Posts

Showing posts with the label - THIKKUVALLAI

ஆயுள் தண்டனை- திக்குவல்லை கமால் / LIFE SENTENCE - THIKKUVALLAI KAMAAL

Image
  ஆயுள் தண்டனை திக்குவல்லை கமால் ‘மல்லிகை’ (இலங்கை) யில் வெளியான சிறுகதை * “ரெண்டு புள்ளப் பெத்த பொம்பள” – இப்படிச் சொன்னால் எவருமே நம்பமாட்டார்கள். ஒல்லியான உடம்பு. அச்சொட்டான அங்கங்கள். புன்னகை பூக்கும் கீற்று உதடுகள். துடிக்கும் கண்கள். உண்மையில் இருபது வயதைக் கூட அவள் இன்னும் தாண்டவில்லைத்தான். அவளது வாழ்க்கையில் எல்லாமே அவசர அவசரமாக நடந்து முடிந்துவிடுவது போல.. நேற்றைய சம்பவம் அவளை வெகுவாகப் பாதித்து விட்டது. பிள்ளைகள் இருவரும் நித்திரையாகி விட்டார்கள். மூன்றரை வயதில் ஒன்றும் இரண்டரை வயதில் இன்னொன்றுமாக இரண்டிருந்தால் இனிக் கேட்கவா வேண்டும். ரீவியைத் தட்டிவிட்டு அமர்ந்த போதுதான் முன் வாசலில் அந்த பெல் சத்தம் கேட்டது. “ஆ..ரஸ்மின்… இந்தப் பொக்கத்துக்கு வர நெனச்சீக்கி” அவன் சைக்கிளை விட்டு இறங்காமலே காலைக் குத்திக்கொண்டு நின்றான். “சும்மா வந்த… மச்சனில்லையா?” “வெளன போனது இன்னேம் வரல்ல” “சாச்சி காயிதமனுப்பினா?” அவன் ·ஃபர்ஸானாவின் பெரியம்மாவின் மகன். இவளுக்கு ஆண் சகோதரர்களென்று எவருமே கிடையாது. “உம்ம இப்ப காயிதமனுப்பியல்லேன்” “அதெனா?’ அவன் ஆச்சரியத்தோடு கேட்டான். “அடுத்தூட்டுக்கு ·...