Posts

Showing posts with the label T.R.Rajakumari

T.R.RAJAKUMARI ,A LEGEND OF TAMIL CINEMA

Image
T.R.RAJAKUMARI ,A LEGEND OF TAMIL CINEMA கனவுக்கன்னி பிம்பம் தொலைக்காத ராஜகுமாரி மயக்கும் கவர்ச்சிக் கண்களால் கிறக்கமுறும் வகையில் ஒரு கீழ்ப் பார்வையை எதிராளியின் மீது ஓட விட்டு, கவர்ச்சிகரமான ஒரு மென் சிரிப்பை அழகுப் பல்வரிசை வெளிப்படச் சிரித்து, நிலம் நோகாமல் அன்ன நடை நடந்து, இனிமையான குரலில் ‘நாதா’ என்றோ ‘சுவாமி’ அல்லது ‘பிரபோ’ என்றோ அவர் கதாநாயகனையோ அல்லது தான் விரும்பும் காதலனையோ அழைக்கையில் ஒட்டுமொத்தத் தமிழக ரசிகர்களும் ராஜகுமாரியின் அழகில் கட்டுண்டு கிடந்தார்கள். தமிழ் சினிமா எத்தனையோ கனவுக் கன்னிகளைப் பிரசவித்திருந்தாலும் முதல் கனவுக் கன்னியாகக் கண்டறியப்பட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர். 1930களின் இறுதியில் கதாநாயகி யாக அறிமுகமாகி இருந்தாலும், 50களிலும் கனவுக்கன்னியாகவும் ரசிகர்களின் மனம் ஏற்றுக் கொண்ட ‘டார்லிங்’ ஆகவும் வலம் வந்தவர். 50களில் ஏறக்குறைய பிரதான நாயகி வாய்ப்புகள் குறைந்து, வில்லி, குணச்சித்திர வேடங்களை அவர் ஏற்றிருந்தபோதிலும் ரசிகர்களின் மனங்களில் தன் இடத்தை அழுத்தமாகப் பதிய வைத்தவர் ராஜகுமாரி. அக்காலத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்பு...

T.R.RAJAKUMARI,A LEGEND ACTRESS OF TAMIL CINEMA BORN 1922,MAY 5 - 1999 SEPTEMBER 20

Image
T.R.RAJAKUMARI,A LEGEND  ACTRESS  OF TAMIL CINEMA  BORN  1922,MAY 5 - 1999 SEPTEMBER 20 டி. ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 – செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்வாழ்க்கைக் குறிப்பு ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் இராதாகிருஷ்ணன்-ரெங்கநாயகி தம்பதியருக்கு மகளாக பிறந்தார், இவர் தாயார் ரெங்கநாயகி தஞ்சை குசலாம்பாள் அவர்களின் புகழ் பெற்ற இசை மேதை குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜகுமாாி பிறந்த சில நாட்களிலே தகப்பனரான ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இளைய சகோதரர் ஆன டி. ஆர். ராமண்ணா குடும்பத்துடன் ஆதரவாக வாழ்ந்தார். திரைப்படத்துறை பங்களிப்புகள் நடிப்பு 1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்...

B.S.SAROJA , CIRCUS ARTIST, SINGER,ACTRESS BORN 1929 NOVEMBER 18

Image
B.S.SAROJA , CIRCUS ARTIST, SINGER,ACTRESS  BORN 1929 NOVEMBER 18 பி. எஸ். சரோஜா (B. S. Saroja, பிறப்பு: நவம்பர் 18, 1929) தமிழ்த் திரைப்பட நடிகையாவார். ஆரம்ப வாழ்க்கை[மூலத்தைத் தொகு ] சரோஜாவின் பூர்வீகம் சேலம் ஆகும். இவர் பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். சரோஜா சிறுமியாக இருந்தபோதே அவரது குடும்பம் சென்னை ராயபுரத்தில் குடியேறியது. சரோஜாவின் தாத்தா ஒரு வயலின் ஆசிரியர். அம்மா வாய்ப்பாட்டில் தேர்ந்தவர். பி. எஸ். சரோஜா தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தெலுங்குக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு இசையில் தேறினார். சரோஜா ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[1] வட்டரங்குப் பயிற்சி[மூலத்தைத் தொகு] சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்த போது அவரது பள்ளி மைதானத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் வட்டரங்குக் குழு முகாமிட்டிருந்தது. சரோஜாவும் ஆர்வத்தின் காரணமாக பள்ளிக்கூடத்துக்கு சரிவர போகாமல் அங்கேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். சர்க்கசுப் பயிற்சியாளர் டி...