Posts

Showing posts with the label AKSHARA HAASAN

AKSHARA HAASAN , INTERVIEW,

Image
AKSHARA HAASAN , INTERVIEW “எனது சொந்த மொழியில் முதல் படம் வெளியாகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற படமாக ‘விவேகம்’ இருக்கும். மக்களின் வரவேற்பை எதிர்கொள்ள ரொம்ப ஆவலோடு இருக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார் அக்‌ஷரா ஹாசன். உதவி இயக்குநர், இந்தியில் தனுஷுடன் நடித்தது ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழில் ‘விவேகம்’ படத்தில் அறிமுகமாக இருக்கும் அவரிடம் உரையாடியதிலிருந்து…. அப்பா கமல், அக்கா ஸ்ருதி ஆகிய இருவரும் நீங்கள் தமிழில் அறிமுகமாவது பற்றி என்ன கூறினார்கள்? கடுமையாக உழைக்க வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்றார்கள். ஒவ்வொரு படத்திலும் நூறு சதவீதம் உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அமிதாப் பச்சன் சாருடன் நடிக்கும்போது ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தையுமே தனது முதல் படமாக நினைப்பார். என்னுடைய அப்பாவும் அப்படி நினைப்பவர்தான். அப்பா இந்த அளவு வளர்ச்சிபெற எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து வந்திருப்பார், வாழ்க்கை எப்போதுமே போராட்டங்கள் நிறைந...