LAL BAHADUR SHASTRY , FREEDOM FIGHTER AND STATESMAN BORN 1904 OCTOBER 2 - 1966 JANUARY 11
LAL BAHADUR SHASTRY , FREEDOM FIGHTER AND STATESMAN BORN 1904 OCTOBER 2 - 1966 JANUARY 11 இந்த அக்டோபர் 2ம் தேதியன்று தேசம் காந்தியினை வணங்கும், காமராஜரை நினைத்து கண்ணீர் சிந்தும். ஆனால் இந்த வரிசையில் வணங்கவேண்டிய பாரத முனிவர் ஒருவர் உண்டு அவர் வாழ்க்கையும், அவர் மரணமும் ஏன் அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்கானது. லால் பகதூர் சாஸ்திரி. இந்திய வரலாற்றில் எளிமைக்கும் நாட்டுபற்றிற்கும் தியாகத்திற்கும் பெரும் எடுத்துகாட்டனா மனிதர். அவர் வாழ்வினை படித்தால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், அந்த மனிதனை தேடிபிடித்து கட்டி அழ தோன்றும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றான் அந்த மாமனிதன். காமராஜர் போலவே அவரும் நம்ப முடியாத அதிசயம். அப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருக்கின்றான், ஆண்டிருக்கின்றான் என்பதில் நிச்சயம் கண்ணீரை துடைத்துவிட்டு பெருமை கொள்ளவேண்டும். அவர் பிறந்தது மகா ஏழ்மையான குடும்பம், ஆனாலும் கல்விக்காக போராடினார். கங்கையின் கிளைநதியினை நீந்தி கடந்தே பள்ளிக்கு சென்றார். புத்தகம் வாங்க பணமில்லா நிலையில் நண்பனின் புத்தகத்தை இரவல் வாங்கி அதையும் தெ...