Posts

Showing posts with the label அப்துல் கலாம்

அப்துல் கலாம் பற்றி சுஜாதா!

Image
அப்துல் கலாம் பற்றி சுஜாதா! ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் (சென் ஜோசப்) பி.எஸ்ஸி. படிப்பில் என் வகுப்புத் தோழர். அந்தக் கல்லூரியில் மதிய இடைவேளைகளில் லாலி ஹால் என்னும் பெரிய அரங்கத்தில் பெல் அடிக்கும் வரை அரட்டையடித்துக் கொண்டிருப்போம்.  அப்போதிலிருந்தே அப்துல் கலாமை எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதிகம் பேச மாட்டார். ஏதாவது கலாட்டா செய்தால் சிரித்து மழுப்பிவிடுவார். எங்களுடன் சினிமாவுக்கெல்லாம் வரமாட்டார். பி.எஸ்ஸி. படிப்புக்குப் பிறகு நான் எம்.ஐ.டி-யில் எலெக்ட்ரானிக்ஸ் சேர்ந்தபோது அதே வருடம் அவர் ஏரோநாட்டிக்ஸில் சேர்ந்தார். இருவருக்கும் பொதுவாக இருந்த தமிழ் ஆர்வத்தால் அடிக்கடி சந்தித்துப் பேசியது நினைவிருக்கிறது. பாரதி பாடல்களிலும் திருக்குறளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது.  அப்போதே அவருக்கு விமான இயல், ராக்கெட்ரி போன்ற துறைகளில் எதையாவது நடைமுறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததை அறிய முடிந்தது. எம்.ஐ.டி-யின் ஜெர்மானிய ப்ரொபசர் ரெபந்தின், பேராசிரியர் பண்டாலே போன்றவர்கள் வழிகாட்ட (நாட்டிலேயே முதன் முதலாக என்று எண்ணுகிற...

காமராஜர் மதிய உணவுத் திட்டம்-மாணவன் அப்துல் கலாம்

Image
காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வர முடிவு செய்து வேலைகள் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது விருதுநகர் அருகே இருந்த பள்ளிக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் சொன்ன விசயம் அந்த திட்டத்திற்கே பெரிய தடைக்கல்லாக இருந்தது, சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை இருக்கும் அந்த பள்ளிக்கு எவ்வளவு அரிசி தேவைப்படும், அவ்வளவையும் வேகவைத்து வடிப்பது எப்படி என்ற கேள்விதான் அது. அதற்கு உடனே தீர்வு காணவேண்டும் என்று காமராஜர் சொல்ல அனைவரும் கையைப் பிசைந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளம் மின்னியல்  பொறியாளர் கையை தூக்கினார். இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். அவர் மீது நம்பிக்கை வைத்து காமராஜரும் சரியென்றார். இரண்டு நாட்களும் தூங்காமல் அந்த பொறியாளர் வடிவமைத்த இயந்திரம்தான் நீராவி மூலம் அதிக அரிசியை சோறாக்கும் ஸ்டீம் குக்கர் . இன்று பெரும் மண்டபங்களில் உணவு சமைக்க உதவும் அந்த ஸ்டீம் குக்கரை வடிவமைத்து, சத்துணவுத் திட்டத்தை தடங்கல் இன்றி நடக்க உதவி, காமராஜரிடம் பாராட்டையும் அன்பையும் பெற்ற அந்த பொறியாளர் வேறு யாருமல்ல.. நம் கலாம் ஐயா அவர்கள்தான்.. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? என்றாலும்...