INDONESIA - 300 CROCODILES GOT MURDERED 2018 JULY 13
INDONESIA - 300 CROCODILES GOT MURDERED 2018 JULY 13 The local villager was killed on Friday morning while gathering vegetables on the crocodile farm's breeding sanctuary பழிக்குப்பழி: பண்ணைக்குள் இறங்கி 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கும்பல் இந்தோனேஷியாவில் உறவினரை கடித்துக் குதறிய முதலையைப் பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 300-க்கும் மேற்பட்ட முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துவிட்டுச் சென்றது . இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு புற்கள் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதிக்குள் வந்த முதலை ஒன்று சுகிட்டோவின் காலைக் கடித்துள்ளது. இதில் இரு...