Vaikom Muhammad Basheer எழுத்தாளர் வைக்கம் முகமதுபஷீர்
Vaikom Muhammad Basheer எழுத்தாளர் வைக்கம் முகமதுபஷீர் "ஒரு இனம், வைக்கம் முகமதுபஷீர் மூலம் புதையுண்டு கிடந்த தங்கள் மன முகங்களை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது. பஷீர் நேர்மாற்றி, அவருடன் ஒப்பிட்டு பேச நம் மொழியில் யாரும் இல்லை. மேலும் அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். தமிழின் இன்றைய தேவை அது." (மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி) Vaikom Mohammed Basheer மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமானவரும் தலைச்சனுமான பஷீர், இந்திய இலக்கியத்தை உலக மேடைக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான பிரதிநிதி. இயல்பான இலக்கிய நடையும், வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. தமிழில் அவரை ஒத்துக்கூற எழுத்தாளர்கள் இல்லை. தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தில் காணப்படும் ஒரு வித இறுக்கம் (அவர்கள் எழுத்தைப் பொறுத்தமட்டில்), பஷீருக்கு நேர்மாறான ஒன்று. மலையாளத்தில் அவருடன் ஒத்துப் போகும் எழுத்தாளர் என்றால் கவிஞர் குஞ்ஞுன்னியைச் சொல்லலாம். பஷீரின் மிகைப்படுத்தல் இல்லாத வழக்கு, இயல்பு வாழ்க்கையி...