மலேசியாவில் போராடிய தஞ்சை தமிழன் ! இவர்தான்உண்மையான "கபாலி"
மலேசியாவில் போராடிய தஞ்சை தமிழன் ! இவர்தான்உண்மையான "கபாலி" எஸ்.ஏ.கணபதி அல்லது (பிறப்பு:1912 – இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். இவர் மலேசியாவில் இந்திய மக்களுகாக போராடியதை தான் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் காட்டியுள்ளனர் எஸ். ஏ. கணபதி யார் ? எஸ். ஏ. கணபதி தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர் வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார். ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் தற்காலிக சுதந்திர அரசாங்கத்தைஇந்திய தேசிய ராணுவத்தினர் (Indian National Army) நடத்தி வந்தனர். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாக...