DIANA ALIAS NAYANTHARA
DIANA ALIAS NAYANTHARA .தமிழில் ஒரு படத்திலாவது தலை காட்டிவிட வேண்டும் என்று ஆசை ஆசையாகக் கேரளாவிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தார் டயானா (நயன்தாராவின் இயற்பெயர்). சிம்பு நடித்த `தொட்டி ஜெயா' படத்துக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்போது, `ஆட்டோகிராப்' திரைப்படம் ஹிட்டானதால், அதில் நடித்த கோபிகாவை ஒப்பந்தம் செய்துவிட்டு, டயானாவுக்கு டாட்டா காட்டினார்கள். `எப்போது ஷூட்டிங்?' என்று ஏக்கத்தோடு காத்திருந்த டயானா, ஏமாற்றத்தோடு கேரளாவுக்குத் திரும்பிப் போனார். `தேடி அலைந்தால் கிடைக்காது; பிறகு உன்னையே தேடிவரும்' இதுதான் கோடம்பாக்க சினிமா அகராதி. சென்னைக்கு வந்து அலைந்தபோது டயானாவுக்குக் கிடைக்காத வாய்ப்பு, திருவனந்தபுரத்தில் இருந்தபோது தேடிவந்தது. மோகன்லால் நடிக்கும் படப்பிடிப்பில் சந்தித்தார் டைரக்டர் ஹரி. டயானா தமிழில் பேசப் பேச டைரக்டர் முகத்தில் பிரகாசம். பிறகு, `ஐயா' படத்தில் நயன்தாரா என்ற பெயரில் அவரை அறிமுகம் செய்து தமிழ் சினிமாவுக்குத் தாரை வார்த்தார். 2005-ம் ஆண்டு செப்டம்பரில் `தொட்டி ஜெயா' ரிலீஸாகிறது. அதே ஆண்டு `ஐயா' படம் வெளியாகி ப...