LAL KRISHNA ADVANI , BJP CHIEF BORN 1927 NOVEMBER 8
LAL KRISHNA ADVANI , BJP CHIEF BORN 1927 NOVEMBER 8 .லால் கிருஷ்ண அத்வானி (சிந்தி மொழி: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. இளமைக் காலம் சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்த...