ASOKAN IN COURT AGAINST M.R.RADHA ,SHOT CASE 1967 JANUARY 12
ASOKAN IN COURT AGAINST M.R.RADHA ,SHOT CASE 1967 JANUARY 12 எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் நடிகர் அசோகன் சாட்சி . "புரட்சி நடக்கப்போகிறது" என்று ராதா தன்னிடம் கூறியதாக அவர் சொன்னார். எம்.ஜி.ஆரை சுட்டதாகவும், ராதா தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் எம்.ஆர்.ராதா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை செசன்சு கோர்ட்டில் நடந்தது. அப்போது நடிகர் அசோகன், போலீஸ் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:- "என் தொழில், நாடகங்களிலும், சினிமாக்களிலும் நடிப்பது. எனக்கு எம்.ஜி.ஆரையும், எம்.ஆர்.ராதாவையும் 7, 8 ஆண்டுகளாகத் தெரியும். முத்துக்குமரன் பிக்சர்ஸ் தயாரித்த "பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் நான், எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி, நம்பியார் ஆகியோர் நடித்தோம். "பெற்றால்தான் பிள்ளையா" படத்துக்குப்பிறகு அண்ணா புரொடக்சன்சாரின் "பவானி"படத்தில், நானும் எம்.ஆர். ராதாவும் சேர்ந்து நடித்தோம். "பவானி" படப்பிடிப்பில் கலந்து கொள்ள 10267ந்தேதி (சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு) கோடம் பாக்கம் பரணி ஸ்டூட...