Posts

Showing posts with the label CHANDRABABU

CHANDRABABU , STORY OF A LEGEND

Image
  CHANDRABABU , STORY OF A LEGEND கடந்த, 1959ல், ஏவி.எம்., ஸ்டுடியோவில் படமானது, சகோதரி. படப்பிடிப்பு முடிந்ததும், படத்தைப் போட்டு பார்த்தார், ஏவி.எம்.செட்டியார். அவருக்கு திருப்தி இல்லை. 'படம் எடுபடாது; ஓட வைக்க என்ன செய்யலாம்...' என யோசித்தவருக்கு, அப்போது உச்சத்தில் இருந்த சந்திரபாபு நினைவுக்கு வந்தார். அவரது, காமெடி, 'டிராக்'கை படத்தில் இணைக்கலாம் எனத் தோன்ற, 'சந்திரபாபுவை அழைத்து வாருங்கள்...' என்றார். செட்டியார் அழைக்கிறார் என்றதும், உடனே, வந்தார், சந்திரபாபு. 'வா பாபு உட்கார்; நம்ம ஸ்டுடியோவில், சகோதரின்னு ஒரு படம் தயாரிச்சிருக்கிறோம்; அந்தப் படத்தைப் பாத்துட்டு, உன் கருத்தைச் சொல்...' என்றார்.  அன்று மதியமே படத்தைப் பார்த்தார், சந்திரபாபு. காட்சிகள், ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தன. 'இதில் நாம் என்ன செய்ய முடியும்...' என, யோசித்தவர், மாலையில் செட்டியாரைச் சந்தித்து, 'காட்சி அமைப்பு தெளிவாக இல்ல...' என்றார். 'உன் பொறுப்பில் விடுறேன்; நல்ல நகைச்சுவையை சேர்த்து, பத்து நாட்களில் படமாக்கி, கோர்வையாக்கிக் கொடு...' என்...