MGR AND THENGAI SEENIVASAN
MGR AND THENGAI SEENIVASAN "தேங்காய் சீனிவாசன் மறைந்தபோது எம்.ஜி.ஆர் கொடுத்த நீண்ட தந்தி" # பழம்பெரும் நடிகர்களில் தேங்காய் சீனிவாசன் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவராக இருந்தார். வில்லனாக, நகைச்சுவையாக, குணச்சித்திரமாக நாயகனாகக்கூட நடித்து அசத்தியவர். காமெடியில் தனக்கென்று தனி பாணியை கடைபிடித்து ரசிக்க வைத்தவர். அவரது குடும்பத்திலிருந்து அவரது பேரன் ஆதித்யா நடிக்க வந்திருக்கிறார். இந்த நேரத்தில் தேங்காய் சீனிவாசனின் மகன் சிவசங்கர் அவரது தந்தையின் நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். “சின்ன வயசில் அப்பாவை நாங்கள் அதிகமாகப் பார்க்க முடியாது. பயங்கர பிஸியாக இருப்பார். 70 களில் பல படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அம்மாதான் எங்களைப் பார்த்துக்கொள்வார்கள். ஆன்மீகத்தில் அப்பாவுக்கு அதிகமான ஈடுபாடு. கோவில் கோவிலாக டூர் போகும்போது மட்டும் தான் நாங்கள் அப்பாவோடு இருப்போம். வீட்டில் இருக்கும்போது தரையில் பாய் போட்டு உட்கார்ந்து கொண்டு, நண்பர்களோடு அரட்டையடிப்பது அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். அவருக்கு சினிமாவும் நண்பர்களும்தான் முக்கியமாக இருந்தது. மேஜர் சுந...