Glorious Revolution.1688
Glorious Revolution . 1688 மாண்புமிகு புரட்சி அல்லது 1688 ஆம் ஆண்டுப் புரட்சி என்பது 1688 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சியாகும். இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மற்றும் அயர்லாந்தின் இரண்டாம் ஜேம்சு) மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்ட பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் அம்மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றி, டச்சுப் பிரதேச ஆட்சியாளரான (Stadtholder) மூன்றாம் வில்லியத்தையும் அவரது மனைவியும் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின் மகளுமான இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும் ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.[1] இறுதியில் வெற்றிபெற்ற பாராளுமன்றத்தினரால் உருவாக்கப்பட்ட உரிமைகள் மனு (Bill of Rights) எனும் ஒப்பந்தப் பத்திரத்தில் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் கையெழுத்திட்டதன் மூலம் புதிதாக இங்கிலாந்தில் அரசியலமைப்பு முடியாட்சி ஆரம்பமானது. 1685 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினைப் பின்பற்றினர். எனி...