Posts

Showing posts with the label ISRAEL

ISRAEL -PALASTINE CONFLICTS - ISRAEL FORMED 1948 MAY 14

Image
ISRAEL -PALASTINE CONFLICTS -  ISRAEL FORMED 1948 MAY 14 இஸ்ரேல் பாலத்தீன மோதல்- 10 கேள்விகள் 30 அக்டோபர் 2015 . பாலத்தீனப் போராட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி , நகரின் சில பகுதிகளுக்குள் நுழையத் தடை விதித்தது. இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் பாலத்தீனர்கள் சிலரின் உயிர்களையும் பலிவாங்கிவிட்டன. இந்த வன்முறை மீண்டும் வெடித்திருப்பதை, பலர் ஒரு புதிய "இண்டிஃபாடா" ( எழுச்சி என்பதற்கான அரபு வார்த்தை) உருவாவகக் கூடும் என்று அஞ்சுகிறார்கள். இந்த சமீபத்திய பதற்ற நிலை, ஜெருசலேத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த நகரை இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்கள் ஆகிய இரு தரப்பினருமே உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் இது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு சிக்கலான மோதலின் மிகச்சமீபத்திய ஒரு அத்தியாயம்தான். இதற்கு தீர்வு என்பது வெக...