Posts

Showing posts with the label S.G.KITTAPPA

S.G.KITTAPPA ,FIRST STAGE ACTOR 1906 AUGUST 25 - 1933 DECEMBER 2

Image
S.G.KITTAPPA ,FIRST STAGE ACTOR  1906 AUGUST 25 - 1933 DECEMBER 2 செங்கோட்டையை சேர்ந்த அந்த சிறுவன், தமிழ் நாடக மேடையை தனது பிரத்யேக சங்கீத பிரயோகத்தினால் தனது சொந்த சாம்ராஜ்யமாகவே மாற்றியிருந்தான். எட்டுக்கட்டை சுருதியில் இளைப்பில்லாத சங்கீத மழை பொழியும் ஆற்றல் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. 10 வயது கூட நிரம்பாத அந்த பாலகனின் சங்கீத கச்சேரியை கேட்க, பிரபல சங்கீத வித்வான்கள் அவன் நிகழ்ச்சி நடக்கும் சபாக்களை நோக்கி வண்டுபோல் மொய்த்தனர். எஸ்.ஜி.கிட்டப்பா 'தாய்மொழித் தமிழில் சுவையுடன் பாடினால் பாமரனும் ரசித்துக்கேட்பான்' என்ற சூத்திரத்தை புரிந்துகொண்ட முதல் கலைஞன் அவன்தான். அதுதான் பின்னாளில் இசை உலகில் அந்த சிறுவன் வெற்றிபெறவும், நாடக உலகம் அவரை கொண்டாடவும் காரணமானது. நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்த எஸ்.ஜி கிட்டப்பாதான் அந்த சிறுவன். செங்கோட்டையில் பிறந்த கிட்டப்பாவின் இயற்பெயர் ராமகிருஷ்ணன். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டையில் 1906-ம் ஆண்டு பிறந்தார். தந்தை கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி. இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சி...

S.G.KITTAPPA SUNDARAMBAL , FIRST CARNATIC SINGER DIED DECEMBER 2,1933

Image
S.G.KITTAPPA SUNDARAMBAL  ,  FIRST CARNATIC SINGER  DIED DECEMBER 2,1933 எஸ். ஜி. கிட்டப்பா (S. G. Kittappa) என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (ஆகத்து 25, 1906 – டிசம்பர் 2, 1933) திரைப்படக் காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகர் மற்றும் நாடகக் கலைஞர். இவர் திரைப்பட நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] கிட்டப்பா செங்கோட்டையில் பிறந்தவர். இயற்பெயர் இராமகிருஷ்ணன். அப்பொழுது செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். அதுவே கிட்டப்பா என்ற பெயராக நிலைத்து விட்டது. குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறிய வயத...