.Treachery -PUTHUMAI PITHAN
துரோகம் புதுமை பித்தன் ஜூஸ்?’ என்றான் ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு. ’வேண்டாம்’ என்றான் வேணு ‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம் செல்லமாகக் கடிந்து aathavanகொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வேணுவின் சம்மதத்துக்குக் காத்திராமல் அவனாகவே ஆர்டர் செய்தான். ‘இரண்டு பிளேட் இட்டிலி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வெயிட்டர் அதுவரை சொல்லப்பட்டவற்றையெல்லாம் ஒரு முறை திருப்பிச் சொன்னான். ‘கரெக்ட். ஜூஸ் முதலில்.’ ’பிற்பாடு’ என்றான் வேணு. ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். ‘யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதையெழுத முடியாது; இல்லை?’ என்றான். வேணு; வெறுமனே புன்னகை. ‘இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?’ ’ஒரு குறு நாவல்’ ‘அபௌட் வாட்?’ ‘ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய மச்சினிக்குமிடையே இருக்கிற அஃபேர் பத்தி…’ ‘ஹோப் இட் இஸ் நாட் ஆட்டோபயாகிராஃபிகல்.’ ‘எனக்கு மச்சினியே கிடையாது.’ ‘ஓ! a wish ...