KARUNANIDHI FORMER CHIEF MINISTER BORN JUNE 3,1924 - AUGUST 7,2018
KARUNANIDHI FORMER CHIEF MINISTER BORN JUNE 3,1924 - AUGUST 7,2018 .கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முன்னெடுத்த திட்டங்கள் குறித்து விரிவாக கல்வி, மருத்துவம், தொழில்வளர்ச்சி என பல துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக விளங்குவதற்கு பின்னணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள்தான் காரணமாக இருக்க முடியும். அத்தகைய திட்டங்களை பெருமளவு முன்னெடுத்தவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதும் ஏழைச் சிறுவர், சிறுமியர்கள் முதன்முறையாக பள்ளிக்கூடத்தில் காலடி எடுத்துவைத்தனர். ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வந்தது காமராஜர் என்றால் அதை நீடிக்கச் செய்து, அவர்களுக்கான உதவிகளை வழங்கி, பள்ளிகள் மட்டுமல்லாமல், தொழிற்கல்விகள், மருத்துவப் படிப்புகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் அமைத்து, படிப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது பின்னர் வந்த திராவிட கட்சிகள் தான். அதிலும் குறிப்பாக ...