. நகர வீதி எங்கும் மக்கள் திரள் வழிந்தது. அங்காடி வியாபாரிகள் தோன்றி வீதி கரைகளில் கடைகளை பரப்பிவைத்து உள்ளங்களை ஈர்த்தனர். விழாக்களும் விருந்துகளும், பாடல், ஆடல் பரவசங்களும் என, எங்கும் மகிழ்வு மையம் கொண்டு துலங்கியது. ஆனால் அந்த ஆடம்பரமான வீடு மட்டும் அமைதியாக ஆள்நடமாட்டம் அற்று தெரிந்தது. முகுந்தனோ மாடிக்கும் தரைக்குமென ஏறி இறங்கிக்கொண்டிருந்தான். சிந்தனை வயப்பட்டவனாக தோன்றியவன், தனக்குள்ளே உரையாடிக்கொண்டிருந்தான். அமலாவுக்கு என்ன நடந்தது? என்னோடு ஏன் இப்படி நடந்து கொள்கின்றாள்? சில மாதத்திலேயே நான் அலுத்து விட்டேனா..? இன்று காலமை போனவள்.... .ஏன் இப்படி நேரம் ஆகுது.என்று முணுமுணுத்துக்கொண்ட முகுந்தன், பொறுமை இழந்தவனாய் தொலைபேசியில் கதைக்க முயன்ற போதும் அவள் அதை நிறுத்தி விட்டாள். முகுந்தன் சிலோனில் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன். மட்டுவில் அவனது ஊர். விவசாயத்துக்கு ஏற்ற அந்த கிராமத்தில், வளமாக விளங்கிய குடும்பத்தின் மூத்த மகனாக இவன் இருந்தான். படிப்பில் விண்ணனாக இ...