Posts

Showing posts with the label EPIGRAPHY

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN 1814 JANUARY 23-1893 NOVEMBER 28

Image
  ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN  1814 JANUARY 23-1893 NOVEMBER 28 சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர்.[1][2] இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர். இளமைக் காலம் இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்...

VENKAT RAMAIYA ,EPIGRAPHY BORN 1912 APRIL1912 - 1995 JANUARY 31

Image
  VENKAT RAMAIYA ,EPIGRAPHY BORN  1912 APRIL1912 - 1995 JANUARY 31 கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) தமிழறிஞர். இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம்.வாழ்க்கைக் குறிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர் வேங்கடராமையா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இவர் பெற்ற பட்டங்கள் கல்வெட்டாராய்ச்சிப் புலவர் செந்தமிழ் கலாநிதி தமிழ் மாமணி என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகள...

KINNIMANGALAM EPIGRAPHY

Image
KINNIMANGALAM  EPIGRAPHY இதோ உடைந்துபோன ஒரு கல்தூண் தமிழி பேசுகிறது.. கருத்துப்போன ஒரு கல்வெட்டு வட்டெழுத்தினை இசைக்கிறது.. 'நாதன்' எனும் சொல் வடமாெழியன்று என உரைகக்கிறது.. 'கோட்டம்' எனும் சொல் தொன்றுதொட்டே புழக்கத்தில் உள்ளது. தமிழனின் கட்டிடக்கலைக்கும் சான்றாகிறது. கிண்ணிமங்கலம் அதற்குச் சான்று