Showing posts with label PERIOD. Show all posts
Showing posts with label PERIOD. Show all posts

Sunday, 2 August 2020

LIVES OF MAHARAJAS DURING BRITISH PERIOD



LIVES OF MAHARAJAS DURING BRITISH PERIOD


கொக்கரக்கோ...கோ என சேவல் சாதகம் பண்ணும் அதிகாலையில் ஒரு மகாராஜா என்ன செய்துகொண்டிருப்பார்? சூரிய நமஸ்காரம், யோகா, உடற்பயிற்சி... சேச்சே, ஏதோ ஒன்று இரண்டு 'உத்தம’ மகாராஜாக்கள் அப்படி வேண்டாத வேலை செய்திருக்கலாம். அசல் ஐ.எஸ்.ஓ-9001 மகாராஜா எனப்படுபவர், அந்த நேரம் குப்புறப்படுத்து, குதூகலமாகத் தூங்கிக் கொண்டிருப்பார் அல்லது நள்ளிரவு எல்லாம் குடித்துக் கொட்டமடித்துவிட்டு அப்போதுதான் தூங்கவே ஆரம்பித்திருப்பார். 

பஞ்சாபின் ஜிந்த் சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா ரன்பிர் சிங் ராஜேந்திர பகதூர் இரண்டாம் வகை. விடிய விடிய முடிந்தவரை குஜால் கூத்தடித்துவிட்டு, விடியலில்தான் படுக்கையில் விழுவார். ஆனால், அவர் தூங்க ஆரம்பித்த நேரத்தில் இருந்து பணியாளர்களுக்கு கிலி பிடித்துவிடும். எப்போது எழுவார் எனத் தெரியாது. எழும் நேரத்தில் இன்னென்ன விஷயங்கள் இம்மி பிசகாமல் சரியாக இருக்க வேண்டும் என்பது ராஜ கட்டளை.

என்னென்ன?

குறிப்பிட்ட பணிப் பெண்கள், குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து பதமாக அவரது கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பணிப்பெண்கள் அவரது தலைமாட்டில் நின்று, குறைவான வால்யூமில் கோரஸாக சில பாடல்களை (மட்டுமே) பாடிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பணிப்பெண், எவ்வளவு மணி நேரமானாலும் சரி, 'சூடான’ தேநீர்க் கோப்பையோடு காத்திருக்க வேண்டும்.

இதுதான் ராஜ வாழ்க்கை!
இந்தப் பணிப்பெண்கள் ஆள் மாறவோ, இடம் மாறவோ கூடாது. மகாராஜா பள்ளியெழுச்சி ப்ரேக்ஃபாஸ்ட்டில் நிகழலாம்; லன்ச்சில் அமையலாம்; அல்லது சாவகாசமாக சாயங்காலம்  நிகழலாம். வேறு வழி இல்லை, பணிப்பெண்கள் தேவுடு காத்தே தீர வேண்டும்... ஆறாத தேநீருடன். போனால் போகிறது என மெதுமெதுவாகக் கண்கள் திறக்கும் ரன்பிர் சிங், தன் பார்வையால் சுற்றியிருக்கும் பணிப்பெண்களை நோட்டமிடுவார். அவர்கள் என்னதான் களைப்பாக இருந்தாலும் அப்போது பூத்த மலரைப்போல, வளையோசை கலகல மெட்டில் புன்னகைத்தே தீர வேண்டும். மகாராஜா எழுந்து உட்காரும் வேளையில் நொடி பிசகாமல் ஆவி பறக்கத் தேநீர் நீட்டப்பட வேண்டும்.

ரன்பிர் சிங், தேநீரை உறிஞ்ச ஆரம்பிக்கும் வேளையில், அரண்மனை ஆஸ்தான ஜோதிடர் பண்டிட் கரன் சந்த், மகாராஜாவின் உச்சி குளிர நான்கைந்து நிமிடங்கள் வாழ்த்தித் துதிபாடிவிட்டு, அன்றைய தினப்பலன்களையும் சொல்வார். 'நான்கில் கேது, ஒன்பதில் குரு  இருவர் பார்வையும் நீசபங்க ராஜயோகப் பார்வையாக இருப்பதால், சத்ரு ஜெயம், ஆரோக்கிய விருத்தி, அனுகூலத் திருப்பங்கள் உண்டாகும்...’ - இப்படி ரன்பீர் சிங்கின் பள்ளியெழுச்சிப் பொழுதில் ஏதாவது ஓரிரு குறைகள் நேர்ந்துவிட்டால் அவ்வளவுதான், அன்றைக்கு அரண்மனைப் பணியாளர்களுக்கான ஒட்டுமொத்த தினப்பலன்  மரண பயம்.

இதுதான் ராஜ வாழ்க்கை!
இன்னொரு நவாப் இருந்தார். அவரது காலைப் பொழுதே மிகவும் வித்தியாசமாகத் தொடங்கும். காலை எழுந்ததுமே ஒப்பனை. அதுவும் இப்படி எல்லாம்கூட ஒப்பனை செய்துகொள்ள முடியுமா என பெண்களே வெட்கி, வெம்பி, வேதனைப்பட்டு தலைகுனியும் அளவுக்கு, தலை முதல் அடி வரை உச்சபட்ச ஒப்பனை. ஆம், அந்த நவாப் ஒப்பனை வெறியர். அவர் பெயர் சாதிக் முகமத் கான் நான்காம் அப்பாஸி. இந்திய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்த பஹவல்பூரை (தற்போது பாகிஸ்தானில் ஒரு மாவட்டம்) 1866 - 1899 காலத்தில் ஆட்சி செய்தவர். காலைக்கடன்களை எல்லாம் கடகடவென முடித்துவிட்டு, ஆளுயரக் கண்ணாடி முன் சென்று நவாப் நிற்கும் வேளையில், சகல சௌந்தர்ய ஏற்பாடுகளுடனும் 'பல பேர் கொண்ட ஒப்பனைக் குழுவினர்’ தயாராக இருக்க வேண்டும். அங்கே ஒப்பனைப் படையெடுப்பு ஆரம்பமாகும். முதலில் உடையலங்காரம். ரகரகமான மஸ்லின் கால்சட்டைகள், வகைவகையான முழுநீள பட்டு ஜிப்பாக்கள், தகதகவென வெல்வெட் மேலங்கிகள். அவற்றில் நவாப் தேர்ந்தெடுக்கும் உடை, அவர் மேலேறும். அவருக்குச் சற்றே நீண்ட கூந்தல். ஆக, உடையலங்காரத்துக்குப் பின் சிகை அலங்காரம், அடுத்து நகை அலங்காரம், பின் மிகை அலங்காரம். நவாபுக்குத் திருப்தி உண்டாகும் வரை ஒப்பனை மணிக்கணக்கில்கூட நீளும். ஒரு சில சமயங்களில் ஒப்பனை செய்யும் பணியாள், களைப்பில் மயங்கி விழுந்ததும் உண்டு. நவாப் அசரவே மாட்டார் கிண் என்று நிற்பார். அவர் உடலில் எங்கு எல்லாம் அணிய முடியுமோ அங்கு எல்லாம் நகை ஜொலிக்கும். அத்தனையும் விதவிதமான, நவாபுக்காகவே வடிவமைக்கப்பட்ட தனித்துவ ஆபரணங்கள். இறுதியாக, வைரமும் மரகதமும் பதிக்கப்பட்ட ஒன்பது பவுண்ட் எடையுள்ள தங்கக் கிரீடம் தலையேறும். ஏதாவது அவசர காரியம் என்றாலும்கூட, பல மணி நேர ஒப்பனையில் திருப்தி ஏற்பட்ட பிறகே நவாப் நகர்வார். அப்படிப்பட்ட அதகள நவாப், தான் இரவில் படுத்து உறங்குவதற்காகவே பிரத்யேக டிசைனில் கட்டில் ஒன்றை பாரீஸில் ஆர்டர் செய்தார். அந்தக் கட்டில் தயாராகி வருவதற்கு முன்பாக, வெவ்வேறு அரண்மனைகளில் எத்தனை விதமான கூத்துகள் எல்லாம் நிகழ்ந்தன என, ஓர் எட்டு பார்த்துவிட்டு வரலாம்.

இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
திருவாங்கூர் அரண்மனையில் பின்கட்டில் சிவப்புநிற நீர் கொதிக்கிறது என்றால், மகாராணி சேது லட்சுமிபாய் குளிக்கப்போகிறார் என அர்த்தம். பணிப்பெண்கள் கையில் வெள்ளிக் கிண்ணங்களோடு, மகாராணி குளிக்கும் இடம் நோக்கி அணிவகுப்பார்கள். நான்கு பெரிய பித்தளைக் கொப்பரைகளில் நீர் வகைகள் தயாராக இருக்கும். அதாவது கூந்தலை அலச ஒருவித நீர். அலசிய பின் தலைக்கு ஊற்ற ஒன்று. உடலுக்கு ஊற்ற மற்றொன்று. ஒவ்வொன்றுமே விதவிதமான மூலிகைகள் கலந்து கொதிக்கவைக்கப்பட்டது. மகாராணி சேது லட்சுமிபாய் வந்து
உட்கார்ந்ததும் அரை மணி நேரத்துக்கு கூந்தலில் தேங்காய் எண்ணெய் மசாஜ். பின் சில மூலிகைப் பச்சிலைகளால் தயார்செய்த கலவையைத் தடவுவார்கள். கூந்தலை அலசி முடித்த பின், உடலுக்கு எண்ணெய் மசாஜ். அடுத்ததாக சீயக்காய் மற்றும் இதர வாசனைப் பொருட்கள் கலந்த பொடிகளால் தேகாபிஷேகம். இன்னும் சில அபிஷேகங்கள். இப்படி மகாராணி குளிரக் குளிரக் குளித்து முடிக்க மட்டும் இரண்டு மணி நேரம் பிடிக்கும். அடுத்து கூந்தலை சாம்பிராணி, இதர வாசனை வஸ்துக்கள் எல்லாம் சேர்த்து புகைபோட்டு உலர்த்த மேலும் அரை மணி நேரம். இப்படி திருவாங்கூர் மகாராணியின் குளியல் சேவை செய்வதற்கு என்றே பிரத்யேக வேலைக்காரப் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
குளித்தாயிற்று. காலை உணவுக்கு ஹைதராபாத் சமஸ்தான அரண்மனைக்குப் போகலாம்.

அது 20-ம் நூற்றாண்டின் இறுதி. வைஸ்ராய் கர்ஸன், ஒரு நாள் காலை உணவுக்காக ஹைதராபாத் அரண்மனைக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அப்போதைய நிஜாம் மெஹபூப் அலி கான், கர்ஸனை அசத்துவதற்குத் தயார் ஆனார். இந்த நிஜாமும் ஒப்பனைப் பிரியரே. தன் வாழ்வில் ஒரு முறை அணிந்த உடையை இன்னொரு முறை தொட்டுக்கூடப் பார்க்காதவர். நாளரு உடையும் பொழுதொரு பெர்ஃப்யூமாகத்தான் வலம் வருவார். அவருக்கும் பிற மனிதர்களைப் போல இரண்டே கால்கள்தான் இருந்தன. என்றாலும், ஆயிரக்கணக்கான ஜோடி காலணிகளை வாங்கி அடுக்கிவைத்திருந்தார். உடையும் செருப்பும் புதிது புதிதாகத் தேவைப்பட்டதுபோல அந்தப்புரத்தில் பெண்களும்... ம். வைஸ்ராய் கர்ஸன் வருகிறார் என்றதுமே, மெஹபூப் அரண்மனைச் சமையல் நிபுணர்களை முடுக்கிவிட்டார். நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன, தவழ்வன, நீந்துவன என விதவிதமான ஜீவராசிகள் எல்லாம், வைஸ்ராயே வந்து தங்களுக்கு இறுதி மரியாதை செய்யவிருக்கிறார் என்ற இறுமாப்புடன், பதார்த்தங்களாக டைனிங் டேபிளில் மல்லாந்துகிடந்தன. வந்தார் வைஸ்ராய். வரவேற்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். டைனிங் டேபிள் முன் பசியுடன் அமர்ந்தார். அங்கே குவித்துவைக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்களைக் கண்டதும் அவருக்கு அஜீரணமாகிவிட்டதுபோல. இதெல்லாம் யாருக்கு என்பதுபோல நிஜாமை நோக்கினார்.

இதுதான் ராஜ வாழ்க்கை!
இதுதான் ராஜ வாழ்க்கை!
'சாப்பிடுங்கள் வைஸ்ராய்’ என்றார் நிஜாம் பெருமிதத்துடன்.

'பிரட் பட்டர் ஜாம் கிடைக்குமா?’ என கர்ஸன் கேட்கவும், 'போடா வெண்ணெய்’ எனச் சொன்னதுபோலவே கேட்டது நிஜாமுக்கு.

இப்படி வைஸ்ராயிடம் அசிங்கப்பட்ட நிஜாமும் மெஹபூபும் லேசுப்பட்டவர் அல்ல. அவர், எங்கேயாவது விருந்துக்குச் செல்கிறார் என்றால், விருந்து கொடுப்பவர்களை எந்த விதத்தில் திணறடிக்கலாம் என யோசித்தபடிதான் செல்வார்.

ஒருமுறை ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட சிறு பகுதி ஒன்றை ஆண்டுவந்த நவாப் முஸலாம் ஜங், நிஜாமை விருந்துக்கு அழைத்திருந்தார். நிஜாமுக்கு என ஹைதராபாத் சமையல் கலாசாரத்தில் என்னென்ன உண்டோ அத்தனையையும் தயார்செய்தும் வைத்திருந்தார். விருந்துக்கு வந்த நிஜாம், அணிவகுத்திருக்கும் உணவுகளின் மரியாதையை பார்வையால் ஏற்றுக்கொண்டார். நவாபைப் பார்த்தார். 'சக்னா இல்லையா?’ என்றார் முகச்சுளிப்புடன். நவாபுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சக்னா என்பது ஆட்டின் வயிற்றுப் பகுதி இறைச்சி கொண்டு செய்யப்படும் குழம்பு போன்ற பதார்த்தம். ஹைதராபாத்தின் ஏழை இஸ்லாமியர்கள் உண்ணும் உணவு. அந்தஸ்து குறைந்த உணவை ஐயன்மீர் கேட்கிறாரே என ஒரு நொடி பதைபதைத்த நவாப், வேறு வழியின்றி பணியாள்களை ஏவினார், 'இப்போதே இங்கே சக்னா வரவேண்டும்.’ இப்படி எப்போது எதைக் கேட்பார், எதைச் செய்வார் என்றே தெரியாத எடக்குமடக்கு மகாராஜாக்களிடம் பணியாளராக இருப்பது பூர்வஜென்மங்களில் செய்த பாவங்களுக்கான ஒட்டுமொத்த தண்டனை.

பிகானிர் மகாராஜா கர்னி சிங்கின் அரண்மனையில் ஏராளமான வேலைக்காரர்கள் உண்டு. குறிப்பாக அந்த 'நோட்ஸ்’ வேலைக்காரர். அதாவது, எப்போது மகாராஜா என்ன சொன்னாலும், அதை அந்த வேலைக்காரர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் ஒரு நோட்டில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். 'அரண்மனைக்கு புதிய பூத்தொட்டிகள் வாங்க வேண்டும்’ எனச் சொன்னாலும் சரி, 'காலையில சாப்பிட்ட புலாவில் உப்பு அதிகம்’ எனச் சொன்னாலும் சரி, வேலைக்காரர் குறித்துக்கொள்வார். அந்தக் குறிப்புகளைக்கொண்டு என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை. நோட்டு காலியானதும் அடுத்த நோட்டில் குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தார் அந்த வேலைக்காரர், அவ்வளவுதான்.

இதுதான் ராஜ வாழ்க்கை!

கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் அரண்மனை வேலைக்காரர்களை 'பட்டக்கார்’ என அழைப்பார்கள். வெள்ளை உடை, சிவப்பு நிறத் தலைப்பாகை அவர்களது சீருடை. ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வரும்போது பட்டக்கார்கள் வணக்கம் வைக்க வேண்டும். சாதாரணமாக அல்ல, முதலில் ஏழு போல வளைந்து, உள்ளங்கை இரண்டையும் சேர்க்க வேண்டும். பின் அப்படியே முட்டிபோட்டு, முன் நெற்றியால் தரையைத் தொட வேண்டும். மகாராணியோ, மகாராஜாவோ அவர்களைக் கடக்கும்போது எல்லாம் இதேபோல ஏழு முறை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இத்தனை முறை வணங்கினால் போதும் என்ற கணக்கு எல்லாம் கிடையாது. அதுபோக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த குஞ்சு, குளுவான்கள் வந்தால்கூட, வணக்கம் வைக்க வேண்டியது பட்டக்கார்களின் தலையெழுத்து. ஆனால் அந்தக் குஞ்சு, குளுவான்களுக்கு பட்டக்கார்களைப் படுத்துவதற்கு என்றே அவர்கள் முன்பாக வருவதும் திரும்பிப்போவதுமாக இருப்பார்கள். பட்டக்கார்கள்தான் பாவம், இடுப்பொடிய வணக்கம் வைத்துக்கொண்டே இருப்பார்கள்.

சில பணியாளர்கள் தன் அப்பாவித்தனத்தால் அல்லது அடப்பாவித்தனத்தால் மகாராஜாக்களை 180 டிகிரி கவிழ்த்துவிட்ட சம்பவங்களும் சரித்திரத்தில் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று. ஒருமுறை இரானின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த, 47-வது இமாம் இரண்டாம் அகா கான், பம்பாயில் 'ராயல் விருந்து’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு சமஸ்தானங்களைச் சேர்ந்த (இந்து) மகாராஜாக்கள், முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, தனது பார்ஸி இனத்தைச் சேர்ந்த தலைமை செஃபிடம், 'மாட்டு இறைச்சி இருக்கவே கூடாது’ எனக் கறாராகக் கட்டளையிட்டிருந்தார் அகா கான். ஆனால், விருந்தின் ஆரம்பத்திலேயே எருதுத் தலை ஒன்று சமைத்து, அலங்கரித்து எடுத்து வந்தார்கள். விருந்தினர்கள் வெலவெலத்துப் போக, அகா கான் உடனே விருந்தை நிறுத்தச் சொன்னார். உச்சபட்சக் கோபத்துடன் பார்ஸி செஃபிடம் கத்தினார். 'என்ன செய்திருக்கிறாய் நீ?’ சமையல்காரர் அப்பாவியாக, நடுநடுங்கச் சொன்ன பதில், 'ஐயா, மாட்டு இறைச்சிதானே கூடாது என்றீர்கள். நான் எருதைத்தானே சமைத்திருக்கிறேன்.’

அதற்குப் பின் அந்த பார்ஸி செஃபின் நிலை என்ன ஆனது என்பது பற்றி எந்தக் கல்வெட்டிலும் செதுக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பிய செஃப்கள் பலரும், இந்திய அரண்மனையில் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை சரித்திரம் பதிவுசெய்திருக்கிறது. சீக்கியர்கள், ராஜபுத்திரர்கள், மராத்தியர்கள், இஸ்லாமியர்கள் என, அரண்மனைகளில் அவரவர் இனத்துக்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்கள், சமையல் கலாசாரங்கள் இருந்தன. எப்போது ஆங்கிலேயர்கள் அரண்மனைகளுக்குள் புகுந்தார்களோ, அப்போது இருந்தே ஐரோப்பியக் கலாசாரமும் சமையல்கட்டுகளில் 'ஃப்ரை’ ஆக ஆரம்பித்தது. அரண்மனைகளில் ஐரோப்பிய பாணி சமையல்கட்டுகள் உதித்தன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருக்க, பிரிட்டிஷ் செஃப்கள் ராஜ குடும்பத்தின் நாக்குகளை, தங்கள் சமையலால் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அந்த ஐரோப்பிய செஃப்கள் பெற்ற மாதச் சம்பளம் ரூ.500. காலை உணவு தயாரிக்க ஒரு குழு. மதிய உணவுக்கு தனிக் குழு. இரவு உணவுக்கு இன்னொரு குழு. சிறப்பு உணவுகளுக்கு மற்றொரு குழு. விருந்து என்றால் வேறு ஒரு குழு... என, சமஸ்தானங்களில் யானைப் படை, குதிரைப் படை இருந்ததோ இல்லையோ, சமையல் படை மட்டும் தனியாக இருந்தது. அப்படி சமையல் படை வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் ராம்பூர் நவாப் ஹமித் அலி கான். அவரது வாழ்வின் மகோன்னதமான லட்சியம் ஒன்றே ஒன்றுதான். நாக்குக்கு எந்தக் குறை வைக்காமல், நன்றாக, ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும். நவாபின் இந்த உன்னத லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவே அரண்மனையில் சுமார் 300 சமையல்காரர்கள் இருந்தார்கள். ஒருவர் மீன்கறி சமைப்பதில் எக்ஸ்பர்ட் என்றால், அவருக்கு அது மட்டுமே வேலை. இன்னொருவர் தலைக்கறி செய்வதில் தல என்றால், அவர் ஆயுசுக்கும் அதற்கு என்றே நேர்ந்துவிடப்பட்டவர். இப்படி 300 பேரும் தங்களுக்கான பதார்த்தத்தில் தன்னிகரற்றவர்கள். தவிர, ஐரோப்பிய பாணி உணவு வகைகளைப் பக்குவமாகச் சமைப்பதற்கு என்றே தனிப் படை ஒன்றையும் வைத்திருந்தார் நவாப். ஆனால், ஒரு நாளைக்கு ஒரே ஒரு வேளை, அதுவும் இரவில் மட்டுமே உண்டார் நவாப். அதுவும் எப்படி? 'இன்னிக்கு முகலாய வகை சாப்பாடு தயார் செஞ்சுருங்கப்பா’ என நவாபின் கட்டளை, மதிய வேளையில் சமையல் அறைக்குள் புகும். முகலாய சமையல் கலைஞர்கள் பரபரப்பாவார்கள். ஆறு மணிக்கு எல்லாம் சமையல் மேஜையில் சாப்பாடு தயாராக இருக்கும். குறைந்தது 100 பதார்த்தங்கள். ஏழு மணிக்கு வந்து அமரும் நவாப், ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து ஆற, அமர அசைபோடுவார். எல்லாம் சேர்த்து சில கிலோக்கள் உணவு உண்பார். எதையும் வேண்டாம் என ஒதுக்க
மாட்டார். குறைந்தபட்சம் ஒரு கரண்டி பதார்த்தமாவது அவரது நாக்கில் முக்திபெறும். சாப்பிட்டு முடித்ததும் நிறைய ஜில் தண்ணீர் குடிப்பார். ஏப்பம் வந்ததும் அவரது உதடுகள் துருக்கி சிகரெட்டுகளைக் கவ்விக்கொள்ளும். அன்றைய தினத்துக்கான உணவு அவ்வளவே. மற்றபடி காலை, மதியத்தில் பசித்தால்கூட சாப்பிட மாட்டார். சிகரெட் மட்டுமே.

வேட்டையாடுதல், இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் மிக முக்கியமானது. இதுவரை தான் வேட்டையாடிய புலி, சிங்கம், கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் ஸ்கோரை, பிற சமஸ்தான மகாராஜாக்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும்; அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்... டுமீல்!

இப்படி வேட்டையாடுவதற்காகவே வைஸ்ராயும், பிற பிரிட்டிஷ் அதிகாரிகளும் ஏன் பிரிட்டன் கிங், பிரின்ஸ்கூட இந்தியாவுக்கு வருவது உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால், விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்தது இல்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால், யானை வேட்டை சாத்தியம். இவை போக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன. பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப் போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வதை வைஸ்ராய்கள் அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார்கள். மிரள வைக்கும் வேட்டை புள்ளிவிவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கின் புலி ஸ்கோர், தொள்ளாயிரத்துச் சொச்சம்.

சரி, அரண்மனைக்குள் வந்ததே வந்துவிட்டோம். சற்றே அந்தப்புரத்தையும் எட்டிப்பார்த்துவிடுவோம். பொதுவாக, இந்து சமஸ்தானங்களின் அந்தப்புரம் எந்த வகையில் இயங்கி வந்தது? மகாராஜாவின் அதிகாரபூர்வ முதல் மகாராணியே அந்தப்புரத்தின் முதலமைச்சர். அந்த மகாராணிக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில், பட்டத்து இளவரசரைப் பிரசவிக்கும் மகாராணிக்குப் பதவி கைமாறுவது உண்டு. மகாராணிகளுக்கு அடுத்த நிலையில் வருபவர்கள் ராணிகள். அதற்கு அடுத்து ஆசைநாயகிகள். அந்தப்புரத்தில் மகாராணிகளின் அறைகளே மிகமிகப் பெரியது. அவர்களுக்குச் சேவகம் செய்யவே நூற்றுக்கணக்கான பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். ராணிகளின் அறைகள் ஓரளவு பெரியவை. ஒரு சில பணிப் பெண்கள் இவர்களுக்கு உண்டு. மகாராஜாவின் அப்போதைய ஆசைநாயகிகளுக்கு அந்தப்புரத்தில் சிங்கிள் பெட்ரூம் ஒதுக்கப்படும். மற்ற பெண்களுக்கு? பொது அறைகளே. இங்கே இந்தப் பெண்களுக்கு உரிய உடைகள், நகைகள், உணவு எல்லாமே தராதரம் பார்த்துதான் வழங்கப்படும். மகாராணிகளின் நகைகள், உடைகள் பற்றி கேட்கவே வேண்டாம். ராணிகளுக்கும் குறை இல்லை. ஆசைநாயகிகளுக்கு? அது மகாராஜா அவர்கள் மேல் வைத்துள்ள தனிப்பட்ட காதலையும் காமத்தையும் பொருத்தது.

இதுதான் ராஜ வாழ்க்கை!

பொதுவாக ஒரு நாளைக்கு அரண்மனையில் 50 முதல் 70 பதார்த்தங்கள் வரை சமைப்பார்கள். மகாராணிகள் தங்களுக்கான தங்கத் தட்டில் விருப்பமான எதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ராணிகளுக்கு அதிகபட்சம் 30 வகை பதார்த்தங்கள் வரை வெள்ளித் தட்டுகளில் பரிமாறப்படும். ஆசைநாயகிகளுக்கு அதிகபட்சம் 10 பதார்த்தங்களே. அதுவும் பித்தளைத் தட்டில் அளவுச் சாப்பாடு. ஆக, அந்தப்புர வாழ் பெண்கள், மகாராஜாவின் கடைக்கண்ணில் விழுந்து ஆசைநாயகியாகப் போராடியதும், ஆசைநாயகியாக இருக்கும் பெண் ராணியாகப் பதவி உயர்வு பெறப் போராடியதும், அந்தப்புரச் சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்து வெளியேறி விடமாட்டோமா என சில பெண்கள் போராடியதும்... நிகழ்ந்த நிஜங்களே.

சரி, பஹவல்பூர் நவாப் சாதிக் முகமத் கான் பாரீஸில் ஏதோ கட்டில் ஆர்டர் செய்திருந்தாரே. அது எப்படிப்பட்ட கட்டில்? Christople. இது 1830-ம் ஆண்டில் விதவிதமான வெள்ளி அலங்காரப் பொருள்கள் தயாரிப்பதற்கு என்றே பாரீஸில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இங்கேதான் நவாப் தனக்கான தனித்துவக் கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். கட்டில் அரண்மனைக்கு வந்து இறங்கியதும் நவாப் அதன் மீது ஏறிக் குதித்தார் குழந்தைபோல. அதன் அழகு அப்படிப்பட்டது. முழுக்க ரோஸ்வுட் - அதன் மேல் வெள்ளியால் இழைக்கப்பட்ட கட்டில். கட்டிலின் நான்கு புறமும் ஆளுயர அழகிய பெண்களின் நிர்வாணச் சிலைகள். அந்தப் பெண்களில் கைகளில் விசிறி. நவாப் படுத்துக்கொண்டே ஒரு பட்டனைத் தட்டினால், அந்தச் சிலைகள் விசிற ஆரம்பிக்கும். இன்னொரு பட்டனைத் தட்டினால், அடுத்த 30 நிமிடங்களுக்கு கட்டிலில் இணைக்கப்பட்டிருந்த இசைப் பெட்டியில் இருந்து மெல்லிய இசை கிறக்கத்துடன் ஒலிக்கும். இப்படிப்பட்ட அழகுக் கட்டிலில், கிறங்கும் இசை ஒலிக்க, அந்தப் பேரழகுப் பொம்மைகளைப் பார்த்தபடி நவாப் சும்மா தூங்கியிருப்பாரா என்ன எனக் கேட்டால்... மீதி உங்கள் கற்பனைக்கு!
..

Sunday, 29 July 2018

EDUCATION IN INDIA DURING THE BRITISH PERIOD



EDUCATION IN INDIA 
DURING THE BRITISH PERIOD




Education is a powerful tool to unlock the golden door of freedom which can change the world. With the advent of British, their policies and measures breached the legacies of traditional schools of learning and this resulted in the need for creating class of subordinates. To achieve this goal, they instituted a number of acts to create an Indian canvas of English colour through the education system.

Initially, British East India Company was not concerned with the development of education system because their prime motive was trading and profit-making. To rule in India, they planned to educate a small section of upper and middle classes to create a class “Indian in blood and colour but English in taste” who would act as interpreters between the Government and the masses. This was also called the “downward filtration theory”. The following steps and measures were taken by the British for the development of Education in India.The chronological development of Education during the British Period in India is discussed below:



1813 Act & the Education

The East India Company Act, 1813[1]
(Charter Act of 1813)
Long titleAn Act for continuing in the East IndiaCompany, for a further Term, the Possession of the British Territories in India, together with certain exclusive Privileges; for establishing further Regulations for the Government of the said Territories, and the better Administration of Justice within the same; and for regulating the Trade to and from the Places within the Limits of the said Company's Charter
Citation53 Geo. 3 c. 155
Dates
Royal assent21 July 1813
Status: Repeale
1. Charles Grant and William Wilberforce, who was missionary activists, compelled the East India Company to give up its non-invention policy and make way for spreading education through English in order to teach western literature and preach Christianity. Hence, the British Parliament added a clause in 1813 charter that Governor-General-in-Council less than one lakh for education and allowed the Christian Missionaries to spread their religious ideas in India.

2. Act had its own importance because it was first instance that British East India Company acknowledged for the promotion of education in India.

3. With the efforts of R.R.M Roy, the Calcutta College was established for imparting Western education.  Also three Sanskrit colleges were set up at Calcutta.

General Committee of Public Instruction, 1823

1. This committee was formed to look after the development of education in India which was dominated by Orientalists who were the great supporter of Oriental learning rather than the Anglican. Hence, they created paramount of pressure on the British India Company to promote Western Education. As a result, spread of education in India got discursive between Orientalist-Anglicist and Macaulay’s resolution come across with clear picture of British education system.

Lord Macaulay’s Education Policy, 1835

1. This policy was an attempt to create that system of education which educates only upper strata of society through English.

2. English become court language and Persian was abolished as court language.

3. Printings of English books were made free and available at very low price.

4. English education gets more fund as compare to oriental learning.

5. In 1849, JED Bethune founded Bethune School.

6. Agriculture Institute was established at Pusa (Bihar)

7. Engineering Institute was established at Roorkee.

Wood’s Dispatch, 1854
1. It is considered as the “Magna Carta of English Education in India” and contained comprehensive plan for spreading education in India.

2. It states the responsibility of State for the spread of education to the masses.

3. It recommended the hierarchy education level- At bottom, vernacular primary school; at district, Anglo-vernacular High Schools and affiliated college, and affiliated universities of Calcutta, Bombay and Madras Presidency.

4. Recommended English as a medium of instruction for higher studies and vernacular at school level

Hunter Commission (1882-83)

1. It was formed to evaluate the achievements of Wood Dispatch of 1854 under W.W Hunter in 1882.

2. It underlined the state’s role in the extension and improvement of primary education and secondary education.

3. It underlined the transfer of control to district and municipal boards.

4. It recommended two division of secondary education- Literary up to university; Vocational for commercial career.

Sadler Commission

1. It was formed to study on the problems Calcutta University and their recommendations were applicable to other universities also.

2. Their observations were as follows:

I. 12-year school course

II. 3-years degree after the intermediate stage


III. Centralised functioning of universities, unitary residential-teaching autonomous body.

IV. Recommended extended facilities for applied scientific and technological education, teacher’s training and female education.

Hence, we can say the British education system were influence by the aspiration of Christian Missionaries. It was injected to ensure a cheap supply of educated Indians to increase a number of subordinate posts in administration and in British business concern. That’s why, they emphasis on English as a medium of instruction and also to glorified British conquerors and their administration.

Friday, 13 July 2018

SILAPPATHIKARAM PERIOD 1 ST OR 2ND CENTURY


SILAPPATHIKARAM  PERIOD 
1 ST OR 2ND CENTURY






சிலப்பதிகாரம்

தமிழ் நாட்டு மூவேந்தர் வரலாறு அறிய மிகவும் உதவும் காப்பியம் சிலப்பதிகாரம். மேலும் அக்கால நாகரிக நிலை பற்றி அறிய உதவும் காப்பியம் ஆகும். இக்காப்பியத்தைக் குறித்த ஆய்வுகள் சுமார் 1890 -ல் தான் முதன் முதலில் எழுந்தது எனக் கொள்ளலாம். இசை, வரலாற்றுப் பொருள்கள் பற்றி இக்காவியம் தமிழ் மக்களிடையே பரவி வந்ததேயன்றி தமிழ் மக்களிடையே இக்காப்பியத்தின் கலைச் சிறப்பு, கவிதைநடை, பிற இலக்கியச் சுவைகள் அறியப்படாமலே இருந்தன. உ. வே சாமிநாதய்யர் சிலப்பதிகாரம் குறித்த ஏடுகளைத் தேடி ஒரு வித்துவானிடத்தில் சென்ற போது சிலப்பதிகாரம் என்ற சுவடியைப் பற்றிக் கேட்டார் ஆனால் அவர் சிலப்பதிகாரம் என்றால் அதற்கு பொருளே இல்லை 'சிறப்பதிகாரம் என்ற பெயருள்ளதாய் இருத்தல் வேண்டும் என்றாராம். இதன் மூலம் படித்தவர்கள் கூட சிலப்பதிகாரம் பற்றி பலரும் அறியாத நிலை இருந்து வந்துள்ளது.

சிலப்பதிகாரம் குறித்த கர்ண பரம்பரைக் கதைகள்[தொகு]
இக்காப்பியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லையாயினும் இதன் கதை பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களிடையே அறிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இலங்கை தீவிலும், கொச்சி முதலிய பிரதேசங்களிலும் இக்கண்ணகி கதை பலவாறாகத் திரிந்து வழங்கி வந்தது. சாதாரணக் கல்வி உடைய பலரும் அம்மானை வடிவத்தில் அமைந்த இக்கதையை மனனம் செய்து இரவில் பலரும் கேட்கும்படி சொல்லி வந்துள்ளனர். வில்லுப்பாட்டாகவும் இக்கதை வழங்கி வந்துள்ளது. மேலும் கோவா நகரத்தில் எம்.ஃப்ரெரீ(M.FRERE) என்பவர் ' தக்காணத்து பண்டை நாட்கள்' (Old Deccan Days) என்ற ஆங்கிலக் கதைத் தொகுதியொன்றினை 1868 -ல் வெளியிட்டுள்ளார். இதில் 'சந்திரா பழி வாங்கியது' என்ற தலைப்பில் கோவலன் கதை காட்சியளிக்கிறது. ஏடுகளில் காணும் அம்மானையைப் புகழேந்திப் புலவர் இயற்றியது என்பாரும் உளர். மேலும் திருவிதாங்கூர் பகுதியில் கிடைத்த கோவலன் சரித்திரம் என்ற பிரதியில் அரங்கேற்றுக் காதை முதலிய தலைப்புகளோடு சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடன் காணப்படுகிறது. இதன் கதாநாயகி கண்ணகி காளியின் அம்சம் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோளூர் பகவதி அம்மன் 'ஒற்றை முலைச்சி' என்ற பெயருடன் விளங்குகிறாள்.மேலும் தாசியின் தொழில் முறை பற்றி கண்ணகிக்கு முற்றிலும் மாறுபட்ட இயல்புடன் மாதவி படைக்கப்பட்டுள்ளாள்.


உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள்கள்[தொகு]
1650 க்கு முன்புவரை கற்றோர்க்கு மாத்திரம் தெரிந்ததாக இந்நூலானது விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் நச்சினார்க்கினியர் இந்நூலைத் தமது தொல்காப்பிய உரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் 14 ஆம் நூற்றாண்டினரான பரிமேலழகரும்,மயிலைநாதரும் இக்காப்பியப் பகுதிகளை பல இடங்களில் ஆண்டுள்ளனர். மேலும் அதே நூற்றாண்டில் வாழ்ந்த பேராசியரும் தனது களவியலுரை யில் இந்நூலை ஆண்டிருக்கிறார். இக்காலத்திலே தான் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வழக்கு தோன்றி விட்டது என்பதனை நன்னூலால் அறியலாம். 11- ஆம் நூற்றாண்டில் இக்காப்பியம் அறிஞர்களுக்குள்ளே பெருவழக்காய் இருந்தது என்பதனை யாப்பருங்கல விருத்தியுரையாலும் தொல்காப்பிய உரையாலும் அறியலாம். இதற்கு முன்பாக 10- ஆம் நூற்றாண்டளவில் எழுந்த களவியலுரையிலும் இந்நூலை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.

தொன்மை[தொகு]
நச்சினார்க்கினியார் தமது தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் (237) தொன்மை என்பதை 'உரைவிராஅயப் பழமையாகிய கதைப் பொருளாகச் சொல்லப்படுவது' என விளக்கி உதாரணங்களாக பெருந்தேவனார் பாரதம், தகரூர் யாத்திரை, சிலப்பதிகாரம் என்ற மூன்றனையும் தருகிறார். எனவே பழமையாகிய கதையை உட்கொண்டே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது என விளங்குகிறது.

நற்றிணையில் கண்ணகி[தொகு]
மேலும் நற்றிணைப் பாடல் (216) ஒன்று திருமாவுண்ணி என்பவள் தன்மீது அன்பற்றுத் துறந்து தனக்கு அயலான் போலாகிவிட்ட காதலனைப் பற்றிக் கவலை கொண்டு வருந்தினாள் எனவும், பின் தனது ஒருமுலையைத் திருகியெறிந்து வேங்கைமரத்தின் கீழ் நின்றாளெனவும் குறிக்கிறது.

யாப்பருங்கலத்தில் கண்ணகி[தொகு]
யாப்பருங்கல விருத்தியில் (பக் 351) ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது. இது பத்தினிச் செய்யுள் என உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே சிலப்பதிகாரம் தோன்றியதற்கு முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்து தமிழகம் முழுதும் பரவியது என அறியலாம்.

இளங்கோவும் சாத்தனாரும்[தொகு]
மேற்கண்ட கூற்றுகளால் இளங்கோவடிகள் தன் காலத்தில் நிகழ்ந்த உண்மைச் செய்திக்ளை அவர் காவியமாக அமைக்கவில்லை என்பது வெளிப்படை. சேரன் செங்குட்டுவனுக்கு இளங்கோ என்றொரு தம்பி இருந்ததாகப் புலப்படவில்லை. சேரர்தம் வரலாறு கூறும் பதிற்றுப்பத்து நூலில் உள்ள ஐந்தாம் பத்து சேரன் செங்குட்டுவனைப் பற்றியது. இவனுக்குத் தம்பி ஒருவன் உண்டென்ற வரலாறு அந்நூலில் இல்லை. மணிமேகலையிலும் இது காணப்படவில்லை. எனவே இளங்கோவடிகள் சேரர் பரம்பரையில் மிகவும் பிற்காலத்தே தோன்றியவராக இருக்கலாம்.

தொகை நூல்கள் ஒன்றிலேனும் இவரது செய்யுள் காணப்படாமையாலும் இவர் கடைச் சங்கத்துப் புலவர் அல்லர் என்பது தெளிவு. இவரோடு சமகாலத்தவரான் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்பவர், கடைச் சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனாரின் வேறானவர்.சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் சீத்தலைச் சாத்தன் என்ற பெயர்வழக்கு காணப்படாமை இம்முடிவினை வலியுறுத்தும். அரும்பத உரைக்காரரும், அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகாரத்தைக் கேட்டவர் சீத்தலைச் சாத்தன் எனக் கூறவில்லை. பேராசிரியர் உரையில் தான் இருவரும் ஒன்றெனக் கூறப்பட்டுள்ளது.(தொல்-செய்-240 உரை)<br

மணிமேகலையில் கோவலன் கதை[தொகு]
மணிமேகலையில் 28-ஆம் காதை(103 முதலிய வரிகள்) சேரன் செங்குட்டுவனது தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற தோழனாய்க் கோவலன் என்பான் ஒருவன் இருந்தனன் என்றும், அவன் மரபில் ஒன்பது தலைமுறைக்குப் பிற்பட்டுத் தோன்றிய வேறொரு கோவலனே சிலப்பதிகாரத்தின் கதா நாயகன் என்று கூறுகிறது. எனவே மணிமேகலை இயற்றிய சாத்தனார், காலத்தால் பிற்பட்டவர் என்பது தெளிவு. மேலும் 'கோவலனும் கண்ணகியும் புத்ததேவன் கபிலவஸ்துவில் அவதரித்துச் செய்யும் தருமோபதேசத்தைக் கேட்டு வீடுபேறு அடைவார்கள்' என்று மாசாத்துவன் கூறியதாகச் சாத்தனார் மணிமேகலையில் குறிப்பிட்டுள்ளார். எனில் புத்தன் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்திலேயே கோவலன் முதலியோர் வாழ்ந்தனர் என்பது இவர் கொண்ட கதையாகும். இது முன்பின் முரணாகும். எனவே சாத்தனார் சங்ககாலப் புலவர் எனக் கொள்வது பிழையாகும்.

இளங்கோவடிகளும் கூலவாணிகனும் பிற்காலத்தவரேயாவர். இவர்கள் தம் காலத்து வழங்கிய கர்ண பரம்பரைக் கதைகளைக் கொண்டே தம் காப்பியங்களைப் படைத்தார்கள் என்பது தெளிவு. இளங்கோவடிகள் தாமறிந்த கதையைச் சங்க காலத்தோடு தொடர்பு படுத்தி நூலினை யாத்துள்ளார் என அறியலாம்.

சிலப்பதிகாரக் காலம் கி.பி. 2- ஆம் நூற்றாண்டு என்ற கருத்து[தொகு]
சிலப்பதிகாரம் சங்க காலத்தில் தோன்றியது என்பர்.கடைச் சங்க காலத்திலேயே சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப் பாராட்டப்பட்டுள்ளன. மேலும் பல்லவர்களைப் பற்றி சிலப்பதிகாரம் எதனையும் கூறவில்லையாதலால் இந்நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்பர். சிலம்பும் மணி மேகலையும் பல இடங்களில் கச்சியைப்(காஞ்சி) பற்றிக் குறிப்பிட்டாலும் பல்லவ வேந்தர்கள் ஒருவரையும் ஒரு இடத்தில் கூட குறிக்கவில்லை. பல்லவர் பிராகிருத மொழியில் வெளியிட்ட ஆதி ஆணை வெளியீடுகள் மயிடவோலு, ஹீரகடஹள்ளி, பிரித்தானியப் பொருட்காட்சி சாலை ஆகிய இடங்களில் இன்னும் உள்ளன. இந்தியக் கல்வெட்டுத்தொகுதியிலும் இவை இடம் பெற்றுள்ளன. இவை கி. பி. 200-250. ஆண்டில் வெளியிடப்பட்டிருத்தல் வேண்டும் என்பர். பல்லவர்கள் காஞ்சியில் குடிபுகும் முன் அப்பகுதி சோழர்தம் வட எல்லைப் பகுதியாக அமைந்ததோடு, சோழர் பிரதிநிதிகளுக்கும் தலைநகரமாக இருந்திருந்தது என்பதை சங்க நூல்களின் வாயிலாக அறியலாம்.

சிலப்பதிகாரக் காலத்தில் காஞ்சியில் சோழர் பிரதிநிதியாக இருந்தவன் தொண்டைமான் இளந்திரையன் என்பவன். இவனே கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பெரும்பாணாற்றுப் படை என்ற நூலில் பாடப்பட்டவனாவான். பல்லவர் குடியேரும் முன் காஞ்சியில் வாழ்ந்த திரையர்க்கு இவ்விளந்திரையனே தலைவன். இத்திரையர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழர்களுக்கு அடங்கி வாழ்ந்தவர் ஆவார்கள். காஞ்சியைக் குறிப்பிட்ட சிலப்பதிகாரம் எந்த வகையிலும் பல்லவ மன்னர்களைக் குறிப்பிடவில்லை. இதனால் சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்திற்குப் பின்னரே பல்லவர்கள் காஞ்சியில் குடியேறி இருக்க வேண்டும். இதனால் சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கூறுகின்றனர்.

சேரன் செங்குட்டுவன் காலம்[தொகு]
சேரன் செங்குட்டுவனின் மனைவி வேண்மாள் என சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இவளை இளங்கோ வேண்மாள் என்பதும் பொருந்தும். பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தில் செங்குட்டுவனுக்கு குட்டுவன் சேரல் என்ற மகன் இருந்தான் எனவும் அம்மகன் சங்கப்புலவருள் ஒருவரான பரணருக்கு பிற பரிசில்களோடு ஒரு பரிசிலாகக் கொடுக்கப்படான் எனவும் அறியலாகிறது. அக நானூற்றில் அறியலாகும் சேரன் செங்குட்டுவனின் தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இறந்திருக்க வேண்டும். இமய வரம்பனுக்கு இரு தேவியரும் நான்கு பிள்ளைகளும் இருந்தனர். அவர்களுள் ஒருவனான செங்குட்டுவனே இமயவரம்பனுக்குப் பின் அரசக்கட்டிலேறினான். உடன் பிறந்தவரான இளங்கோவடிகள் துறவு பூண்டார். எஞ்சிய இரு புதல்வருள் ஒருவனான நார்முடிச்சேரல் நன்றாக் குன்றத்தின் அருகில் உள்ள கொங்கு நாட்டின் வட பகுதியை ஆண்டு வந்தான். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் குட்ட நாட்டுக்கு அரசனானான். இவர்கள் இருவரும் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட சேரன் செங்குட்டுவன் ஆணைவழி ஆட்சி புரிந்தனர்.

கயவாகு காலம்[தொகு]
இலங்கை வேந்தன் கயவாகு பத்தினிக் கடவுள் பிரதிட்டிக்கப்பட்ட காலத்தில் வஞ்சியில் உடன் இருந்தான் என சிலம்பு கூறுகிறது. கயவாகு கி.பி. 171- ஆம் ஆண்டு பட்டத்திற்கு வந்தவன். அவன் அரசுக் கட்டில் ஏறிய பிறகே இலங்கையை விட்டு தமிழகம் வந்திருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் இடையீடு பட்டவர்களாக மகாவம்சத்தில் கூறும் கயவாகுக்களுள் முதல்கயவாகுவே வரந்தரு காதையில் கூறிய இலங்கை வேந்தன் எனவும் அவ்வேந்தனே செங்குட்டுவனால் பத்தினிக் கடவுட்காக எடுக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்டான் எனவும் கூறுகின்றனர். டாக்டர். வில்ஹெம்கெய்கர் என்னும் அறிஞர் தான் மொழிபெயர்த்த மஹாவமிசத்தின் முகவுரையில் இலங்கை வேந்தர் அடுத்தடுத்து ஆண்ட காலங்களையும் அவர்தம் பெயர்களையும் புத்தராண்டிலும் கிறித்துவ ஆண்டிலும் குறிப்பிட்டுள்ளார். அவர் காட்டிய இலங்கைத் தொல்வேந்தருள் கி. பி. 171-173 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி புரிந்த நாற்பத்தாறாம் வேந்தன் என கயவாகுவைக் குறித்துள்ளார். இவனே சிலப்பதிகாரம் கூறிய கயவாகு எனும் பெயரிய இலங்கை வேந்தனாவான்.இதனால் சிலப்பதிகாரக் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு எனலாம்.

சிலப்பதிகாரக் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு (வானியல் கணிப்பு)[தொகு]
கோவலனும் கண்னகியும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்பட்ட காலம் பற்றியும், மதுரை எரியுண்ட காலம் பற்றியும் வரும் சோதிடக் குறிப்புகள் கொண்டு நோக்கின் கி. பி. 756 ஆகிய ஓராண்டே நன்கு பொருந்தும் என்பது திவான் பகதூர் சுவாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் கருத்து ( An Indian Ephemeris, VoL-1,pt-1, app.iii) இதனால் சிலப்பதிகாரம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றியது எனபது கருத்து.

சிலப்பதிகார காலத்தை வானியல் நெறியில் கணித்த நெறி துல்லியமாயினும், அவர் கொண்ட பாடத்தில் பிழை நேர வாய்ப்பு உண்டு. மேலும் அக்காலப் பல்லவர்கள் பற்றிய கருத்து இரட்டைக் காப்பியங்களில் இல்லை. எனவே ஒப்புமை வரலாற்றோடு பொருத்திக் கணிக்கப்பட்ட கயவாகு மன்னனின் கி. பி. 117 கண்ணகிக்குக் கல் நட்ட காலம் என்றும், அடுத்த வாழ்நாள் காலம் மணிமேகலை காலம் என்றும், இளங்கோவின் சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்றும் தெளிவாக உணரமுடிகிறது.

சிலப்பதிகாரம் சங்க நூல் அன்று என்ற கருத்து[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
சிலப்பதிகார நூலில் பரத நாட்டியக் கருத்துக்கள் மிகுதியாக வந்துள்ளன.. மயமதம், கரவடநூல் முதலிய வட நூல்களும் ஆளப்படுகின்றன. வடமொழிப் பஞ்ச தந்திரத்தின் ஒரு கதையும்( கீரிப்பிள்லையைக் கொன்ற பிராமணியைக் குறித்தது இக்கதை. இவளுக்கு கோவலன் பொருளளித்து, தானம் செய்து, இவளைக் கணவனுடன் கூட்டி நல்வழிப்படுத்தினானம்) ஒரு சுலோகமும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் நான்மணிக்கடிகை,பழமொழி, ஆசாரக்கோவை முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் எடுத்தாளப்படுகின்றன.

இலக்கணம்[தொகு]
இந்நூலில் முன்னிலைப்பன்மையாகைய 'நீர்' என்ற சொல்லும் தன்மையொருமையாகிய ' நான்' என்ற சொல்லும் (செங்குட்டுவற்குக் கண்ணகி கூற்று; தேவந்தி சொல்; காவற்பெண்டு சொல்; அடித்தோழி சொல்)இந்த என்ற சுட்டுச் சொல்லும்; அறிகுவன், போக்குவன், உறுவன் என எதிர்காலத்துத் தன்மையொருமையில் வரும் அன் விகுதி முதலிய பிற்காலத்து வழக்குகளும் வந்துள்ளன. அன் ஈறு தமது காலத்து வழக்கென இளம்பூரனார் குறிப்பிடுகிறார்.

பிற்காலப் பெயர்கள்[தொகு]
சிலப்பதிகாரத்தில் வங்க தேசத்தினரை பங்களர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிற்காலப் பெயராகும். மேலும் பக்கம், வாரம், திதி முதலியனவும், திரையல், அடைக்காய் முதலிய பிற்காலத்து நுகர்ச்சிப் பொருள்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நோக்குங்கால் சிலப்பதிகாரம் சங்க நூல் அன்று என்பது உறுதியாகிறது என்பர். இந்நூலின் கண் மிகுதியாக ஆளப்படுகின்ற வடமொழிச் சொற்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.

"சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்திலொளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்...
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருண்முனி" ( சிலம்பு.10.180-187)
என வரும் அடிகள் இவற்றை உணர்த்தும். சங்க கால நூல்களில் இவை போன்ற சொற்கள் வரும் என நினைக்கவும் கூடவில்லை.

தமிழிலக்கிய வரலாறு[தொகு]
சங்க காலத்துச் செய்யுள்கள் தனித் தனியாகத் தோன்றிப் பின்னர் தொகையாகவும் பாட்டாகவும் தொகுக்கப்பட்டன. அதன் பின்னர் நாட்டிலே ஜைன சமயம், வைதீகச் சமயம் என்ற இருவகைக் கிளர்ச்சிகள் தோன்றின. இக்காலத்தே பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றலாயின. பக்தி இலக்கியங்களும் எழுந்தன. வடமொழியும் தமிழும் கலந்து உறவாடின. இதன் பயனாய் காவிய காலம் தோன்றியது. உதயணன் பெருங்கதை, மணிமேகலை, சிந்தாமணி முதலியன இக்காலப் பகுதியில் தோன்றியனவே. இம்மூன்றிலும் காப்பியம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. பொதுவாக இலக்கிய வரலாற்றில் ஒரு காலத்தே எழுந்த நூல்கள் அமைப்பு-நெறியில் ஒரு தன்மையவாய் அமைதல் இயற்கையாகும். ஆகவே, சிலப்பதிகாரமும் இப்பிற்காலப்பகுதியைச் சார்ந்தது என்றே ஊகிக்கலாம்.

ஊழ்வினை நம்பிக்கைகள்[தொகு]

ஒழுக்கத்தை வற்புறுத்தி வந்த ஜைன சமயத்தினர் நாளடைவில் சமயத் தத்துவங்களை பாராட்ட ஆரம்பித்தனர். அவற்றுள் கருமம் பற்றிய கொள்கைகளை ஆழ்ந்து நூல் எழுதத் தொடங்கினர். வடநாட்டிற் பிறந்த ஜாதகக் கதைகளை முன்மாதிரியாகக் கொண்டு நூல் அமையலாயிற்று.முற்பிறவியில் நிகழ்ந்த கருமங்களின் விளைவே அடுத்த பிறவியின் நிகழ்ச்சிகளாகும் என்ற கொள்கை தமிழகத்தில் சம்பந்தர் போன்றோர் காலத்திற்குப் பிறகு நுட்பமாகச் செய்யப்பட்டன. சிலப்பதிகார வரலாறும் இந்நெறியைப் பின்பற்றுகிறது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதூஉம்' எனப் பதிகத்தில் குறிப்பிடுவதோடு.

வினை விளை காலமாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி ( XVI. 148-149)
எனவும்

உம்மை வினைவந் துருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது (XXIII..171-172)
எனவும் வினையின் இயல்பை வற்புறுத்திக் கூறுதல் காணலாம். மேலும் கோவலன் முதலியவர்களது துன்ப நுகர்ச்சிக்குக் காரணமாக , அவர்களது முற்பிறப்பு வரலாறு கூறப்படுகிறது. இவ்வகைப் பிறப்பு வரலாறுகள் சங்க காலத்து வழஙகியவனவாகத் தெரியவில்லை. இதனை நோக்குமிடத்தும் இது சங்க கால நூல் இல்லை என்பது தெளிவு.

பத்தினி வழிபாடு[தொகு]
இந்நூல் பத்தினிக் கடவுள் வழிபாடு தமிழ் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஏற்பட்டிருக்க வேண்டும். இறுதியிலுள்ள வஞ்சிக்காண்டம் முழுவதும் பத்தினி வழிபாட்டையே தலைமைப் பொருளாகக் கொண்டுள்ளது. இப்பத்தினி வழிபாடு எப்பொழுது தோன்றியது என்பதற்கு சான்றுகள் இல்லை. ஆனால் சங்க காலத்திலோ ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலோ கூட சான்று காணப்படவில்லை. ஆனால் சக்தி வழிபாடும் அவை பற்றிய நூல்களும் தோன்றிய காலம் கி. பி. 500 முதல் 900 வரை என்பர். (An Outline of the Religious Literature or India. O.U.P) இதனை நோக்கினும் சிலப்பதிகாரம் சங்க நூலன்று எனலாம்.

சமுதாய நிலை[தொகு]
சிலப்பதிகாரதில் விளங்கும் நாட்டிய நிலையும், இசையின் நிலையும், கணிகையர் நிலையும் பிறவும் இக்காலத்துச் சமுதாயம் நாகரீகச் சுழற்சியில் மூழ்கி மகிழ்ச்சியில் திளைத்திருந்தமையைத் தெரிவிக்கின்றன. இவைகளுக்கும் சங்க காலத்துச் சமுதாயத்தில் புலப்படும் எளிமை, நேர்மை, வீரம், காதல் முதலியவற்றுக்கும் வெகு தூரம். எனவே, சங்க இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட சமய, சமுதாய நிலையுமே சிலப்பதிகாரத்தில் வெளிப்படுகின்றன எனலாம்.

உசாத்துணை[தொகு]
ஆர்.கே.சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946
வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946
எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை. புதுமலர் நிலையம் வெளியீடு- 1946