BHOOLANDEVI - TERRORIST TURNED POLITICIAN BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26
BHOOLANDEVI - TERRORIST TURNED POLITICIAN BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26 பொள்ளாச்சி கொடூரம், காசியின் காமவேட்டை, சிறுமி ஹாசினி துயரம், டெல்லி நிர்பயா கொலை உள்ளிட்ட எந்தச் செய்தியைக் கேட்டாலும் ஒரு பொதுஜன மனநிலை எப்படி இருக்கும்? குழந்தைகளின், பெண்களின் ரத்தம் குடித்த அந்த ஓநாய்களை நடுரோட்டில் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொந்தளிக்கும். அது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் அதுதான் சரியான நீதி என பொதுஜனம் புலம்பித் தவிக்கும். அதைத்தான் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்தார். தன் உடலைத் தின்ற 22 பேரை நடுரோட்டில் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டார். அவரை பொதுஜனங்கள் ‘துர்கை’யாக வழிபட்டனர். அவர்தான், தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட கொள்ளை ராணி - பெண் அரசியல்வாதி- வெற்றிகரமான இந்திய எம்.பி…. ‘பூலான் தேவி’. யார் அந்தப் பூலான் தேவி? இந்திய நாட்டில் பெண்ணாகப் பிறந்தாலே பல சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தால் சொல்லவா வேண்டும்... இன்னும் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் வசதியற்ற படகோட்டியின் மகளாக ...