Posts

Showing posts with the label VANNATHIRAI

VANNATHIRAI ,READERS REVIEW

Image
VANNATHIRAI ,READERS REVIEW வண்ணத்திரை - வாசிப்பனுபவம் ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தன் வாசகர்கள் யார்? அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டும்? அவர்கள் எதிர்பார்ப்பு என்ன? என்கிற தெளிவு. இதில் தெளிவாக இல்லையெனில் பத்திரிக்கை அதுவாகவே பொல்லையாகிரும். சிறுபத்திரிக்கையாக இருந்தாலும். இலக்கியப்பத்திரிக்கையில் நடுப்பக்க கவர்ச்சிப்படம் போடுவதோ அல்லது சினிமா எக்ஸ்ப்ரெசில் சமூக அவலங்களை சாடுவதோ நேர்மையான செயலாக கருதலாம்தான். ஆனால் வாங்கிப்படிக்கும் வாசகனுக்கு அது நேர்மையாக விற்கப்பட்ட பொருளல்ல. இந்த தெளிவு குழப்பதின் உச்சியில்தான் பெரிய பெரிய பத்திரிக்கைகளே இன்றைக்கு திணறிக்கொண்டு இருக்கின்றன. விகடனைப்படித்தால் சினிமா எக்ஸ்பிரஸ் படித்த கடுப்பு. குமுதத்தை புரட்டி முடிக்கையில் விளம்பர கேட்டலாக் படிக்கும் வெறுமை. இவையிரண்டுக்கும் நடுவில் இருக்கும் கேப்புல கல்லா கட்டிறமுடியுமான்னு ரெண்டுசைடு கண்டெட்டுகளை ஒப்பேத்தி இரண்டுங்கெட்டான் நகலாக நிற்கும் குங்குமம். பெரிய பத்திரிக்கைகளே இப்படி தனக்கென இருந்த அடையாளங்களை இழந்து தமக்கும் வாசகர்களுக்கும் இருந்த பிணைப்பை அலட்சியப்...