சீனாவின் சலவைக்கல் படகு,
சீனாவின் சலவைக்கல் படகு, இந்த சலவைக்கல் படகு, முதலில் மரத்தால் அமைக்கப்பட்டிருந்ததாம். 1755-ல் சிங்லாங் பேரரசர் (Qianlong Emperor) காலத்தில் , இந்த இடத்தில் கீழே பெரிய பெரிய கற்பலகைகளை போட்டு, அதன் மேல் உறுதியான மரத்தால் ஒரு அழகிய படகு அமைக்கப்பட்டது. சீனர்களின் கட்டடக்கலை பெரும்பாலும் மரத்தால் அமைக்கப்படுகிறது . அதனால் எளிதில் தீயினால் எரிந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. விலக்கப்பட்ட நகரம் கூட இருமுறை எரிந்து போனது அதே போலவே 1860ல் நடந்த ஓப்பியம் போரில், ஆங்கில ஃபிரெஞ்சுப் படைகளினால் இந்த அமைப்பு முற்றிலுமாகத் தகர்ந்து போனது. அதன்பின் 1893ல் தான் பேரரசி சிக்சியால் இது மீண்டும் நிர்மானிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் தான் இரு அடுக்குகளைக் கொண்ட இந்த மாபெரும் படகு கொஞ்சம் ஐரோப்பியக் கட்டடக்கலையினையும் இணைத்து கட்டப்பட்டது. மேக நோயால் இறந்துபோன தன் மகனுக்குப்பதிலாக தன் உறவினனான குவாங்சு பேரரசை நியமித்தாலும்,பேரரசி சிக்ஸி அதிகாரம்முழுவதையும் தன் கையில் மட்டுமே வைத்துக் கொண்டாள். ஒரு சமயத்த...