DELHI CHIEF MINISTER ARAVIND -LEGEND
DELHI CHIEF MINISTER ARAVIND -LEGEND அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal, இந்தி:अरविंद केजरीवाल) (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 8ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.[1] வாழ்க்கை வரலாறு அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவிலுள்ள இசாரில் 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் நாள் பிறந்தவர்[2],[3]. கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த ராம் கேஜ்ரிவால், தாய் கீதா தேவி. ஐஐடி கரக்பூரில் 1989 ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அங்கு பணி புரியும்போது அரசு...