QUEEN AKILYA BHAI HOLKAR OF INDORE BORN 1725 MAY 31 - 1795 AUGUST 13
QUEEN AKILYA BHAI HOLKAR OF INDORE BORN 1725 MAY 31 - 1795 AUGUST 13 .மகாராணி அகில்யா பாய் ஓல்கர் (31 மே 1725 – 13 ஆகத்து 1795), ஓல்கர் வம்சத்தின் பேரரசியாவார். இவர் மராட்டியப் பேரரசின் இந்தூர் அரசை ஆட்சி செய்தவராவார். இவர் அகமத்நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் ஆட்சியில் தலைநகரத்தை இந்தோரின் தெற்கில் நருமதையில் அமைந்துள்ள மகேசுவருக்கு மாற்றினார். ஆட்சிப் பகுதி அகில்யாபாயின் கனவர் காண்டே ராவ் ஓல்கர், கும்பர் போரில் 1754-ல் உயிரிழந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய மாமனார் மல்கர் ராவும் காலமானார். அதன்பிற்கு ஓராண்டு கழித்து இந்தூர் அரசியாக முடிசூட்டப்பட்டார். இவர் தன்னுடையா அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காக்க பாடுபட்டார். இவர் தன்னுடைய போர்படையை வழிநடத்துவதிலும் தன்னுடைய வீரத்தை காட்டினார். இவர் துகோசி ஓல்கரை தன்னுடைய தளபதியாக நியமித்தார். இவரது 30 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியுமாக நடத்தினார், இவர் வாழும்போது மரியாதையுடனும், இறந்த பிறகு துறவிபோலவும் கருதப்பட்டார்.[1 ...