அங்காடித் தெரு
அங்காடித் தெரு தமிழ்நாட்டின் பரப்பளவில் மூன்று கோடியே 20 லட்சத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ள 10 மீட்டர் அகலமும் 405 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு குறுகலான தெருவில் இருந்து மட்டும் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு 10 சதவிகிதத்திற்கு குறையாமல் விளம்பரம் வருகிறது என்றால் சந்தேகமில்லாமல் அது சென்னை தியாகராயர் நகர், ரங்கநாதன் தெருவிலிருந்து தான்! மாம்பலம் - தியாகராயர் நகர் தொடர் வண்டி நிலையத்திற்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கும் இடையில் அமைந்திருக்கும் அந்தத் தெருவில் தான் சென்னையின் மக்களின் பெரும்-பகுதியினரின் பேஷன் மாற்றம் நிர்ணயிக்கப்-படுகிறது. நெரிசலான பல மாடிக் கட்டடங்-களிலும், சின்னச் சின்ன சந்துகளிலும், பொந்துகளிலும் உள்ள கடைகளில் பணியாற்றுவோர், தெருவின் இரு ஓரங்களிலும், மத்தியிலும் நீளமாக 'தெருவே உலகம்; ஊனுடம்பே கடை' என தானே விற்பனையக-மாக மாறிப்போய் வியாபாரம் செய்வோர் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையும் இந்தத் தெருவில் தான் எந்த மாற்றமும் அற்று ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் வசிப்போர் இந்த இடத்தை-யோ, அதன் நெருக்கத்தையோ அறியாமல் இரு...