Posts

Showing posts with the label MAHARAJAS

LIVES OF MAHARAJAS DURING BRITISH PERIOD

Image
LIVES OF MAHARAJAS DURING BRITISH PERIOD கொக்கரக்கோ...கோ என சேவல் சாதகம் பண்ணும் அதிகாலையில் ஒரு மகாராஜா என்ன செய்துகொண்டிருப்பார்? சூரிய நமஸ்காரம், யோகா, உடற்பயிற்சி... சேச்சே, ஏதோ ஒன்று இரண்டு 'உத்தம’ மகாராஜாக்கள் அப்படி வேண்டாத வேலை செய்திருக்கலாம். அசல் ஐ.எஸ்.ஓ-9001 மகாராஜா எனப்படுபவர், அந்த நேரம் குப்புறப்படுத்து, குதூகலமாகத் தூங்கிக் கொண்டிருப்பார் அல்லது நள்ளிரவு எல்லாம் குடித்துக் கொட்டமடித்துவிட்டு அப்போதுதான் தூங்கவே ஆரம்பித்திருப்பார்.  பஞ்சாபின் ஜிந்த் சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா ரன்பிர் சிங் ராஜேந்திர பகதூர் இரண்டாம் வகை. விடிய விடிய முடிந்தவரை குஜால் கூத்தடித்துவிட்டு, விடியலில்தான் படுக்கையில் விழுவார். ஆனால், அவர் தூங்க ஆரம்பித்த நேரத்தில் இருந்து பணியாளர்களுக்கு கிலி பிடித்துவிடும். எப்போது எழுவார் எனத் தெரியாது. எழும் நேரத்தில் இன்னென்ன விஷயங்கள் இம்மி பிசகாமல் சரியாக இருக்க வேண்டும் என்பது ராஜ கட்டளை. என்னென்ன? குறிப்பிட்ட பணிப் பெண்கள், குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து பதமாக அவரது கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பணிப்...

THE LIVES OF SEVERAL MAHARAJAS,WIFES,AND CONCUBINES

Image
THE LIVES OF SEVERAL  MAHARAJAS,WIFES,AND CONCUBINES 'அகம், புறம் , அந்தப்புரம்'  நம்மவர்க்கு எப்பொழுதுமே அந்தப்புரம் என்ற வார்த்தையில் ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது :) . எப்பொழுதுமே பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களும் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் , வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம். 'அகம்,புறம், அந்தப்புரம்' - குமுதம் ரிப்போட்டரில் இரண்டு வருடங்கள் தொடராக வந்தது. எழுதியவர் முகில் . நானும் இந்த புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இப்பொழுதான் படிக்க நேரம் கிடைத்தது. நமக்கு எப்பொழுதுமே ராஜா கதைகள் என்றாலே ஒரு ஈர்ப்பு உண்டு. பாட்டி சொல்லும் ராஜா கதைகள் வீரதீர சாகச கதைகளாகவோ அல்லது நீதிக் கதைகளாகவோ இருக்கும். பத்தாம் வகுப்பு பாடத்தில் statistics ஆகவும், அசோகர் மரம் நட்டார் , குளம் வெட்டினார் என்றும் இருக்கும். அதையும் தாண்டி ராஜாக்களை பற்றி நாம் அறிய முடிந்ததில்லை. அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது அதில் அவர்கள் எப்பட...