VANISHED CULTIVATION - " MAPPILLAI RICE " IN TAMILNADU
VANISHED CULTIVATION - " MAPPILLAI RICE " IN TAMILNADU பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் பலவற்றிற்கு ஏதேனும் ஒரு காரணத்துடன் தான் பெயர் வைத்துள்ளனர். அந்த வகையில் “மாப்பிள்ளை சம்பா” விற்கு ஓர் பெயர் காரணம் உள்ளது. முந்தைய காலங்களில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும் போது மாப்பிள்ளையின் பலத்தை சோதிக்க இளவட்ட கல்லை தூக்க செய்து பின் பெண்ணை திருமணம் செய்து வைப்பர். அத்தகைய இளவட்ட கல்லை தூக்க கூடிய பலத்தை தருவதால் இந்த அரிசிக்கு “மாப்பிள்ளை சம்பா” என்று பெயர். மாப்பிள்ளை சம்பா அரிசியின் நீராகாரத்தை ...