BRITISH PLUNDERED INDIA -SASITHAROOR
BRITISH PLUNDERED INDIA -SASITHAROOR பிரிட்டனின் காலனியாதிக்கத் தாக்கங்களை தெளிவான புள்ளிவிவரம் மட்டுமின்றி, சுருக்கென குத்தும் நகைச்சுவையுடனும் தார்மிக சீற்றத்துடனும் ஆக்ஸ்ஃபோர்டில், சசி தரூர் எம்.பி. பேசிய வீடியோ, இந்திய இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. | வீடியோ இணைப்பு கீழே. | இந்தியாவின் பொருளாதார பின்னடைவுகளுக்கு சுதந்திரம் பெற்றதற்கு பிறகான ஊழல்கள், மக்கள் தொகை ஆகியவை பெரிதுபடுத்தப்படும் வேளையில், பிரிட்டன் காலனியாதிக்கத் தாக்கம், இந்தியாவின் வளர்ச்சியை பெரிதும் முடக்கிய வரலாறுகளை நாம் மறந்திருக்கிறோம். பள்ளிப் பாடப்புத்தகங்களில் நமக்கு போதிக்கப்பட்டதெல்லாம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்களின் தியாகங்கள் போன்றவையே. ஆழமாக பிரிட்டன் காலனியாதிக்கம் இந்தியாவில் செய்த பல்வேறு விதமான, கணக்கிலடங்கா கொடுமைகள், சுரண்டல்கள், கொலைகள், வன்முறைகள், கொள்ளைகள் ஆகியவை இந்தியாவை எப்படி பாதித்து வருகிறது என்பதையோ, அல்லது வரும் காலங்களில் கூட அதன் தாக்கத்திலிருந்து விடுபடமுடியுமா என்பதே பெரும் கேள்விக்குறியாகியுள்ளது பற்றியோ நமது கல்வித்திட...