Posts

Showing posts with the label RAJA SULOCHANA

RAJA SULOCHANA - MGR IN FILMS

Image
  RAJA SULOCHANA - MGR IN FILMS “கண்ணு... உன் பெயர் என்ன சொல்லும்மா... ?” என ஆசிரியை கேட்டதும், குழந்தை மழலை உச்சரிப்பில் “ராஜீவலோசனா” என்றது.திருவல்லிக்கேணி திருமலாச்சாரி தேசிய மேல்நிலைப் பள்ளி. முதல் வகுப்பில் சேரக் காத்திருந்தது அந்த அரும்பு. ‘ராஜசுலோசனா’ என்று பதிவேடுகள் புதிதாக எழுதிக்கொண்டன. அதுவே நிலைத்தும்விட்டது. சிறுமி பிறந்தது 1934 ஆகஸ்டு 15 - விஜயவாடாவில். அம்மா தேவகி. அப்பா பக்தவசல நாயுடுவுக்கு ரயில்வேயில் பணி. தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறிய குடும்பம். வாய்ப்பாட்டு, வயலின் என்று ராஜசுலோசனாவுக்கு எட்டு வயதில் சப்தஸ்வரமும் பழக்கமானது. ஏவி.எம்.மின் ’வேதாள உலகம்’ படத்தில் லலிதா - பத்மினியின் நாட்டியத்தைப் பார்த்ததும், ஆடுவதில் ஆர்வம் அதிகரித்தது. மனம் விட்டு இசை ஆசிரியை பங்கஜத்திடம் அதைக் கூறினாள். ‘சரஸ்வதி கான நிலையம்’ ராஜசுலோசனாவுக்கு ஜதி சொல்லிற்று. சீக்கிரத்திலேயே அரங்கேற்றம் கண்டார். ராஜசுலோசனாவின் முதல் பரத நாட்டிய நிகழ்வு உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.எல். வெங்கட்ராமஅய்யர் தலைமையில் நடந்தது. ராஜசுலோசனாவுடன் நடனம் பயின்ற மற்றொரு மாணவி, நடிகை ‘ தாம்பரம் லலிதா.’ ...