Posts

Showing posts with the label ON KEELADI

ARCHAEOLOGY - REPORT ON KEELADI

Image
 ARCHAEOLOGY - REPORT ON KEELADI கீழடி அகழ்வாய்வு காட்டும் சான்று: கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் "முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?" மேலே இருப்பது சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் வரும் 136வது பாடல். "முத்துப் போன்ற மணலில் நீ தலைவிக்கு அருள் செய்தாய். அப்போது அவள் விளையாட்டில் பத்து எண்ணிக்கை உருவம் பெற்றவள் போல மகிழ்ந்தாள். அவளை விட்டுவிட்டு நீ நீங்கியபோது அவள் தன் அங்கமெல்லாம் வாடி ஆயத்தாரின் தந்திரத்தால் தோற்றவர் போல துன்பத்தில் உழல்கின்றாள். இப்படி அவள் துன்பத்தில் உழலலாமா?" என்பது இந்தப் பாடலின் பொருள். தலைவியைத் தலைவன் பிரிந்துசெல்ல, தலைவி படும் துன்பத்தைக் கூறும் பாடல் இது. இந்தப் பாடலில், "பத்து உருவம் பெற்றவன் மனம்போல" என்ற வார்த்தைகள், தாய விளையாட்டில் பத்து என்ற எண்ணிக்கையை பெற்றவன் மனம் மகிழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது. அப்படி பத்து என்ற எண்ண...