Posts

Showing posts with the label thiruvarutselvar

சிவாஜி தொடர் – சுதாங்கன் sivaji ganesan

Image
.செலுலாய்ட் சோழன் – 120 சிவாஜி தொடர் – சுதாங்கன் பதிவு செய்த நாள் 02 ஏப்ரல் 2016 23:06 ‘திருவருட்செல்வர்’ படத்தின் அடுத்த காட்சி பாடலில் துவங்கும்! முதல் பாடலிலிருந்தே படத்தில் கவியரசு கண்ணதாசனுக்கும், இயக்குநர் ஏ.பி. நாகராஜனுக்கும் ஒரு பெரிய தமிழ்ப் போட்டியே நடக்கும்! பின்னவர் கதை– வசனத்தில் தன் தமிழ்ப்புலமையை காட்டும்போதே அதற்கு இணையான பாடல்களை எழுதியிருப்பார் கண்ணதாசன்! படத்தின் முதல் பாடல் ‘ மன்னவன் வந்தானடி.’ அதை பலரும் நினைவில் வைத்திருப்பார்கள். அதே சமயம், நாகேஷ், மனோரமா வண்ணான் தம்பதிகளாக வரும் இந்த பாட்டை பலரும் தமாஷாகவே எடுத்துக்கொண்டார்கள்! ஆனால், இந்தப் பாட்டில்தான் கண்ணதாசனின் முழு தத்துவ விளையாட்டுமே இருக்கும்! இந்தக் காட்சியில் வரும் சிறுகுறிப்புத் தொண்டர் ஒரு வண்ணான்! அவர் தினமும் ஒரு சிவனடியாரின் துணியை தோய்த்த பின்புதான் மற்ற துணிகளை தோய்ப்பார்! அதனால் அவருக்கு சிவன் கொடுத்த சோதனையும் அதை அவர் வென்றெடுத்ததும்தான் இந்தக் காட்சி! சிறுகுறிப்புத் தொண்டனாக சிவாஜி! சிவனாக ஜெமினி கணேசன்! இப்போது வண்ணான் சூழலுக்கு பாடல்! அதை இங்கே மீண்டும் பதிவு செய்தால்தான் இந்...