BOMBAY CRIMINAL VARATHARAJAN 1926 - 1988 JANUARY 2
BOMBAY CRIMINAL VARATHARAJAN 1926 - 1988 JANUARY 2 *வரலாறு! மும்பை தாதா வரதராஜன் முதலியார்.* DIED 02.01.1988 பிறவி தாதா இவர். 1926 ல் தூத்துக்குடியில் பிறந்தவர். அந்த கால கட்டத்தில் இவருடைய தந்தை தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். (இவருடைய முன்னோர்கள் ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்). பின் வரதராஜனின் தந்தை பிழைப்பு தேடி பம்பாய் செல்ல அவருடனே ஒட்டிக் கொண்டு வரதாவும் பம்பாய் வந்து VT இரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டராக வேலை பார்த்தார். வறுமையின் காரணமாக முதன் முதலில் ரயிலில் வந்த சரக்கு மூட்டை ஓன்றைத் திருடி வெளியில் விற்றார். எந்த குற்ற உணர்வும் அவருக்கு வரவில்லை. பிறகென்ன...?. திருடுவது தொடர் கதையானது. அப்படியே திருடுவதற்காக ஒரு சிறு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார். செல்வா என்ற நண்பர் எப்போதும் இவர் கூடவே இருப்பார்.( வரதா சாகும் வரை அவர் கூடவே தான் செல்வா இருந்தார்). போலீஸ் ஸ்டேஷனுக்கு கரெக்டாக மாமூல் போய் விடும். ஆதலால் போலீஸ் இவரது திருட்டுத் தனங்களை கண்டு கொள்ளவில்லை. ஆதலால் வரதா அடுத்த லெவலுக்கு போனார். கள்ள சாராயம் காய்ச்சி விற்பது. லாரி டயர் டியூப்பு...